"மழைக்காக பிரிட்ஜ் கீழே ஒதுங்க கூடாது".. மீறினா அபராதம் போடுவாங்களாம்... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட காவல்துறை!
மேம்பாலம் கீழே ஒதுங்கும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்போவதாக குறிப்பிட்ட நகர காவல்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மழைக் காலங்களில் எப்போது மழை வெளுத்து வாங்கும், எப்போது நிற்கும் என்பதை யாராலும் துள்ளியமாக கணிக்கவே முடியாது. வானிலை ஆய்வு மையங்கள் இன்று கனமழை பெய்யும் என்பார்கள். ஆகையால், மழையை சமாளிக்க அனைத்திற்கும் தயாராக இருப்போம். ஆனால், அன்றோ பங்குனி வெயில் பல்லை காட்டுவதைப் போல் சூரியன் சுட்டெரித்துக்கும். அதேநேரத்தில், சில நேரங்களில் சிறிய தூரல் அல்லது அதிக காற்றுடன் அந்த நாள் முடிந்துவிடும்.

இதேபோல், எந்த நாளில் மழையே வராது என நினைக்கின்றோமோ, அதாவது, மழையை எதிர்கொள்ள துளியளவும் தயாராக இல்லாத நாட்களில் மழை கொட்டி தீர்த்துவிடும். இந்த மாதிரியான நேரங்களில் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகுபவர்களில் இருசக்கர வாகன ஓட்டிகளும் அடங்குவர். அந்தமாதிரியான நேரங்களில் அவர்கள் தஞ்சமடைய சாலையோர கடைகள், மரத்தடி, பேருந்து நிறுத்தம் மற்றும் மேம்பாலங்களையே பயன்படுத்துவர்.

இந்த நிலையில் மேம்பாலங்களுக்கு அடியில் வாகன ஓட்டிகள் நிற்பதற்கு ஆப்பு வைக்கும் வகையில் குறிப்பிட்ட நகராட்சி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது, இனி இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களுடன் மழைக்காக மேம்பாலங்களுக்கு கீழ் நிற்கக் கூடாது என அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது. மீறி நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடிவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விதி சுரங்க வழிப் பாதைகளுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. ஆகையால், சுரங்க வழிப் பாதை மற்றும் மேம்பாலங்களுக்கு அடியில் இனி இருசக்கர வாகன ஓட்டிகளால் ஒதுங்க முடியாது என்கிற நிலை உருவாகியுள்ளது. இந்த கடுமையான அறிவிப்பை கர்நாடகாவின் பெங்களூரு நகராட்சியே அறிவித்துள்ளது. வாகன ஓட்டிகள் ஒரே நேரத்தில் அதிகளவில் மேம்பாலங்களுக்கு அடியில் மழைக்காக தஞ்சமடைவதால் பிற வாகனங்களால் அந்த பகுதியைக் கடக்க முடியாத நிலை உருவாகுகின்றது.

இதனால் அந்த பகுதியே போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பிக்கும் சூழல் சில நேரங்களில் ஏற்படுகின்றது. இதுமட்டுமின்றி ஆம்புலன்ஸ் மற்றும் பிற அவசர வாகனங்களும் முன்னேற முடியாமல் ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகின்றது. இதுபோன்ற காரணங்களைக் காட்டியே பெங்களூரு நகராட்சி இந்த கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த விதிமீறல்களுக்கு தற்போது அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இவ்விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு ரூ. 500 அபராதமும், மீண்டும் இதே விதியை மீறுபவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவ மழை பொழியத் தொடங்கியிருக்கின்றது. நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளை மழை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக குறிப்பிட்ட சில நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையிலேயே அண்மையில் பொழிந்த மழை காரணமாக பெங்களூருவில் வாகன ஓட்டிகள் சிலர் மேம்பாலம் கீழே தஞ்சமடைந்திருக்கின்றனர். வாகன ஓட்டிகள் ஒதுங்குவதை சற்றும் எதிர்பார்த்திராத பின்னால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கின்றன. இந்த விபத்தால் சிலர் கடுமையான காயங்களுக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்த நிலை நகரத்தின் இன்னும் பல பகுதிகளில் தொடர்வதாகக் கூறப்படுகின்றது.

இந்த காரணத்தினாலேயே தற்போது உடனடியாக புதிய விதி அமலுக்குக் பெங்களூருவில் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. எனவே, பெங்களூருவிற்குள் பயணங்களை மேற்கொண்டு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மறந்தும் மழைக்காக மேம்பாலம் அல்லது சுரங்க வழிப்பாதையில் ஒதுங்கி நின்றுவிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது. மீறினால் அதிகபட்ச தண்டனைக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

அதேவேலையில், மழை காலத்தில் அதைச் சமாளிக்கும் பொருட்டு ரெயின் கோட் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்து செல்லலாம். இதேபோல், மழை நீர் தேங்காத வகையிலான ஹெல்மெட்டுகள் விற்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதன் வாயிலாக அதிக மழை பொழியும்போதுகூட தெளிவான பார்வையை பெற்று நம்முடைய பயணத்தைத் தொடர முடியும்.

பெங்களூரு நகராட்சி மேம்பாலம் மற்றும் சுரங்க வழிப்பாதையில் ஒதுங்குவதற்கே தடை விதித்துள்ளது. பேருந்து நிறுத்தங்களில் நிற்க எந்த மாதிரியான தடையும் அறிவிக்கப்படவில்லை. இதேபோல், மழை காலங்களில் ஒதுங்கக் கூடாது என எந்த சாலையோர கடைகளும் அறிவிக்கவில்லை. ஆகையால், மிகக் கடுமையாக மழை பொழிகின்ற நேரத்தில் ரிஸ்க் எடுக்காமல், அதேவேலையில், பிற வாகன போக்குவரத்துக்கு எந்தவொரு இடையூறும் செய்யாமல் ஒரு ஓரமாக நின்று செல்வது அனைவருக்கும் நல்ல சூழலை உருவாக்கும்.


Click it and Unblock the Notifications