உடனே புக் பண்ணுங்க... 1ம் தேதி முதல் ஆடி கார்களின் விலை தாறுமாறா ஏறப்போகுது...

ஆடி இந்தியா நிறுவனம் தங்கள் கார்களுக்கான விலையை வரும் செப் 1ம் தேதி முதல் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

தயாரிப்பு செலவு அதிகரிப்பு மற்றும் சப்ளை செயின் செலவு அதிகரிப்பால் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

உடனே புக் பண்ணுங்க . . . 1ம் தேதி முதல் ஆடி கார்களின் விலை தாறுமாறா ஏறப்போகுது . . .

இந்தியாவின் சொகுசு கார்களை தயாரிப்பில் மிக முக்கியமான நிறுவனம் ஆடி. இந்நிறுவனம் தயாரித்து வெளியிடும் கார்களை வாங்க மார்கெட்டில் பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த கார்களை எல்லாம் மக்கள் அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கின்றனர்.ஆடி கார் வைத்திருந்தால் சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பவராகக் கருதுகின்றனர். இதனால் சமூகத்தில் தங்கள் அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள மக்கள் இந்த காரை அதிகம் விரும்பி வாங்குகின்றனர்.

உடனே புக் பண்ணுங்க . . . 1ம் தேதி முதல் ஆடி கார்களின் விலை தாறுமாறா ஏறப்போகுது . . .

ஜெர்மனைத் தலைமையிடமாகக் கொண்ட ஆடி நிறுவனம் இந்தியாவின் தனது தொழிலை ஆடி இந்தியா என்ற பெயரில் செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் கார்கள் எல்லாம் பிரிமியம் கார்களாக இருப்பதால் விலை அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அடி இந்தியா நிறுவனம் இந்தியாவில் தங்கள் கார்களுக்கான விலையை வரும் செப்டம்பர் மாதம் முதல் உயர்த்த முடிவு செய்துள்ளது.

உடனே புக் பண்ணுங்க . . . 1ம் தேதி முதல் ஆடி கார்களின் விலை தாறுமாறா ஏறப்போகுது . . .

இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் தனது கார்களகு்கான விலையை 3 சதவீதம் வரை உயர்த்திய நிலையில் தற்போது இந்தாண்டின் இரண்டாவது முறையாக வரும் செப்டம்பர் மாதம் முதல் தனது அனைத்து ரக கார்களின் விலையையும் 2.4 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

உடனே புக் பண்ணுங்க . . . 1ம் தேதி முதல் ஆடி கார்களின் விலை தாறுமாறா ஏறப்போகுது . . .

இது குறித்த ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பல்பீலர் சிங் தில்லான் கூறும் போது "இந்தியாவில் தொடர்ந்து சிறப்பான முறையில் ஆடிகார்களை விற்பனை செய்து வருகிறோம். தற்போது அதிகரித்து வரும் கார் தயாரிப்பு செலவு மற்றும் சப்ளை செயின செலவு அதிகரிப்பால் வரும் செப்டம்பர் மாதம் முதல் விலையை 2.4 சதவீதம் வரை அதிகரித்துள்ளோம்" என விளக்கமளித்தார்.

உடனே புக் பண்ணுங்க . . . 1ம் தேதி முதல் ஆடி கார்களின் விலை தாறுமாறா ஏறப்போகுது . . .

ஆடி நிறுவனம் இந்தியாவில் ஆடி ஏ4, ஏ6, ஏ8, க்யூ5, க்யூ7, க்யூ8, எஸ்5 ஸ்போர்ட் பேக், ஆர்எஸ்5 ஸ்போர்வ் பேக் மற்றும் ஆர்எஸ் க்யூ8 ஆகிய கார்களை கம்பஷன் இன்ஜின் கார்களாக விற்பனை செய்து வருகிறது. இதுபோல இ-ட்ரான், இ-ட்ரான் , இ-ட்ரான் ஸ்போர்ட்பேக், இ-ட்ரான் ஜிடி மற்றும் ஆர்எஸ் இட்ரான் ஜிடி ஆகிய எலெக்ட்ரிக் வாகனங்களையும் இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

உடனே புக் பண்ணுங்க . . . 1ம் தேதி முதல் ஆடி கார்களின் விலை தாறுமாறா ஏறப்போகுது . . .

இந்த எல்லா கார்களுக்கும் 2.4 சதவீதம் விலை அதிகமாகியுள்ளது. இந்தாண்டு கார் தயாரிப்பாளர்கள் பலர் விலையை உயர்த்தியுள்ளனர். அவர்கள் எல்லாரும் தயாரிப்பு செலவு அதிகமானதையே காரணமாகக் கூறியுள்ளது. குறிப்பாகச் சொகுசு கார்களின் விலை தாறுமாறாக ஏறியுள்ளது. ஆடி நிறுவனம் இந்தாண்டில் இரண்டு முறை விலையை ஏற்றியுள்ளது.

உடனே புக் பண்ணுங்க . . . 1ம் தேதி முதல் ஆடி கார்களின் விலை தாறுமாறா ஏறப்போகுது . . .

தற்போது செப்டம்பர் மாதமே விலையை ஏற்றியுள்ளதற்கு முக்கியமான காரணம் இந்தியாவில் பண்டிகை காலம் வந்துவிட்டது தீபாவளி உள்ளிட்ட முக்கியமான பண்டிகைகள் வரவுள்ளதால் பலர் இந்த காலத்தில் கார்களை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் இப்பொழுதே விலை உயர்த்தியுள்ளது.

உடனே புக் பண்ணுங்க . . . 1ம் தேதி முதல் ஆடி கார்களின் விலை தாறுமாறா ஏறப்போகுது . . .

ஆட்டோமொபைல் துறை இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் ஆண்டின் உட்சபட்ச விற்பனை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அதைக் கணக்கிட்டு அதிக லாபம் பெறம் நோக்கில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

Article Published On: Tuesday, August 23, 2022, 17:49 [IST]
English summary
Audi India plans to hike car prices across all models
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+