இந்தியர்களின் ஃபேவரட் செடான் காராக மாறிவரும் டாடா டிகோர்!! டாப்-10 செடான் கார்கள்!
கடந்த 2022 ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 செடான் கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எஸ்யூவி, எம்பிவி கார்களின் வளர்ச்சியினால் செடான் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. மற்ற பிரிவுகளை போல் செடான் கார்கள் பிரிவிலும் மாருதி சுஸுகியே முன்னிலை வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் டிசைர் தான் கடந்த மாதத்தில் 5 ஆயிரம் யூனிட்களுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஒரே செடான் மாடலாக உள்ளது.

கடந்த 2022 ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிசைர் கார்களின் எண்ணிக்கை 12,597 ஆகும். அதுவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதனை காட்டிலும் 0.33% அதிகமாக 12,639 டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ள மாருதி டிசைர் கடந்த ஜூன் மாதத்தின் மொத்த பயணிகள் கார்கள் விற்பனையில் 7வது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கடுத்து 2வது இடத்தில் டாடா டிகோர் 4,931 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் டிகோரின் விற்பனை கடந்த 1 வருடத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். எந்த அளவிற்கு என்றால், 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் கடந்த ஜூனில் டிகோரின் விற்பனை சுமார் 358% அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்த ஆண்டு ஜூனில் வெறும் 1,076 டிகோர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஹூண்டாய் அவ்ரா 4,102 யூனிட்களின் விற்பனை உடன் 3வது இடத்தை பெற்றுள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், 2021 ஜூன் மாதத்தில் டிசைருக்கு அடுத்து சிறந்த விற்பனை செடான் மாடலாக அவ்ரா தான் இருந்தது. ஆனால் டாடா டிகோரின் வளர்ச்சியினால் அவ்ரா சற்று சரிவை கண்டுள்ளது. இருப்பினும் 2021 ஜூன் மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் அவ்ரா கார்களின் விற்பனையில் 31% வளர்ச்சியை ஹூண்டாய் கண்டுள்ளது.

மலிவான ஹோண்டா கார்களுள் ஒன்றாக விளங்கும் அமேஸ் இந்த வரிசையில் 4வது இடத்தை சொந்தமாக்கியுள்ளது. 2021 ஜூனில் 1,487 அமேஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 125% அதிகமாக 3,350 அமேஸ் கார்களை ஹோண்டா கார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 5வது இடத்தில் இந்தியர்களின் ஃபேவரட் செடான் மாடலான ஹோண்டா சிட்டி உள்ளது.

அமேஸை காட்டிலும் பிரீமியம் தர செடான் காராக விளங்கும் சிட்டி கடந்த மாதத்தில் 3,292 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சிட்டி செடான் கார்களின் விற்பனை கடந்த பல மாதங்களாக இந்த அளவில்தான் இருந்து வருகிறது. கடந்த மாத விற்பனை உடன் ஒப்பிடுகையில் 2021 ஜூன் மாதத்தில் 28% குறைவாக 2,571 சிட்டி கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

6வது இடத்தில் ஸ்கோடா ஆட்டோவின் புத்தம் புதிய செடான் காரான ஸ்லாவியா உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்லாவியா கார்களின் எண்ணிக்கை 2,765 யூனிட்களாகும். ஹூண்டாய் வெர்னா 1,703 யூனிட்களின் விற்பனை உடன் 7வது இடத்தில் உள்ளது. அதுவே 2021 ஜூன் மாதத்தில் 2,181 வெர்னா கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் வெர்னா கார்களின் விற்பனை கிட்டத்தட்ட 22% குறைந்துள்ளது. இதற்கடுத்து மாருதி சுஸுகியின் பிரீமியம் செடான் மாடலான சியாஸ் 8வது இடத்தில் உள்ளது. வெர்னாவின் போட்டி மாடலான இது கடந்த மாதத்தில் 1,507 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2021 ஜூனில் கிட்டத்தட்ட 150% குறைவாக, வெறும் 602 சியாஸ் கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன.

| Rank | Model | June 2022 | June 2021 | Growth (%) YoY |
| 1 | Maruti Dzire | 12,597 | 12,639 | |
| 2 | Tata Tigor | 4,931 | 1,076 | 358 |
| 3 | Hyundai Aura | 4,102 | 3,126 | 31 |
| 4 | Honda Amaze | 3,350 | 1,487 | 125 |
| 5 | Honda City | 3,292 | 2,571 | 28 |
| 6 | Skoda Slavia | 2,765 | - | - |
| 7 | Hyundai Verna | 1,703 | 2,181 | -22 |
| 8 | Maruti Ciaz | 1,507 | 602 | 150 |
| 9 | Skoda Superb | 139 | 117 | 19 |
| 10 | Toyota Camry | 89 | 38 | 134 |
இவை தான் கடந்த மாதத்தில் 4 இலக்கங்களில் விற்பனை எண்ணிக்கைகளை பதிவு செய்த மாடல்களாகும். இவற்றிற்கு கீழுள்ளவை 150 யூனிட்களுக்கும் குறைவாக விற்பனை செய்யப்பட்டவை ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி இரு இடங்களான 9வது மற்றும் 10வது இடங்களில் ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் டொயோட்டா காம்ரி செடான் கார்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 139 மற்றும் 89 ஆகும்.


Click it and Unblock the Notifications








