சொகுசு காருனா அது இதுதாங்க... வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்களுடன் ஆடி ஏ8 எல் கார் அறிமுகம்!

ஆடி (Audi) நிறுவனம் அதன் ஃபேஸ்லிஃப்ட் ஏ8 எல் (A8 L) சொகுசு செடான் ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சொகுசு காருனா அது இதுதாங்க... வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்களுடன் ஆடி ஏ8 எல் கார் அறிமுகம்!

உலக சொகுசு புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி (Audi), அதன் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷன் ஏ8 எல் (A8 L) சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். அதிக ஆடம்பர வசதிகள் கொண்ட செடான் ரக கார் இது. இக்காருக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ஆடி நிறுவனம் அதனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது.

சொகுசு காருனா அது இதுதாங்க... வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்களுடன் ஆடி ஏ8 எல் கார் அறிமுகம்!

இரு விதமான வேரியண்டுகளில் ஏ8 எல் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும். செலபிரேசன் எடிசன் (Celebration Edition) மற்றும் தொழில்நுட்பம் (Technology) ஆகிய இரு விதமான தேர்வுகளிலேயே அது கிடைக்க இருக்கின்றது. இக்காரின் வருகையை முன்னிட்டு ஏற்கனவே புக்கிங்களை ஆடி நிறுவனம் இந்தியாவில் தொடங்கிவிட்டது. ஆன்லைன் மற்றும் ஆடி சொகுசு கார் விற்பனையாளர்கள் வாயிலாக அப்பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ரூ. 10 லட்சம் முன்தொகையில் புக்கிங்கள் ஏற்கப்பட்டு வருகின்றன.

சொகுசு காருனா அது இதுதாங்க... வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்களுடன் ஆடி ஏ8 எல் கார் அறிமுகம்!

இந்த நிலையிலேயே நேற்றிரவு (ஜூலை 12) ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஏ8 எல் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. புதுப்பித்தலின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்களை ஏ8 எல் காரில் ஆடி நிறுவனம் செய்திருக்கின்றது. இதனால், முன்பைக் காட்டிலும் அதிக ஷார்பான ஸ்டைல், அட்வான்ஸ்ட் தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றைக் கொண்ட சொகுசு காராக அது காட்சியளிக்கின்றது.

சொகுசு காருனா அது இதுதாங்க... வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்களுடன் ஆடி ஏ8 எல் கார் அறிமுகம்!

குறிப்பாக காரின் முகப்பகுதிக்கு புதிய தோற்றம் வழங்க வேண்டும் என்பதற்காக மறு வடிவமைப்பு செய்யப்பட்ட டிஜிட்டல் மேட்ரிக்ஸ் ரக எல்இடி ஹெட்லேம்ப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, புதிய தோற்றம் கொண்ட க்ரில் மற்றும் பம்பர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமில்லைங்க காரின் பின் பக்க டிசைனிலும் ஆடி கை வைத்திருக்கின்றது.

சொகுசு காருனா அது இதுதாங்க... வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்களுடன் ஆடி ஏ8 எல் கார் அறிமுகம்!

பட்டையான தோற்றம் கொண்ட எல்இடி லைட் பார் பின் பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த எல்இடி பார் டெயில் லைட்டுகளை இணைக்கும் வகையில் பின் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இது காரின் பின் பக்கத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் உள்ளது. நிச்சயம் அதிக அழகான சொகுசு காரை விரும்புவோர்களை இந்த ஆடி ஏ8 எல் கவர்ந்திழுக்கும்.

சொகுசு காருனா அது இதுதாங்க... வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்களுடன் ஆடி ஏ8 எல் கார் அறிமுகம்!

இதற்கான அனைத்து சிறப்புகளையும் தாங்கிய வாகனமாகவே ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஏ8 எல் உருவாகியிருக்கின்றது. வெளிப்புறத்தைப் போலவே காரின் உட்புறத்திலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது விற்பனையில் இருக்கும் ஆடி ஏ8 எல் காரில் வழங்கப்பட்டிருக்கும் அதே 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமே ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனிலும் வழங்கப்பட்டிருக்கின்றது.

சொகுசு காருனா அது இதுதாங்க... வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்களுடன் ஆடி ஏ8 எல் கார் அறிமுகம்!

இத்துடன், 8.6 அங்குல வளைவான திரை ஒன்றும் வழங்கப்பட்டிருக்கின்றது. இது க்ளைமேட்டைக் கன்ட்ரோல் செய்ய மற்றும் இருக்கைகளின் பொசிஷனை மாற்றியமைக்க உதவியாக இருக்கும். இதுதவிர இன்னும் இரு திரை10.1 அங்குல அளவில் வழங்கப்பட்டுள்ளன. அவை பின்னிருக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டிருக்கின்றன.

சொகுசு காருனா அது இதுதாங்க... வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்களுடன் ஆடி ஏ8 எல் கார் அறிமுகம்!

இந்த காரில் வழங்கப்பட்டிருக்கும் 10.1 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரையில் அப்டேட் செய்யப்பட்ட எம்ஐபி3 சாஃப்ட்வேர் வழங்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பமும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இது எரிபொருள் சிக்கனத்தை வழங்க உதவும். 48 வோல்ட் திறன் கொண்டதே இந்த தொழில்நுட்பம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சொகுசு காருனா அது இதுதாங்க... வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்களுடன் ஆடி ஏ8 எல் கார் அறிமுகம்!

ஆடி நிறுவனம் 340 பிஎஸ்3 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரையே இந்த மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் சேர்த்து வழங்கியிருக்கின்றது. இந்த மோட்டாரும், மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பமும் இணைந்து 340 எச்பி பவரை வெளியேற்றும். இந்த சூப்பரான பவர் காரை வெறும் 5.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டச் செய்யும்.

சொகுசு காருனா அது இதுதாங்க... வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்களுடன் ஆடி ஏ8 எல் கார் அறிமுகம்!

இத்தகைய சூப்பரான திறன் கொண்ட சொகுசு காரையே இரு விதமான தேர்வுகளில் கிடைக்கும் வகையில் ஆடி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இவற்றின் விலை விபரம்:

  • ஆடி ஏ8 எல் செலபிரேஷன் எடிசன் (Audi A8 L Celebration Edition) - விலை: ரூ. 1.29 கோடி
  • ஆடி ஏ8 எல் டெக்னாலஜி (Audi A8 L Celebration Edition) - விலை: ரூ. 1.57 கோடி
  • இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

    சொகுசு காருனா அது இதுதாங்க... வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்களுடன் ஆடி ஏ8 எல் கார் அறிமுகம்!

    சொகுசு காரில் கூடுதல் சிறப்பு வசதிகளாக ரியர் கன்சோலில் பன்முக அம்சங்களைக் கன்ட்ரோல் செய்யக் கூடிய பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பொத்தான்கள் வாயிலாக க்ளைமேட்டை, இருக்கையின் வென்டிலேஷன் அமைப்பை, மசாஜ் செய்யும் கருவியின் வேகத்தை கூட்டுதல், குறைத்தல் போன்ற கன்ட்ரோல்களை செய்ய முடியும்.

    சொகுசு காருனா அது இதுதாங்க... வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர அம்சங்களுடன் ஆடி ஏ8 எல் கார் அறிமுகம்!

    இதேபோல், லைட்டுகள், மீடியா மற்றும் ஃபெர்ஃப்யூம் ஆகியவற்றையும் கன்ட்ரோல் செய்ய முடியும். இதுதவிர, ஆடி ஏ8 எல் சொகுசு காரில் ஹெட்ஸ்-அப் திரை, 23 ஸ்பீக்கர்கள், 3டி சரவுண்ட் சிஸ்டம், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, பார்க் அசிஸ்டம், 8 ஏர் பேக்குகள், பவர் டூர், ஒயர்லெஸ் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப், சி டைப் யுஎஸ்பி சார்ஜர் மற்றும் ஆடியின் கூல் பாக்ஸ் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பு: உதாரணத்திற்காக 2021 வெர்ஷன் ஆடி ஏ8 எல் படங்கள் இந்த பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 13, 2022, 6:47 [IST]
English summary
Audi facelift a8 l launched in india at rs 1 29 crores
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+