கேக்கும்போதே ரொம்ப ஹேப்பியா இருக்கு... வாகன பிரியர்களுக்கு உற்சாகமான செய்தி... என்னனு தெரியுமா?

இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போ நடைபெறவுள்ள தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கேக்கும்போதே ரொம்ப ஹேப்பியா இருக்கு... வாகன பிரியர்களுக்கு உற்சாகமான செய்தி... என்னனு தெரியுமா?

வாகன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போவானது, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறக்கூடிய வாகன திருவிழா ஆகும்.

கேக்கும்போதே ரொம்ப ஹேப்பியா இருக்கு... வாகன பிரியர்களுக்கு உற்சாகமான செய்தி... என்னனு தெரியுமா?

கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றது. இதன்படி பார்த்தால், நடப்பு 2022ம் ஆண்டில் ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. நடப்பு 2022ம் ஆண்டின் பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, ஆட்டோ எக்ஸ்போ நடைபெறவில்லை.

கேக்கும்போதே ரொம்ப ஹேப்பியா இருக்கு... வாகன பிரியர்களுக்கு உற்சாகமான செய்தி... என்னனு தெரியுமா?

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஏற்பட்டதுதான் இதற்கு காரணம். இம்முறை ஒமிக்ரான் வேரியண்ட்டால் பலரும் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாகவே நடப்பாண்டு நடைபெற வேண்டிய ஆட்டோ எக்ஸ்போ ஒத்தி வைக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது ஆட்டோ எக்ஸ்போவின் அடுத்த எடிசன் நடைபெறும் அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேக்கும்போதே ரொம்ப ஹேப்பியா இருக்கு... வாகன பிரியர்களுக்கு உற்சாகமான செய்தி... என்னனு தெரியுமா?

இதுகுறித்து ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் (Society of Automobile Manufacturers - SIAM) நிர்வாக இயக்குனர் ராஜேஷ் மேனன் கூறுகையில், ''கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில், வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஆட்டோ எக்ஸ்போ நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேக்கும்போதே ரொம்ப ஹேப்பியா இருக்கு... வாகன பிரியர்களுக்கு உற்சாகமான செய்தி... என்னனு தெரியுமா?

ஜனவரி 11ம் தேதி ஊடகத்துறையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12ம் தேதி தொடக்க விழா நடைபெறும். அன்றைய தினம் ஊடகத்துறையினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் டீலர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது'' என்றார். இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்வதற்கு பலரும் விரும்புகின்றனர்.

கேக்கும்போதே ரொம்ப ஹேப்பியா இருக்கு... வாகன பிரியர்களுக்கு உற்சாகமான செய்தி... என்னனு தெரியுமா?

பார்வையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால், ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் இடத்தில் சமூக விலகலை கடைபிடிப்பது சிரமமான விஷயம். இது மற்றவர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும் என்பதால், நடப்பு 2022ம் ஆண்டு நடைபெறவிருந்த ஆட்டோ எக்ஸ்போ தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கேக்கும்போதே ரொம்ப ஹேப்பியா இருக்கு... வாகன பிரியர்களுக்கு உற்சாகமான செய்தி... என்னனு தெரியுமா?

இதை மனதில் வைத்துதான், வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதியில் இருந்து 18ம் தேதி வரை ஆட்டோ எக்ஸ்போவை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. ஆட்டோ எக்ஸ்போவிற்காக ஆவலுடன் காத்திருந்த வாகன பிரியர்கள் மத்தியில் இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேக்கும்போதே ரொம்ப ஹேப்பியா இருக்கு... வாகன பிரியர்களுக்கு உற்சாகமான செய்தி... என்னனு தெரியுமா?

2023ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும் கலந்து கொள்ளவுள்ளன. அவை தங்களின் புதிய தயாரிப்புகளை காட்சிக்கு வைக்கவுள்ளன. பல்வேறு வாகன நிறுவனங்கள் அடுத்த ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேக்கும்போதே ரொம்ப ஹேப்பியா இருக்கு... வாகன பிரியர்களுக்கு உற்சாகமான செய்தி... என்னனு தெரியுமா?

ஒரு சில நிறுவனங்கள் கான்செப்ட் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்த கன்செப்ட் மாடல்கள் பிற்காலத்தில் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு, விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். கடந்த 2020ம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.

கேக்கும்போதே ரொம்ப ஹேப்பியா இருக்கு... வாகன பிரியர்களுக்கு உற்சாகமான செய்தி... என்னனு தெரியுமா?

அப்போதும் கோவிட்-19 வைரஸ் அச்சத்துடனேயேதான் ஆட்டோ எக்ஸ்போ நடைபெற்றது. இன்னும் சொல்லப்போனால் அப்போதுதான் கோவிட்-19 பிரச்னை விஸ்வரூபமெடுக்க தொடங்கியிருந்தது. இருப்பினும் இந்த பிரச்னையை சமாளித்து, ஆட்டோ எக்ஸ்போ நடத்தி முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, 2023ம் ஆண்டு ஜனவரி 13-18 நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவின் அடுத்த எடிசனும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றிதான் நடைபெறவுள்ளது.

கேக்கும்போதே ரொம்ப ஹேப்பியா இருக்கு... வாகன பிரியர்களுக்கு உற்சாகமான செய்தி... என்னனு தெரியுமா?

2023ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே தங்கள் எலெக்ட்ரிக் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கு, இந்த தளத்தை வாகன நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Sunday, March 20, 2022, 23:03 [IST]
English summary
Auto expo to be held in january 2023 check dates here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+