எலி தொல்லையை ஒழிக்க பெங்களூரு நபர் கையாண்ட விநோதம்... எலி என்ன எறும்பாலகூட புக முடியாது!
பெங்களூருவைச் சேர்ந்த கார் உரிமையாளர் தன்னுடைய வாகனத்தை எலிகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக விநோத யுக்தி ஒன்றை கையாண்டுள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கார், பைக் வைத்திருப்பவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றாக எலி தொல்லை இருக்கின்றது. அழையா விருந்தாளிகளாக வாகனத்திற்குள் நுழையும் அவை வாகனங்களின் முக்கிய பாகங்களை சேதப்படுத்துவதோடு, முக்கிய ஒயர் இணைப்புகளையும் துண்டித்துவிடுகின்றன. இவற்றிற்கு புதிய வாகனம் எது, பழைய வாகனம் எது என எதுவும் தெரியாது.

கண்களில் படும் அனைத்து வாகனங்களும் அவற்றிற்கு ஒன்றே. ஆகையால், பாகுபாடின்றி அந்த வாகனங்களைச் சேதப்படுத்தி விடும். இதனால், ஏற்படும் பாதிப்புகளும், செலவும் மிக பெரியதாக இருக்கும். எனவேதான் இந்த விஷயத்தில் அதிக கவனம் தேவை என்கின்றனர். மேலும், எலி தொல்லைகள் இல்லாத இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றது.

Source: CarBlogIndia
ஆனால், அது சுலபமானது அல்லது. ஆமாங்க, எலிகள் போன்ற கொறித்துண்ணும் ஜீவராசிகளிடத்தில் இருந்து வாகனத்தை பாதுகாப்பது மிகப் பெரிய சவாலான விஷயம். என்னதான் பார்த்து பார்த்து வாகனங்களை பத்திரப்படுத்தினாலும், அவை அசால்டாக வாகனங்களுக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடி விடும்.

இந்த நிலையிலேயே தன்னுடைய காரை எலிகளிடம் இருந்து காக்க விநோத யுக்தியை பெங்களூருவைச் சேர்ந்த ஓர் இளைஞர் கையாண்டுள்ளார். அவர் தன்னுடைய காரை ஸ்டீல் ஃப்ரேமுக்குள் நிறுத்தியிருக்கின்றார். அதாவது, சிறிய பூச்சுகூட நுழையாத வண்ணம் காரை சுற்றிலும் உலோக தகட்டைக் கொண்டு மூடியிருக்கின்றார்.

கார்த்திக் சேகு என்பவரே இந்த விநோத கண்டுபிடிப்பிற்கு சொந்தக்காரர் என கூறப்படுகின்றது. எலிகளிடம் இருந்து வாகனங்களை காக்க வேண்டும் என்ற அவரின் நீண்ட நாள் தேடலுக்கு கிடைத்த வழியே இதுவாகும். கார்த்திக் வசிக்கும் இடத்தில் போதிய பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தினால் தெருவோரத்தில் அவர் அவரது காரை பார்க் செய்து வந்திருக்கின்றார்.

அவ்வாறு ஒரு நாள் காரை சாலையோரத்தில் நிறுத்தியபோது அதற்குள் புகுந்த எலி கூட்டம் பயங்கரமான சேதத்தை ஏற்படுத்தி சென்றிருக்கின்றது. ஏர்-டேம் வழியாக காருக்குள் புகுந்த அவை, போர் வீரர்கள் எதிரி நாட்டின்மீது படையெடுத்தால் எத்தகைய சேதத்தை ஏற்படுத்துமோ அந்த மாதிரியான அதீத சேதத்தை அந்த எலிகள் கூட்டம் காருக்குள் ஏற்படுத்தியிருக்கின்றன.

இதுபோன்று ஒன்றிற்கும் மேற்பட்ட முறை கார்த்திக்கின் காரை எலிகள் பதம் பார்த்திருக்கின்றன. இந்த நிலையிலேயே இதற்கு ஓர் நிரந்தர முடிவை எட்டும் விதமாக உலோக ஃப்ரேமைக் கொண்டு தனது காரை கார்திக் சேகு மூடியிருக்கின்றார். இதன் வாயிலாக நல்ல பலனைக் காண தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மட்டுமின்றி அந்த பகுதி வாசிகள் சிலரும் இந்த யுக்தியைக் கையாள தொடங்கியிருக்கின்றனர். உலோக தகடு மட்டுமின்றி கார் கவரைக் கொண்டும் தனது காரை கார்த்திக் மூடியிருக்கின்றார். பறவைகளின் எச்சம், மர இலைகளின் சிராய்ப்புகளில் இருந்து தன்னுடைய காரை காக்கும் விதமாக அவர் கார் இந்த செயலை ரெகுலராக செய்து வருகின்றார்.

இதன் வாயிலாக தன்னுடைய கார் பல மடங்கு பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பான பார்க்கிங் வசதி இல்லாத வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாகனங்களைக் கொறித்துண்ணிகளிடம் இருந்து காக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

பூச்சிகளை விரட்டும் ஒலி எழுப்பி, எலி பொறி மற்றும் வாசனை திரவியங்கள் உள்ளிட்டவற்றை வாகன உரிமையாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவற்றின் வரிசையில் தற்போது புதிதாக உலோக தகடும் இணைந்துள்ளது. வரும் காலத்தில் கார்த்திக்கைபோல் இன்னும் சிலரும் உலோக தகட்டால் தங்களுடைய காரை காக்கும் செயலை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications