பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... என்ன!! விலை இவ்ளோ அதிகமா?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்4 (BMW X4) சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரின் வருகை ஆடம்பர கார்கள் பிரியர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதற்கான காரணம் மற்றும் கார் பற்றிய இன்னும் பல முக்கிய தகவலையே இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... என்ன!! விலை இவ்ளோ அதிகமா?

ஆடம்பர வாகன விரும்பிகளின் மிக பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்4 (BMW X4) சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரும் பேசு பொருளாக இருந்து வந்த இக்கார், இந்தியாவில் விற்பனைக்கு வந்திருப்பது தொழிலதிபர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... என்ன!! விலை இவ்ளோ அதிகமா?

தோற்றத்தில் பன்மடங்கு மாற்றத்துடனும், புதிய தொழில்நுட்பங்கள் சேர்ப்புடனும் இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதுமட்டுமின்றி இக்காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் சென்னை உற்பத்தி ஆலையில் வைத்து தயாரித்திருக்கின்றது. இதுபோன்ற பன்முக காரணங்களினாலயே இக்கார் மீது பெரும் எதிர்பார்ப்பு இந்திய சொகுசு வாகன விரும்பிகள் மத்தியில் நிலவியது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... என்ன!! விலை இவ்ளோ அதிகமா?

டீசல் மற்றும் பெட்ரோல் என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் இக்கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் ஆரம்ப விலை ரூ. 70 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இது பிஎம்டபிள்யூ எக்ஸ்4 எக்ஸ்-டிரைவ் 30ஐ (BMW X4 xDrive30i) வேரியண்டின் விலையாகும். மற்றுமொரு வேரியண்டான எக்ஸ்4 எக்ஸ்-டிரைவ் 30டி (BMW X4 xDrive30d)-க்கு 72 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரு வேரியண்டுகளிலேயே புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... என்ன!! விலை இவ்ளோ அதிகமா?

இதுதவிர பிரத்யேகமாக 'பிளாக் ஷேடோவ்' (Black Shadow) எனும் சிறப்பு பதிப்பிலும் எக்ஸ்4 விற்பனைக்குக் கிடைக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை மிக மிக குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது, பிஎம்டபிள்யூ நிறுவனம். ஆனால், எத்தனை யூனிட்டுகள் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன என்பது தெரியவில்லை. பிளாக் சஃபையர் மற்றும் எம் ப்ரூக்ளின் கிரே மெட்டேலிக் ஆகிய இரு விதமான வண்ண பூச்சு தேர்வுகளிலேயே பிஎம்டபிள்யூ எக்ஸ்4 விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... என்ன!! விலை இவ்ளோ அதிகமா?

இவையிரண்டிலும் கருப்பு நிற தையல்கள் கொண்ட மற்றும் வெர்னஸ்கா லெதர் போர்த்தப்பட்ட இருக்கைகளே இடம் பெற்றிருக்கும். இதுமட்டுமின்றி இன்னும் சில தனித்துவமான அம்சங்களையும் இவை பெற்றிருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, பனோரமா சன்ரூஃப், ஆம்பிசியன்ட் மின் விளக்கு, வெல்கம் லைட் கார்பெட், பிஎம்டபிள்யூ காக்பிட், 3டி நேவிகேஷன், 12.3 இன்ச் அளவுள்ள டிஜிட்டல் இன்ஃபர்மேஷன் திரை, 12.3 இன்ச் அளவுள்ள கன்ட்ரோல் திரை மற்றும் பிஎம்டபிள்யூ ஹெட்ஸ்-அப் திரை உள்ளிட்டவை இக்காரில் இடம் பெற்றிருக்கும்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... என்ன!! விலை இவ்ளோ அதிகமா?

இக்காரில் அதி திறனை வெளிப்படுத்தக் கூடிய எஞ்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எக்ஸ்4 எக்ஸ் டிரைவ் 30டி வேரியண்டில் 265 எச்பி பவர் மற்றும் 620 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மோட்டாரும், எக்ஸ்4 எக்ஸ் டிரைவ் 30ஐ வேரியண்டில் 252 எச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் மோட்டாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... என்ன!! விலை இவ்ளோ அதிகமா?

இவையிரண்டும் அதி திறனை வெளியேற்றக் கூடியவை ஆகும். முதலில் பார்த்த எஞ்ஜின் வெறும் 5.8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தையும், அடுத்த மோட்டார் வெறும் 6.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தையும் எட்டக் கூடியதாக இருக்கின்றன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... என்ன!! விலை இவ்ளோ அதிகமா?

ஆகையால், புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்4 அதிக கவர்ச்சியான வாகனம் மட்டுமல்ல அதிக திறனை வெளியேற்றக் கூடிய காரும் என்பது தெரிகின்றது. இதுமட்டுமின்றி இந்த சொகுசு கார் அதிக பாதுகாப்பான காராகவும் காட்சியளிக்கின்றது. ஆறு ஏர் பேக்குகள், அட்டன்டீவ்னஸ் அசிஸ்டன்ஸ், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளனது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ எக்ஸ்4 சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்... என்ன!! விலை இவ்ளோ அதிகமா?

இதுதவிர, ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், சைடு இம்பேக்ட் புரடெக்சன், எலெக்ட்ரானிக் வெயிக்கிள் இம்மொபிலைசர் மற்றும் கிராஷ் சென்சார், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை மவுண்ட் மற்றும் இன்டெக்ரோடட் எமர்ஜென்சி ஸ்பேர் வீல் உள்ளிட்டவையும் எக்ஸ்4 காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, March 10, 2022, 16:13 [IST]
English summary
Bmw launched x4 in india at rs 70 50 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+