வரும் தீபாவளிக்கு புதுசா ஆடி காரை வாங்க நினைப்பவர்கள் இதனை வாங்கலாம்!! க்யூ7 லிமிடெட் எடிசன் கார் அறிமுகம்!

ஆடி இந்தியா நிறுவனம் புதியதாக க்யூ7 சொகுசு எஸ்யூவி காரின் புதிய லிமிடெட் எடிசனை பண்டிகை காலத்தை முன்னிட்டு சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஆடி க்யூ7 கார் குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வரும் தீபாவளிக்கு புதுசா ஆடி காரை வாங்க நினைப்பவர்கள் இதனை வாங்கலாம்!! க்யூ7 லிமிடெட் எடிசன் கார் அறிமுகம்!

இந்தியாவில் நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நாளுக்கு நாள் நெருங்கி வருகிறது. பொதுவாகவே இந்தியர்கள் பண்டிகை நாட்களிலேயே புதிய கார்களை வாங்க விரும்புவர் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதனை பயன்படுத்தி கொள்ள புதிய புதிய கார்களை வருடத்தின் இரண்டாம் பாதியில் தான் களமிறக்குகின்றன.

வரும் தீபாவளிக்கு புதுசா ஆடி காரை வாங்க நினைப்பவர்கள் இதனை வாங்கலாம்!! க்யூ7 லிமிடெட் எடிசன் கார் அறிமுகம்!

முற்றிலும் புதிய கார்களை அறிமுகப்படுத்த முடியாவிடினும், குறைந்தப்பட்சம் ஸ்பெஷல் எடிசன்களையாவது அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றன. இந்த வகையில் சமீப வாரங்களாக அதிக எண்ணிக்கையில் புதிய கார் மாடல்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அவற்றை தொடர்ந்து தற்போது முன்னணி லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி அதன் க்யூ7 எஸ்யூவி மாடலின் புதிய லிமிடெட் எடிசன் காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

வரும் தீபாவளிக்கு புதுசா ஆடி காரை வாங்க நினைப்பவர்கள் இதனை வாங்கலாம்!! க்யூ7 லிமிடெட் எடிசன் கார் அறிமுகம்!

லிமிடெட் எடிசன் என்றாலே, குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் விற்பனை செய்யப்படுவது வழக்கம். புதிய க்யூ7 லிமிடெட் எடிசனும் மிகவும் குறைவாக, வெறும் 50 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. வழக்கமான ஆடி க்யூ7 காரில் இருந்து வேறுப்படும் விதமாக புதிய லிமிடெட் எடிசன் பழங்கால பீப்பாய்களின் பழுப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

வரும் தீபாவளிக்கு புதுசா ஆடி காரை வாங்க நினைப்பவர்கள் இதனை வாங்கலாம்!! க்யூ7 லிமிடெட் எடிசன் கார் அறிமுகம்!

இந்த பிரத்யேக பெயிண்ட் மட்டுமின்றி, ரன்னிங் போர்ட்ஸ், குவாட்ரோ எல்இடி விளக்குகள் மற்றும் சில்வர் நிறத்தில் ஆடி லோகோ வளையங்கள் போன்ற மேம்படுத்தப்பட்ட தோற்ற அம்சங்கள் புதிய க்யூ7 லிமிடெட் எடிசனில் வழங்கப்பட்டுள்ளன. ஆடி க்யூ7 எஸ்யூவி மாடலின் டெக்னாலஜி வேரியண்ட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய லிமிடெட் எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.88,08,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் தீபாவளிக்கு புதுசா ஆடி காரை வாங்க நினைப்பவர்கள் இதனை வாங்கலாம்!! க்யூ7 லிமிடெட் எடிசன் கார் அறிமுகம்!

மேற்கூறப்பட்ட மாற்றங்களை தவிர்த்து, க்யூ7 லிமிடெட் எடிசனில் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் க்யூ7 சொகுசு எஸ்யூவி காரில் வழக்கமாக பொருத்தப்படும் 3.0 லிட்டர் வி6 டிஎஃப்எஸ்ஐ என்ஜின் தான் அதன் புதிய லிமிடெட் எடிசனிலும் வழங்கப்பட்டுள்ளது. 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரிட் அமைப்புடன் பொருத்தப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 340 எச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

வரும் தீபாவளிக்கு புதுசா ஆடி காரை வாங்க நினைப்பவர்கள் இதனை வாங்கலாம்!! க்யூ7 லிமிடெட் எடிசன் கார் அறிமுகம்!

அதிகப்பட்சமாக மணிக்கு 250kmph வேகத்தில் செல்லக்கூடிய ஆடி க்யூ7 காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டிவிடலாம். இந்த காரின் மைல்ட்-ஹைப்ரிட் அமைப்பில் 48 வோல்ட் எலக்ட்ரிக் அமைப்பு வழங்கப்படுகிறது. இது பெல்ட் ஆல்டர்னெட் ஸ்டார்டர் (BAS)-க்கு இயக்க ஆற்றலை வழங்குகிறது. இது இறங்குமுகமான சாலைகளில் அதிகப்பட்சமாக 40 வினாடிகளுக்கு என்ஜினை அணைத்து வைக்க அனுமதிக்கிறது.

வரும் தீபாவளிக்கு புதுசா ஆடி காரை வாங்க நினைப்பவர்கள் இதனை வாங்கலாம்!! க்யூ7 லிமிடெட் எடிசன் கார் அறிமுகம்!

அதன்பின் தேவையை பொறுத்து, என்ஜினை மீண்டும் ஸ்டார்ட் செய்யும் பணியையும் க்யூ7 காரில் தன்னிச்சையாக மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டம் மேற்கொள்கிறது. இத்துடன் குவாட்ரோ அனைத்து-சக்கர ட்ரைவ், தகவமைத்து கொள்ளக்கூடிய காற்று சஸ்பென்ஷன் மற்றும் ஆடி ட்ரைவ் செலக்ட் மோட்கள் உள்ளிட்டவற்றால் ஆடி க்யூ7 சொகுசு எஸ்யூவி கார் நிகரற்ற பயண அனுபவத்தை வழங்குகிறது.

வரும் தீபாவளிக்கு புதுசா ஆடி காரை வாங்க நினைப்பவர்கள் இதனை வாங்கலாம்!! க்யூ7 லிமிடெட் எடிசன் கார் அறிமுகம்!

ஆட்டோ, கம்ஃபர்ட், டைனாமிக், எஃபிசியன்சி, ஆஃப்-ரோடு, ஆல்-ரோடு & இண்டிவிட்யூவல் என்பவை இந்த ஆடி காரின் 7 ட்ரைவ் மோட்களாகும். வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில், அளவில்-பெரிய எஸ்யூவி காரான ஆடி க்யூ7 முன்பக்கத்தில் எண்கோண அவுட்லைன் உடன் தட்டையான, அகலமான சிங்கிள் ஃப்ரேம் க்ரில்லை பெறுகிறது.

வரும் தீபாவளிக்கு புதுசா ஆடி காரை வாங்க நினைப்பவர்கள் இதனை வாங்கலாம்!! க்யூ7 லிமிடெட் எடிசன் கார் அறிமுகம்!

வாஷர் உடன் இணைக்கப்பட்ட தன்னிச்சையாக செயல்படக்கூடிய முன்பக்க கண்ணாடி வைபர்கள், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் நட்சத்திர ஸ்டைலில் அலாய் சக்கரங்கள் முதலியவை க்யூ7 எஸ்யூவி காரின் வெளிப்பக்க அம்சங்கள் ஆகும். உட்புற கேபினில், ஓட்டுனரின் மிக எளிமையான பயன்பாட்டிற்கு ஏற்ப டேஸ்போர்டும், ஸ்டேரிங் சக்கர அமைப்பும் இந்த சொகுசு ஆடி எஸ்யூவி காரில் வழங்கப்படுகிறது.

வரும் தீபாவளிக்கு புதுசா ஆடி காரை வாங்க நினைப்பவர்கள் இதனை வாங்கலாம்!! க்யூ7 லிமிடெட் எடிசன் கார் அறிமுகம்!

டேஸ்போர்டில் அளவில் பெரியதாக தொடுத்திரைகள் வழங்கப்பட்டு கொண்டிருக்க, கேபின் விளக்குகளை மொத்தம் 30 விதமான நிறத்தேர்வுகளில் பெற முடியும். டேஸ்போர்டில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் திரையை க்யூ7 காரில் பல்வேறு விதமான தேர்வுகளில் ஆடி நிறுவனம் வழங்குகிறது. இவற்றுடன் 19 ஸ்பீக்கர்கள் உடன் பி&ஒ ப்ரீமியம் 3டி சவுண்ட் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 10, 2022, 15:03 [IST]
English summary
Audi launched new q7 limited edition model in india to celebrate festive season
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+