கன்னி வெடி, கையெறி குண்டு எதுவா இருந்தாலும் அசால்ட் செஞ்சிடும்! இது ஓர் மேட்-இன் இந்தியா கவச வாகனம்!
கன்னி வெடி, கையெறி குண்டு எதுவா இருந்தாலும் அசால்ட் செய்யக் கூடிய கவச வாகனத்தை பாரத் ஃபோர்ஜ் ஐநாவின் அமைதி காக்கும் படையிடம் ஒப்படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் பாரத் ஃபோர்ஜ் (Bharat Forge) நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிக்காக 16 உலக தரம் வாய்ந்த கவச வாகனங்களை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்யாணி எம்4 (Kalyani M4) எனப்படும் கவச போர் வாகனங்களே ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கல்யாணி எம்4 ஓர் அதி நவீன கவச பணியாளர் கேரியர் விரைவு எதிர்வினை சண்டை வாகனம் (ஹெவி) ஆகும். இந்த வாகனத்தால் கடுமையான கன்னி வெடிகள் மற்றும் கையெறி குண்டுகளின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்ற, மிகப் பெரிய வெடி குண்டு தாக்குதலையும் இந்த வாகனத்தால் தாங்கிக் கொள்ள முடியும் என பாரத் ஃபோர்ஜ் தெரிவித்துள்ளது.

இந்த வாகனம் அதிக வேகத்தில் பயணிக்கும் திறனுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், களத்தில் எந்த தடையும் இன்றி இவ்வாகனத்தால் செயல்பட முடியும் என்பது தெளிவாக தெரிவிகின்றது. இத்தகைய மிரள வைக்கும் பாதுகாப்பு கவச போர் வாகனத்தையே பாரத் ஃபோர்ஜ் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையின் பயன்பாட்டிற்காக ஒப்படைத்துள்ளது.

இந்த வாகனம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. கடுமையான பகுதிகளுக்கு படை வீரர்களை அழைத்துச் செல்லும் வகையில் இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், வீரர்களால் இதில் தங்கிக் கொள்ளவும் முடியும். பத்து வீரர்கள் வரை இந்த வாகனத்தில் பயணிக்க முடியும்.

கல்யாணி எம்4 இன் தீவிர தன்மையை தெரிந்துக் கொள்வதற்காக, அவ்வாகனத்தை இந்தியாவின் கடினமான நிலப்பரப்புகளில் வைத்து பாரத் ஃபோர்ஜ் சோதனையோட்டம் செய்திருக்கின்றது. இதில் மிக சிறப்பாக கல்யாணி எம்4 செயல்பட்டிருக்கின்றது. லே மற்றும் லடாக் போன்ற உறை பனி நிறைந்த நிலப்பரப்புகளில் வைத்து கல்யாணி எம்4 சோதனையோட்டம் செய்யப்பட்டிருக்கின்றது.

எனவே, கரடு-முரடான சாலை மட்டுமல்ல பனி சூழ்ந்த நிலப்பரப்பிலும் இந்த இந்திய தயாரிப்பு கவச வாகனம் மிக சிறப்பாக இயங்கும் என்பது தெரிய வருகின்றது. இங்கு மட்டுமின்றி நாட்டிலேயே மிகக் கொடுமையான வரண்ட பகுதியாக கருதப்படும் ரான் குச் பகுதியில் வைத்தும் இவ்வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகையால், இந்த வாகனம் எந்த மாதிரியான சூழல் கொண்ட நில பரப்பையும் அசால்ட் செய்துவிடும் என்பது தெளிவாக தெரிகின்றது.

இந்த வாகனத்தில் நவீன ஒளியியல் மற்றும் பார்வைத் திறன் கொண்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. போர் வீரர்களுக்கு பயனளிக்கும் விதமாக இன்னும் பல கவசங்களும், ஆயுத வசதிகளும் கல்யாணி எம்4 -இல் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன், இதன் அதீத வேக திறனுக்காக 460 குதிரைத் திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 45 கல்யாணி எம்4 ரக கவச வாகனங்களுக்கு இந்தியா ஆர்டர் கொடுத்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், 23 கவச வாகனங்கள் சர்வதேச அமைதி காக்கும் பணிகளுக்காக இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றன.

கல்யாணி எம்4 பாதுகாப்பு கவச வாகனத்தை ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பாரத் ஃபோர்ஜின் சிஎம்டி பாபா என் கல்யாணி பேசியதாவது, "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கல்யாணி எம்4-ஐ ஐநா அமைதி காக்கும் பணிகளுக்காக வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். இது நமது ஆயுதப் படைகளின் நலனுக்காகப் பணியாற்றும். மேலும், இது நமது பிரதமரின் ஆத்மநிர்பர்தா மற்றும் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவுக்கான பார்வையைப் பயன்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications








