ரூ.86.75 லட்சம் விலையுள்ள சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை! அவங்களோட ரசிகர்களே இத எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

மிக மிக அதிக விலைக் கொண்ட லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வெலர் (Land Rover Range Rover Velar) சொகுசு எஸ்யூவி காரை பிரபல நடிகை புதிதாக வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரூ. 86.75 லட்சம் விலையுள்ள சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... அவங்களோட ரசிகர்களே இத எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

பாலிவுட் மீடியா உலகில் மிகவும் பிரபலமானவராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் அவ்னீத் கவுர். மிக விரைவில் வெள்ளி திரையிலும் இவர் கால் தடம் பதிக்க இருக்கின்றார். குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய அவர், திரைத்துறையில் தொடர்ச்சியாக வளர்ச்சியைச் சந்தித்து வருகின்றார்.

ரூ. 86.75 லட்சம் விலையுள்ள சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... அவங்களோட ரசிகர்களே இத எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

தனது இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், தனக்கான பரிசை தானே வாங்கியிருக்கின்றார், அவ்னீத் கவுர். புதிதாக லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வெலர் (Land Rover Range Rover Velar) சொகுசு காரை அவர் வாங்கியிருக்கின்றார். லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வரும் மிக அதிக விலைக் கொண்ட சொகுசு கார்களில் ரேஞ்ஜ் ரோவர் வெலர் கார் மாடலும் ஒன்று. இந்த காரை வாங்கியிருப்பது குறித்த தகவலை நடிகை அவ்னீத் கவுரே வெளியிட்டிருக்கின்றார். தனது ரசிகர்களுடன் இந்த மகிழ்ச்சியான நிகழ்வை பகிர்ந்துக் கொள்ளும் விதமாக காருடன் நிற்கும் படத்தை சமூக வலை தள பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார்.

ரூ. 86.75 லட்சம் விலையுள்ள சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... அவங்களோட ரசிகர்களே இத எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

ரேஞ்ஜ் ரோவர் வெலார் ஓர் ஆடம்பர வசதிகள் கொண்ட எஸ்யூவி காராகும். இது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு எரிபொருள் ஆப்ஷன்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இக்காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 86.75 லட்சம். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய உச்சபட்ச விலைக் கொண்ட லக்சூரி காரையே அவ்னீத் கவுர் தற்போது வாங்கியிருக்கின்றார்.

ரூ. 86.75 லட்சம் விலையுள்ள சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... அவங்களோட ரசிகர்களே இத எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

அவர் வாங்கியிருப்பது எந்த வேரிண்ட் என்கிற துள்ளியமான தகவல் வெளியாகவில்லை. ஆகையால், அவர் வாங்கியிருக்கும் ரேஞ்ஜ் ரோவர் வெலர் எஸ்யூவி காரின் உண்மையான விலை பற்றிய விபரத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. அதே நேரத்தில், வரி மற்றும் கூடுதல் சிறப்பு வசதிகள் சேர்ப்பு ஆகியவற்றின் காரணத்தினால் அவர் வாங்கியிருக்கும் காரின் விலை ஒரு கோடியை மிஞ்சியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

ரூ. 86.75 லட்சம் விலையுள்ள சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... அவங்களோட ரசிகர்களே இத எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

இந்த காரின் ஆர்-டைனமிக் எஸ் என்ற ட்ரிம் அதிக சொகுசு வசதிகளை வாரி வழங்கும் தேர்வாக இருக்கின்றது. இந்த காரில் 3டி சரவுண்ட் கேமிரா, எலெக்ட்ரானிக் சஸ்பென்ஷன், பிஎம் 2.5 ஏர் ஃபில்டர் (இது வைரஸ் மற்றும் காருக்குள் உலாவும் தூசிகளை வடிகட்ட உதவும்) ஆகிய வழங்கப்பட்டுள்ளன.

ரூ. 86.75 லட்சம் விலையுள்ள சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... அவங்களோட ரசிகர்களே இத எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

இதுமட்டுமின்றி, புதிய பிவி ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10 இன்ச் அளவுள்ள தொடுதிரை, 10 இன்ச் அளவுள்ள மற்றுமொரு திரை, ஆப்பிள் கார்-ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வெலர் சொகுசு காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ரூ. 86.75 லட்சம் விலையுள்ள சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... அவங்களோட ரசிகர்களே இத எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

அவ்னீத் கவுர் வாங்கியிருக்கும் சொகுசு கார் ஃபுஜி வெள்ளை (Fuji White) நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், போர்டோஃபினோ ப்ளூ (Portofino Blue), சேன்டோரினி பிளாக் (Santorini Black) மற்றும் சிலிகான் சில்வர் (Silicon Silver) ஆகிய நிற தேர்வுகளிலும் இக்கார் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 86.75 லட்சம் விலையுள்ள சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... அவங்களோட ரசிகர்களே இத எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

ரேஞ்ஜ் ரோவர் வெலர், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை இரண்டும் அதிக திறனை வெளிப்படுத்தும் வசதிக் கொண்டவை ஆகும். அதிலும், பெட்ரோல் மோட்டார் மிக மிக அதிக திறனை வெளிப்படுத்தக் கூடியதாக காட்சியளிக்கின்றது.

ரூ. 86.75 லட்சம் விலையுள்ள சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... அவங்களோட ரசிகர்களே இத எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

அது 247 பிஎச்பி மற்றும் 365 என்எம் டார்க்கை வெளியேற்றும். டீசல் மோட்டார் அதிகபட்சமாக 177 பிஎச்பி பவரையும், 430 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இரு எஞ்ஜின்களிலும் தானியங்கி டார்க் கன்வெர்டர் வசதி வழங்கப்படுகின்றது. இது மிக ஸ்மூத்தான இயக்க அனுபவத்திற்கு உதவும்.

ரூ. 86.75 லட்சம் விலையுள்ள சொகுசு காரை வாங்கிய பிரபல நடிகை... அவங்களோட ரசிகர்களே இத எதிர்பார்த்திருக்க மாட்டாங்க!

இத்தகைய சூப்பரான காரையே திரை நட்சத்திரம் அவ்னீத் கவுர் தற்போது வாங்கியிருக்கின்றார். இவர் முதன் முதலாக தனது திரை வாழ்க்கையை 2012ம் ஆண்டிலேயே தொடங்கினார். டேன்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொண்டதன் வாயிலாக திரையுலகில் கால் தடம் பதித்தார். தற்போது மிக பெரிய வளர்ச்சியாக நடிகர் நவசுதின் சித்திக்கிற்கு இணையாக 'டிகு வெட்ஸ் ஷெரு' எனும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

Article Published On: Friday, February 4, 2022, 18:54 [IST]
English summary
Avneet kaur buys brand new range rover velar luxury suv
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+