எப்போ விற்பனைக்கு வருமோனு காத்திருந்திருப்பாங்க போல! போன 3ம் தேதி அறிமுகமான காரை வீட்டிற்கு எடுத்து வந்த நடிகை
எப்போ விற்பனைக்கு வரும்னு காத்திருந்திருப்பாங்க போல... இந்த மாசம் 3ம் தேதி-தான் இந்த ஆடம்பர கார் அறிமுகமாச்சு, அதுக்குள்ள வீட்டு வாசலுக்குக் கொண்டு வந்த பிரபல நடிகை. இந்தக் காரோட விலை எவ்ளோனு தெரிஞ்சா இன்னும் ஆச்சரியப்படுவீங்க. வாங்க இதுகுறித்த முக்கிய விபரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஆடி நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாக க்யூ7 சொகுசு கார் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்தியாவில் ரூ. 79.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து இந்த ஆடம்பர கார் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் உயர்நிலை வேரியண்ட் இன்னும் சில லட்சங்கள் கூடுதல் விலையுடன் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்தகைய உச்சபட்ச விலைக் கொண்ட கார் மாடலின் உயர் நிலை வேரியண்டை பிரபல நடிகை ஒருவர் தற்போது வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த நடிகை ஆதியா ஷெட்டி இவரே ஆடி க்யூ7 ஆடம்பர காரை வாங்கியவர் ஆவார். இவர் க்யூ7 சொகுசு காரின் உயர் நிலை தேர்வை வாங்கியிருக்கின்றார்.

அதன் விலை ரூ. 88.33 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. நவர்ரா ப்ளூ (Navarra Blue) பெயிண்ட் ஸ்கீமிலான க்யூ7 ஆடம்பர வாகனத்தையே அவர் வாங்கியிருக்கின்றார். தன்னுடைய இந்த கார் கொள்முதல் குறித்த தகவலை நடிகையே அவரது இன்ஸ்டா பதிவின் வாயிலாக அவரது ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கின்றார். இந்த உச்சபட்ச விலையில் அவர் கார் வாங்கியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

29 வயதே ஆன இந்த இளம் நடிகை பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். இவர்களிடத்தில் ஏற்கனவே எண்ணற்ற சொகுசு கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையிலேயே புதியதாக அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஆடி க்யூ7 55 டிஎஃப்எஸ்ஐ க்யூ டெக் (Q7 55 TFSI Q Tech) வேரியண்டை அவர் வாங்கியிருக்கின்றார்.

ஆடி க்யூ7 சொகுசு கார் இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதே விற்பனைக்கு வந்திருக்கின்றது. பிப்ரவரி 3ம் தேதியே இதன் அதிகாரப்பூர்வ மறு-அறிமுகம் இந்தியாவில் அரங்கேறியது. புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதி காரணமாக இக்கார் சந்தையை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தகுந்தது.

புதிய 2022 ஆடி க்யூ7 சொகுசு காரில் 3.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ (TFSI) வி6 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 8 ஸ்பீடு டிப்ட்ரானிக் கியர்பாக்ஸ் (Tiptronic gearbox) மற்றும் குவாட்ரோ அனைத்து வீல் இயக்கம் சிஸ்டம் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்காக 48 வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இது லித்தியம் அயன் பேட்டரியால் இயங்கும். இந்த இரண்டும் சேர்ந்து க்யூ7 சொகுசு காரை மிகவும் சூப்பரான மைலேஜ் தரும் காராக மாற்றியிருக்கின்றது.

ஆடி க்யூ7 சொகுசு கார் வெறும் 5.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் பயணிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இப்புதிய காரின் வருகை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்7, வால்வோ எக்ஸ்சி90 மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஆகிய கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

2022 ஆடி க்யூ7 புதிய தோற்றத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகையால், பழைய க்யூ7-க்கும், புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் க்யூ7-க்கும் இடையில் மிகப் பெரியளவு வித்தியாசம் தென்படுகின்றது. உள் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முன் பக்கத்தில் உள்ள க்ரில் உள்ளது.

பெரிய உருவத்துடன் அது காட்சியளிக்கின்றது. அகலமான குரோம் ஸ்லேட்டுகளினால் க்ரில் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றுடன், புதிய எல்இடி ஹெட்லைட், எச்டி மேட்ரிக்ஸ் ரக எல்இடி தொழில்நுட்பத்திலான ஆடி லேசர் லைட் உள்ளிட்டவையும் அக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

இதுதவிர, பெரிய ஏர் இன்டேக்குகள், புதிய அலாய் வீல்கள், புதிய மெல்லிய இழை போன்ற வால் பகுதி மின் விளக்குகள் மற்றும் ஷார்பான பம்பர்கள் உள்ளிட்டவையும் க்யூ7 சொகுசு காரில் இடம் பெற்றிருக்கின்றன. மேலும், சூப்பர் பிரீமியம் தர அம்சங்களாக அட்வான்ஸ்ட் எல்டிஇ இணைப்பு, ஒய்-ஃபை ஹாட் ஸ்பாட், நேச்சுரல் வாய்ஸ் கன்ட்ரோல் மற்றும் எக்ஸ்டென்சீவ் ஆடி கன்னெக்ட் வசதி உள்ளிட்டவையும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








