திடீரென லோகோவை மாற்றிய ஆடி கார் நிறுவனம்... இவ்வளவு பாரம்பரியமான லோகோவ ஏன் மாத்துனாங்க தெரியுமா?
ஆடி நிறுவனம் தனது பாரம்பரியமான 4 ரிங் லோகோவை சமீபத்தில் மாற்றியமைத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
உலகம் முழுவதும் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்களுக்கென தனி லோகோவை வைத்திருக்கின்றனர். ஒரு நிறுவனத்தின் அடையாளமாக அந்த லோகோ திகழ்கிறது. ஒவ்வொரு கார் தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஒரு லோகோ இருக்கும்.

ஒரு நிறுவனத்தின் லோகோவும் உலகம் முழுவதும் புகழ்பெற்றதாகும். மக்கள் அந்த நிறுவனத்தை நினைத்தாலே அந்த லோகா தான் அவர்கள் கண்ணில் தெரியும்.
இப்படிப்பட்ட ஒரு நிறுவனம் தான் ஆடி. இந்நிறுவனம் உலகம் முழுவதும் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இந்நிறுவனம் 4 தனித்தனி நிறுவனங்களை ஒன்றாகச் சேர்த்து 1932ம் ஆண்டு ஆட்டோ யூனியனாக மாறியது. முதலில் இந்த பிரண்ட் AU என்றே அழைக்கப்பட்டது. பின்னர் 1965க்கு பிறகு இது ஆடி எனப் பெயர் மாற்றப்பட்டது. இந்நிறுவனம் 4 நிறுவனங்களின் கூட்டமைப்பு என்பதைப் பறைசாற்றும் விதமாக 4 வளையங்கள் வரிசையாக ஒன்றோடு ஒன்று சேர்ந்தது போல இதன் லோகோ உருவாக்கப்பட்டது.
இந்த லோகோ அவ்வப்போது சிறிய சிறிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. ஆனால் ஒட்டு மொத்த வடிவமைப்பில் பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்ததில்லை. இந்த முறையும் ஆடி நிறுவனம் தனது லோகோவில் சிறிய மாற்றங்களைச் செய்துள்ளது. தற்போது முழுவதுமாக க்ரோம் நிறத்தில் உள்ள லோகாவில் ஆடி நிறுவனம் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் சிறிய நிற மாற்றத்தை மட்டும் செய்துள்ளது.
ஆடி லோகாவில் உள்ள வளையத்தில் உட்புறம் வெள்ளை நிறமாகவும் அதைச் சுற்றி வெளிப்புறத்தில் ஒரு பார்டர் போலக் கருப்பு நிறத்தையும் கொடுத்துள்ளது. இந்த மாற்றம் செய்வதன் மூலம் தூரத்திலிருந்து இந்த காரை பார்த்தாலும் தெளிவாகத் தெரியும் படி இந்நிறுவனம் மாற்றத்தைச் செய்துள்ளது. இதுவே டார்க் நிற கார்களில் இதில் உள்ள வெள்ளை நிறம் அதில் டார்க் க்ரே நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது பார்க்க கிளாஸ் பிளாக் நிறத்தில் இருப்பதைப் போன்ற தோற்றம் கொடுக்கும்.
இதுபோக முக்கிய மாற்றமாக ஆடி நிறுவனம் தனது லோகோவில் புதிய அம்சமாக 2டி டிசைனை உருவாக்கியுள்ளது.இதுவரை அந்நிறுவனத்திடம் முறையான 2டி டிசைன் கிடையாது. இனி இதே டிசைனையே எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆடி நிறுவனம் தனது ஆடி என்ற எழுத்துக்கான ஃபான்டையும் உருவாக்கியுள்ளது.
இந்த ஃபான்டிலானால அடி என்ற எழுத்து வடிவிலா பிராண்ட் பெயரை இனி காருக்கு உள்ளேயும் வெளியேயும், காருக்கான விளம்பரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இடம் பெறும். இது போக இனி ஆடி கார்களில் பி-பில்லர் பகுதியில் லேசர் பிரிண்ட் செய்யப்பட்ட இந்த எழுத்து இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக புதிய லோகோ உடன் கூடிய கார் வரும் 2024ம் ஆண்டு ஆடி க்யூ 8 இ-ட்ரான் காரில் முதல் முதலாக இடம் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது விற்பனையாகப்போகும் கார்களில் பழைய லோகோவே தயாராகி விட்டதால் இனி வரும் கார்களில் மட்டும் புதிய லோகோ இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








