அசத்தலான தோற்றத்தில், ஆடி ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட் மாடல் வெளியீடு!! ஒருமுறை சார்ஜ் செய்தால் 700கிமீ பயணம்

ஆடி ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட் (A6 Avant e-tron concept) மாடல் அசத்தலான தோற்றத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. ஆடியின் இந்த புதிய எலக்ட்ரிக் மாடலை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

அசத்தலான தோற்றத்தில், ஆடி ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட் மாடல் வெளியீடு!! ஒருமுறை சார்ஜ் செய்தால் 700கிமீ பயணம்

உலகம் முழுவதுமே எலக்ட்ரிக் கார்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முன்னணி கார் பிராண்ட்கள் அனைத்தும் ஏற்கனவே எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்கிவிட்டன. அத்துடன் எதிர்காலத்திற்கான எலக்ட்ரிக் மாடல்களின் வடிவமைப்பிலும் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றன.

அசத்தலான தோற்றத்தில், ஆடி ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட் மாடல் வெளியீடு!! ஒருமுறை சார்ஜ் செய்தால் 700கிமீ பயணம்

இந்த வகையில் பிரபல சொகுசு கார் பிராண்டான ஆடி தற்போது ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட் மாடலினை உலகளவில் வெளியீடு செய்துள்ளது. வழக்கமாக, கான்செப்ட் மாடல்கள் நிறுவனத்தின் திறனை வெளிக்காட்டும் விதமாக உருவாக்கப்படும். பின்னர் காலங்களில் அந்த கான்செப்ட் மாடலின் ஸ்டைலில் இருந்து சில குறிப்புகள் பெறப்பட்டு, புதிய கார்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

அசத்தலான தோற்றத்தில், ஆடி ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட் மாடல் வெளியீடு!! ஒருமுறை சார்ஜ் செய்தால் 700கிமீ பயணம்

ஆனால் சில கான்செப்ட் மாடல்கள் மட்டுமே மொத்தமாக அப்படியே புதிய விற்பனை காராக மாறும். இதில் ஆடி ஏ6 அவண்ட் இ-ட்ரான் ஆனது 2வது ரகம் ஆகும். ஏனெனில் இது 2024ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக புதிய ஆடி எலக்ட்ரிக் எஸ்டேட் காராக உருமாறும் என கூறப்படுகிறது. சீனாவில் நடைபெற்ற 2021 ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஏ6 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான் கான்செப்ட்டின் அடிப்படையில் இந்த புதிய கான்செப்ட் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அசத்தலான தோற்றத்தில், ஆடி ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட் மாடல் வெளியீடு!! ஒருமுறை சார்ஜ் செய்தால் 700கிமீ பயணம்

அகலமான ட்ராக், தாழ்வான உடலமைப்பு, பெரிய அளவிலான சக்கரங்கள் & க்ரீன்ஹௌஸ் உள்ளிட்டவை ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட்டின் சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. மேலும் இந்த அம்சங்களே இதற்கு எஸ்டேட் கார் போன்றதான தோற்றத்தை வழங்குகின்றன. முன்பக்கத்தை இந்த எஸ்டேட் கான்செப்ட் மாடல், ஏ6 ஸ்போர்ட்பேக் இ-ட்ரானில் இருந்து அப்படியே பெற்றுள்ளது.

அசத்தலான தோற்றத்தில், ஆடி ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட் மாடல் வெளியீடு!! ஒருமுறை சார்ஜ் செய்தால் 700கிமீ பயணம்

ஆனால் க்ரில் அமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. இ-ட்ரான் எலக்ட்ரிக் கார்களுக்கே உண்டான மூடிய முன்பக்க க்ரில், எல்இடி டிஆர்எல்களுடன் நேர்த்தியான ஹெட்லேம்ப்கள், பருத்த பொனெட், செங்குத்தான ஏர்டேம்கள், 22-இன்ச் சக்கரங்கள், க்ரோம்டு ஜன்னல் லைன் மற்றும் பெரிய அளவிலான முன்பக்க கண்ணாடி உள்ளிட்டவை ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட்டின் வெளிப்புற ஹைலைட்களாகும்.

அசத்தலான தோற்றத்தில், ஆடி ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட் மாடல் வெளியீடு!! ஒருமுறை சார்ஜ் செய்தால் 700கிமீ பயணம்

சார்ஜிங் துளையினை வலது பின்பக்க ஃபெண்டருக்கு மேலே பெற்றுள்ள இந்த புதிய கான்செப்ட் மாடல் ஸ்டேஷன் வேகன் உடலமைப்பை கொண்டிருப்பினும், இது பெரும்பாலான தொழிற்நுட்பங்களை ஏ6 இ-ட்ரான் கான்செப்ட்டில் இருந்து பெற்றுள்ளது. புதிய ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட் மாடலின் நீளம் 4.96மீ, அகலம் 1.96மீ மற்றும் உயரம் 1.44மீ ஆகும். பாரம்பரியமான பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் மற்ற ஆடி இ-ட்ரான் எலக்ட்ரிக் கார்களை போல் இந்த கான்செப்ட் மாடலிலும் கேமிராக்களாக மாற்றப்பட்டுள்ளன.

அசத்தலான தோற்றத்தில், ஆடி ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட் மாடல் வெளியீடு!! ஒருமுறை சார்ஜ் செய்தால் 700கிமீ பயணம்

பின்பக்கம் நன்கு மேல்நோக்கி தூக்கப்பட்டுள்ளது. இதன் பின்பக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பாய்லர் மேற்கூரைக்கு அருகே வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் காரின் மொத்த அகலத்திற்கும் தடிமனான எல்இடி ஸ்ட்ரிப் ஒன்று பின்கதவை கடந்தவாறு செல்கிறது. பின்பக்க பம்பரில் போதுமான டிஃப்யூஸர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. காற்று இயக்கவியலுக்கு இணக்கமான தோற்றத்தினால் இந்த எலக்ட்ரிக் கான்செப்ட் மாடலின் குறைந்த ஈர்ப்பு விசை மையம் 0.24 ஆகும்.

அசத்தலான தோற்றத்தில், ஆடி ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட் மாடல் வெளியீடு!! ஒருமுறை சார்ஜ் செய்தால் 700கிமீ பயணம்

இந்த கான்செப்ட் மாடலில் இருந்து உருவாக்கப்படும் ஆடி ஏ6 அவண்ட் இ-ட்ரான் காரானது 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7 வினாடிகளில் எட்டக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது. அதுவே, இதன் செயல்திறன்மிக்க வெர்சன் 0-100kmph வேகத்தை 4 வினாடிகளில் எட்டிவிடக்கூடியதாக இருக்கும். எஸ்டேட் ரக கார்களில் உட்புற கேபினில் போதுமான அளவிலான இடவசதியை எதிர்பார்க்கலாம்.

அசத்தலான தோற்றத்தில், ஆடி ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட் மாடல் வெளியீடு!! ஒருமுறை சார்ஜ் செய்தால் 700கிமீ பயணம்

ஏற்கனவே கூறியதுபோல் 2024ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஆடியின் இந்த புதிய எலக்ட்ரிக் கார் கிட்டத்தட்ட 700கிமீ ரேஞ்ச் உடன் கொண்டுவரப்படலாம். இதற்காக அதிநவீன 800 வோல்ட் தொழிற்நுட்பம் மற்றும் 270 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படலாம். இதனை வெறும் 30 நிமிடங்களில் 80% சார்ஜ் நிரப்பும் வகையில் ஆடி வழங்கும் என கூறப்படுகிறது. போர்ஷே உடன் ஆடி இணைந்து தயாரித்த பிரீமியம் பிளாட்ஃபாரம் எலக்ட்ரிக் கட்டமைப்பில் கொண்டுவரப்படும் இரண்டாவது மாடலாக ஆடி ஏ6 அவண்ட் இ-ட்ரான் கான்செப்ட் விளங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 19, 2022, 7:30 [IST]
English summary
Audi A6 Avant e Tron Concept 2022 Unveiled
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+