இந்த விலைக்கு இப்படி ஒரு காரா!.. நீண்ட தூரம் பயணிக்கும் பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் ஐ4 (BMW i4) எனும் செடான் ரக எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்த விலைக்கு இப்படி ஒரு காரா!.. நீண்ட தூரம் பயணிக்கும் பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW), இந்தியாவில் ஐஎக்ஸ் (BMW iX)எனும் மின்சார கார் மாடலை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இது ஓர் அதிக விலைக் கொண்ட ஆடம்பர எஸ்யூவி ரக வாகனமாகும். ரூ. 1.15 கோடி என்ற மிக உயரிய விலையையே ஆரம்ப விலையாகக் கொண்டு இந்த சொகுசு கார் நாட்டில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த விலைக்கு இப்படி ஒரு காரா!.. நீண்ட தூரம் பயணிக்கும் பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரைத் தொடர்ந்து தனது இரண்டாவது மின்சார தயாரிப்பாக மற்றுமொரு எலெக்ட்ரிக் காரையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. ஐ4 (BMW i4) எனும் மாடலையே அது தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் சொகுசு வசதிகள் நிரம்பிய செடான் ரக காராகும்.

இந்த விலைக்கு இப்படி ஒரு காரா!.. நீண்ட தூரம் பயணிக்கும் பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!

இதனை தனது விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இந்திய மின் வாகன சந்தையில் பிஎம்டபிள்யூ விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஒற்றை தேர்வில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைக்கும். ஐ4 இ-டிரைவ்40 ஸ்போர்ட் (i4 eDrive40 Sport) என்ற ஒற்றை தேர்வு மட்டுமே நாட்டில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதன் விலை ரூ. 69.90 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த விலைக்கு இப்படி ஒரு காரா!.. நீண்ட தூரம் பயணிக்கும் பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!

இந்த காரின் அறிமுக சிறப்பு சலுகையாக பிஎம்டபிள்யூ வால்பாக்ஸ் சார்ஜர் இலவசமாக இன்ஸ்டால் செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரை சிபியூ வாயிலாகவே விற்பனைக்கு கொண்டு வந்திருக்கின்றது. எனவேதான் அதன் விலை சற்று அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது.

இந்த விலைக்கு இப்படி ஒரு காரா!.. நீண்ட தூரம் பயணிக்கும் பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!

மினரல் வெள்ளை (Mineral White), பிளாக் சஃபையர் (Black Sapphire) மற்றும் ஸ்கைஸ்கிராபர் கிரே (Skyscraper Grey) ஆகிய முன்று விதமான மெட்டாலிக் பெயிண்ட் வேலையிலேயே ஐ4 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அதேவேலையில், இக்காரின் இருக்கைகளில் மாற்று நிறங்களாக கேன்பெர்ரா பீஜ் மற்றும் கோக்னக் கலர் ஸ்கீம்கள் வழங்கப்பட இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

இந்த விலைக்கு இப்படி ஒரு காரா!.. நீண்ட தூரம் பயணிக்கும் பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!

தொடர்ந்து, கூடுதல் சிறப்பு அலங்கார பொருட்களையும் ஆப்ஷனலாக பிஎம்டபிள்யூ இக்காருக்கு அறிவித்திருக்கின்றது. எம் ஏரோடைனமிக் கிட் எனும் பெயரில் அது விற்பனைக்குக் கிடைக்கும். பிரத்யேக பம்பர்கள், 18 அல்லது 19 அங்குல அலாய் வீல்கள் மற்றும் உயர் ரக கிளாஸ் பிளாக் நிறத்திலான கூடுதல் அலங்காரப் பொருட்களே இந்த பேக்கின்கீழ் நிறுவனம் வழங்கும்.

இந்த விலைக்கு இப்படி ஒரு காரா!.. நீண்ட தூரம் பயணிக்கும் பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!

இத்துடன், பிஎம்டபிள்யூ ஐ4 காருக்கு பிரத்யேகமாக இரண்டு ஆண்டுகள் வாரண்டி, அன்லிமிடெட் கிலோமீட்டர்களுடன் வழங்கப்பட இருக்கின்றது. இத்துடன், சிறப்பு ஃபினான்சியல் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுல்ளன. ஃபிளக்ஸி மற்றும் கஸ்டமைஸ்டு ஓவ்னர்ஷிப் திட்டங்களும் இக்காருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக்கு இப்படி ஒரு காரா!.. நீண்ட தூரம் பயணிக்கும் பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ ஐ4 எலெக்ட்ரிக் காரில் 80.7 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 590 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். வழக்கமான சார்ஜிங் பாயிண்டில் வைத்து இப்பேட்டரியை சார்ஜ் செய்யும்போது முழுமையாக சார்ஜாக 8 மணி நேரம் வரை அது எடுத்துக் கொள்ளும். அதுவே, 205 kW DC சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்தால் வெறும் 31 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை ஏற்றிக் கொள்ளும்.

இந்த விலைக்கு இப்படி ஒரு காரா!.. நீண்ட தூரம் பயணிக்கும் பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!

இக்காரில் 340 பிஎஸ் மற்றும் 430 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக மணிக்கு 190 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியது. அதேநேரத்தில் இது 5.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 எனும் வேகத்தை எட்டிவிடும்.

இந்த விலைக்கு இப்படி ஒரு காரா!.. நீண்ட தூரம் பயணிக்கும் பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!

கூடுதல் சிறப்பு வசதிகளாக ஐ4 எலெக்ட்ரிக் காரில் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் 14.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், லேட்டஸ்ட் தொழில்நுட்பமாக ஐ-டிரைவ்8 யுஐ அம்சமும் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றது. இது ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பைப் பெறவும், ஓடிஏ அப்டேட்டுகளைப் பெறவும் வழி வகுக்கின்றது.

இந்த விலைக்கு இப்படி ஒரு காரா!.. நீண்ட தூரம் பயணிக்கும் பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்!

மேலும், 3 ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஒயர்லெஸ் ஸ்மார்ட் போன் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், பவர் அட்ஜஸ்டபிள் முன்பக்க இருக்கைகள், ஆம்பியன்ட் கேபின் லைட்டுகள், 360 டிகிரி கார் பார்க்கிஹ் கேமிரா, ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், கார் இணைப்பு தொழில்நுட்பம் உள்ளிட்டவையும் ஐ4 மின்சார காரில் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய சிறப்பான அம்சங்களுடனேயே பிஎம்டபிள்யூ ஐ4 இ-டிரைவ்40 இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 26, 2022, 17:49 [IST]
English summary
Bmw i4 electric sedan launched in india at inr 69 90 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+