ஃபுல்லா சார்ஜ் ஏத்துனா சென்னை- ஊட்டி நிக்காம போகலாம்... இந்த காரோட விலை எவ்வளவு தெரியுமா?
அடி நிறுவனம் இந்தியாவில் தனது க்யூ8 இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரை விரைவில் அறிமுகப்படுத்தப்போவதாகத் தனது சமூகவலைத்தளம் மூலம் அறிவித்துள்ளது.
ஆடி நிறுவனம் சமீபத்தில் சர்வதேசச் சந்தையில் தனது இ-ட்ரான் குடும்பமான க்யூ8 இ-ட்ரான், க்யூ8 இ-ட்ரான் ஸ்போர்ட்பேக், எஸ்க்யூ8 இ-ட்ரான் மற்றும் எஸ்க்யூ இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் ஆகிய கார்களை அறிமுகப்படுத்தினர். இந்த கார்கள் மார்கெட்டில் ஏற்கனவே உள்ள இ-ட்ரான் காருக்கு பதிலாகக் களம் இறங்கவுள்ளது.

இந்த ஏற்கனவே மார்கெட்டில் உள்ள பிஎம்டபிள்யூ iX எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் விரைவில் வெளியாகவுள்ள ஈக்யூபி ஆகிய கார்களு்கு போட்டியாகக் களம் இறங்கவுள்ளது. இந்த கார் மொத்தம் மாடல்களில் வெளியாகவுள்ள நிலையில் மாடல்களிலும் டிசைன் மாற்றங்கள் உள்ளது. அதே போல பேட்டரி பேக்கும் புதிய பேட்டரி பேக்வுடன் ரேஞ்ச் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பழைய மாடலை விட இதில் கிரில் பகுதி டிசைன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் காரின் முழு அகலத்திற்கும் உள்ள எல்இடி பாரின் டிசைன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் க்யூ8 இ-ட்ரான் கார் முற்றிலும் எலெக்ட்ரிக் எஸ்யூவியாகவும், க்யூ8 இ-ட்ரான் ஸ்போர்ட்ஸ்பேக் கார் ஸ்வூப்பிங் ரூஃப் லைன்களுடன் கூபே வெர்ஷனாகவும் வருகிறது.
இந்த ஆடி க்யூ8 இ-ட்ரான் காரில் இதற்கு முந்தைய மாடலில் ரோஞ்சை பொருத்தவரை முழு சார்ஜில் 484 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருந்தது. தற்போது அது 585 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டதாக உயர்ந்துள்ளது. புதிய பேட்டரி பேக் தான் அதிக ரேஞ்சிற்கு காரணம் பழைய மாடலில் 64 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் இருந்தது. புதிய மாடல் காரில் 95 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த க்யூ8 இ-ட்ரான் எஸ்யூவி கார் 300 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 664 என்எம் டார்க் திறனைக் கொண்டது. இதில் ஸ்போர்ட்பேக் வெர்ஷன் கார் அதிக ரேஞ்சாக முழு சார்ஜில் 600 கி.மீ வரை பயணிக்கும் ரேஞ்சை கொண்டது.
அதே போல எஸ்க்யூ8 வெர்ஷனும் பெரிய பேட்டரி பேக் உடன் வருகிறது. இந்த கார் 370 கிலோ வாட் பவரையும் 973 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது முழு சார்ஜில் 513 கி.மீ வரை இயங்கும். அதாவது சென்னையில் சார்ஜ் போட்டால் அசால்டால் ஊட்டி வரை செல்ல முடியும். இந்த காரின் விலை குறித்த விபரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. எனினும் ரூ1.10 கோடி என்ற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








