பாலை டெலிவரி கொடுப்பதற்காக பால்காரரே உருவாக்கிய வினோத வாகனம்! பாக்க எஃப்1 ரேஸ் வாகனம் மாதிரி இருக்கு!
பால்காரர் ஒருவர் பாலை டெலிவரி செய்வதற்காக எஃப்1 ரேஸ் வாகனத்தைபோன்றிருக்கும் ட்ரைக் ரக மூன்று சக்கர வாகனத்தை உருவாக்கியிருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

நம்ம ஊரு பால்காரர் ஒருவர் தனக்கான பால் டெலிவரி வாகனத்தை அவரே வடிவமைத்திருக்கும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. மூன்று சக்கரங்கள் கொண்ட ட்ரைக் ரக வாகனத்தையே அவர் வடிவமைத்திருக்கின்றார். இந்தியாவில் இந்த ரக வாகனங்களுக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை.

எனவேதான் அவற்றை சாலைகளில் காண்பது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது. அதேநேரத்தில், ஒரு சிலர் ட்ரைக் ரக வாகனங்களை அதிகம் விரும்பக் கூடிய நபர்களாக இருக்கின்றனர். அத்தகையோர், தனக்கான ட்ரைக் ரக வாகனத்தை பெருந்தொகை கொடுத்து வாங்கிக் கொள்கின்றனர்.

ஆனால், இதை செய்ய முடியாதவர்கள் தங்களின் ட்ரைக் வாகன கனவை கனவாகவே வைத்துக் கொள்ளுகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஓர் பால்காரரே அவருக்கான ட்ரைக் வாகனத்தை அவரை வடிவமைத்திருப்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது.

ஆனால், அவர் அந்த வாகனத்தை எப்படி வடிவமைத்தார்?, எவ்வளவு ரூபாய் செலவு செய்தார்?, என்ன மாதிரியான யுக்திகளைக் கையாண்டார் என்பது போன்ற முக்கிய விபரங்கள் வெளியாகவில்லை. தற்போது, வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோ வாயிலாகவே பால்காரர் அவருக்கான ட்ரைக் வாகனத்தை உருவாக்கியிருப்பது தெரிய வந்திருக்கின்றது.

பால்காரரின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவையும் பால்காரரின் இந்த செயல் வியப்பில் மூழ்க செய்திருக்கின்றது. பால்காரர் உருவாக்கியிருப்பது, மின்சாரத்தால் இயங்கக் கூடிய ட்ரைக் வாகனம் என்பது கூடுதல் ஆச்சரியமளிக்கும் தகவலாக உள்ளது.

வாகனத்தின் முன்பக்கத்தில் இன்வெர்ட்டர் அளவிலான பேட்டரிகள் இரண்டு இடம் பெற்றிருக்கின்றன. அதேநேரத்தில், வாகனத்தில் எக்சாஸ்ட் மற்றும் எஞ்ஜின் போன்ற அம்சங்களையும் காண முடியவில்லை. மாறாக மின் மோட்டார் போன்ற சில அம்சங்களே இடம் பெற்றிருக்கின்றன.

இவற்றை வைத்தே அது மின்சாரத்தால் இயங்கும் வாகனம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. மேலும், இதனை பார்க்கும் போது எஃப்1 ரேஸ்களில் பயன்படுத்தக் கூடிய வாகனத்தைப் போன்றும் காட்சியளிக்கின்றது. எஃப்1 ரேஸ் வாகனங்களில் பின்பக்கத்தில் இரண்டு வீல்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால், பால்காரர் உருவாக்கியிருக்கும் வாகனத்தில் முன் பக்கத்தில் இரு வீல்கள் பயன்படுத்தப்படுள்ளன.

அதேபோல், எஃப்1 ரேஸ் வாகனங்களின் முகப்பு பகுதி அதிக கூர்மையானதாக இருக்கும். ஆனால், பால்காரர் வாகனத்தின் பின் பக்கம் கூர்மையானதாக இருக்கின்றது. இத்தகைய ஓர் வாகனத்திலேயே பாலை அந்த நபர் டெலிவரி எடுத்துச் சென்றிருக்கின்றார். இந்த நிகழ்வை வழிபோக்கி ஒருவரே அவரின் செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.

இந்த வைரல் வீடியோவையே பார்த்து ஆனந்த் மஹிந்திரா மெய்சிலிர்த்து போயிருக்கின்றார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் ஓர் பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், "இந்த வாகனம் சாலை பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக உருவாக்கப்பட்டிருக்கின்றதா என்பது தெரியவில்லை. ஆனால், வாகனங்களின் மீது அதீத ஆர்வம் கொண்டவர் அந்த நபர் என்பது தெளிவாக தெரிகின்றது. நான் பார்த்த மிக சிறந்த வாகனம் இது. இந்த வாகனத்தை சந்திக்க நான் விரும்புகின்றேன்" என பதிவிட்டுள்ளார்.

நமக்கும் இத்தகைய ஆசை மனதில் எழும்பியிருக்கின்றது. ஆனால், இந்திய வாகன சட்டம், விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்களை சாலையில் பயன்படுத்துவது சட்டத்திற்கு புரம்பானது என கூறுகின்றது. வாகன உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களின் உருவத்தை மாற்றி (மாடிஃபை செய்து)க் கொள்ளவும் இந்திய வாகன சட்டம் அனுமதிக்கவில்லை.
இருப்பினும், சிலர் தங்களின் வாகனங்களை மாற்றியமைத்து வருகின்றனர். இந்த நிலை போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக அமைகின்றது. எனவேதான், மாடிஃபிகேஷன் வாகனங்களை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தேடிபிடித்து பயன்பாட்டில் இருந்து அகற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








