வாரி வழங்கும் மனசு! இயக்குநருக்கு ஃபெர்ராரி காரை பரிசளித்த தயாரிப்பாளர்... கமல்ஹாசனையே மிஞ்சிட்டாரு!
நடிகர் கமலஹாசனையே மிஞ்சும் வகையில் இங்கு ஓர் தயாரிப்பாளர் தனது படத்தை இயக்கிய இயக்குநருக்கு விலையுயர்ந்த சொகுசு காரை பரிசாக வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஃபெர்ராரி நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் எஃப்8 ட்ரிபியூடோ (Ferrari F8 Tributo)-வும் ஒன்று. இது ஓர் மிட்-எஞ்ஜின் கொண்ட ஸ்போர்ட்ஸ் ரக காராகும். இருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கின்ற வகையில் இரு இருக்கை அமைப்புடன் இக்கார் சந்தையில் விற்பனையில் இருக்கின்றது. இத்தகைய ஓர் சூப்பர் காரையே பிரபல தயாரிப்பாளர் ஒருவர் முன்னணி இயக்குநர் ஒருவருக்கு பரிசாக வழங்கியிருக்கின்றார்.

தயாரிப்பாளர் பூஷன் குமாரே ஃபெர்ராரி எஃப்8 ட்ரிபியூடோ காரை பரிசாக வழங்கியவர் ஆவார். விரைவில் வெளி வரவிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்திற்காக சிறப்பாக இயற்றிய காரணத்திற்காக இயக்குநர் ஓம் ராவத்திற்கு இக்காரை அவர் பரிசாக வழங்கியிருக்கின்றார். பரிசாக வழங்கப்பட்டிருக்கும் ஃபெர்ராரி எஃப்8 ட்ரிபியூடோ புதிய வாகனம் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது.

இது தயாரிப்பாளர் பூஷன் குமாரின் பயன்பாட்டில் இருந்த வாகனம் ஆகும். இக்கார் பிரபல தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பூஷன் குமாருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே அக்கார் ஓம் ராவத்திற்கு பூஷன் பரிசாக வழங்கியிருக்கின்றார். ஒரு சில மாத பயன்பாட்டிற்கு பின்னரை இக்காரை பரிசாக வழங்கியிருக்கின்றார்.

இந்த வாகனம் அதிக வேகத்தில் பறக்க (பயணிக்க)-க் கூடிய வாகனம் ஆகும். இதன் அதீத சூப்பர் ஃபாஸ்ட் வேக திறனுக்காக 3.9 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 710 பிஎச்பி பவரையும், 770 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 340 கிமீ ஆகும்.

அதேவேலையில், வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் கொண்டதாக இந்த கார் இருக்கின்றது. இத்தகைய சூப்பரான காரையே ஓம் ராவத்திற்கு தயாரிப்பாளர் பூஷன் குமார் பரிசாக வழங்கியிருக்கின்றார்.

இந்த காரில் ஃபெர்ராரி நிறுவனம் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனையே வழங்கியிருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு கருவிகளை ஃபெர்ராரி வழங்கியிருக்கின்றது. சைடு ஸ்லிப் கன்ட்ரோல் 6.1 மற்றும் ஃபெர்ராரி டைனமிக் என்சேன்ஸர் பிளஸ் ஆகிய அம்சங்களே வழங்கப்பட்டிருக்கின்றன.

இவையே காரின் அதிக வேகம் மற்றும் மிக சிறந்த கன்ட்ரோலுக்கு உதவியாக இருக்கின்றன. ஃபெர்ராரி நிறுவனம் தற்போது எஃப் ட்ரிபியூடோவை விற்பனைக்கு வழங்கவில்லை. இதற்கு பதிலாக 26 ஜிடிபி எனும் காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. 2022 செப்டம்பரிலேயே இந்த ரீபிளேஸை நிறுவனம் செய்தது. தற்போது விற்பனையில் இருக்கும் 488 ஜிடிபி ரூ. 4.02 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது.
தயாரிப்பாளர் பூஷன் குமார் இதுபோன்று விலையுயர்ந்த சொகுசு காரை பரிசாக வழங்குவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக நடிகர் ஆர்யனுக்கு பிராண்ட் நியூ மெக்லேரன் ஜிடி காரை பரிசாக வழங்கியிருந்தார். இந்த காரின் மதிப்பு ரூ. 3.5 கோடி ஆகும். இந்த நிலையிலேயே தற்போது இயக்குநருக்கு விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் திரும்பி பார்க்க செய்திருக்கின்றார்.
தயாரிப்பாளர் பூஷன் குமார் இடத்தில் எக்கசக்கமான எண்ணிக்கையில் சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan), ஃபெர்ராரி 458 இத்தாலியா (Ferrari 458 Italia), பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் (Bentley Flying Spur), மெர்சிடிஸ் மேபேக் எஸ்500 (Mercedes-Maybach S500) மற்றும் ஆடி ஆர்8 ஸ்பைடர் (Audi R8 Spyder) உள்ளிட்ட பன்முக சொகுசு கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார்.


Click it and Unblock the Notifications








