டீசல் எஞ்ஜினிலும் வந்தாச்சு! எக்ஸ் 3 கார் மாடலை புதிய எஞ்ஜின் தேர்வால் அலங்கரித்த பிஎம்டபிள்யூ!

பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடலான எக்ஸ்3 (X3) இல் புதிதாக டீசல் எஞ்ஜின் தேர்வை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

டீசல் எஞ்ஜினிலும் வந்தாச்சு! எக்ஸ் 3 கார் மாடலை புதிய எஞ்ஜின் தேர்வால் அலங்கரித்த பிஎம்டபிள்யூ... இனி சேல்ஸ் பிச்சுக்க போகுது!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு மாபெரும் விற்பனை வளர்ச்சியைச் சந்தித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம் 42.5 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சியை 2021ம் ஆண்டில் பெற்றிருக்கின்றது. இதற்கு நிறுவனம் அதிக துடிப்புடன் இந்தியாவில் செயல்பட்டதே மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கின்றது. நிறுவனம் ஒட்டுமொத்தமாக 13 புதிய கார் மாடல்களைப் போன வருடம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

டீசல் எஞ்ஜினிலும் வந்தாச்சு! எக்ஸ் 3 கார் மாடலை புதிய எஞ்ஜின் தேர்வால் அலங்கரித்த பிஎம்டபிள்யூ... இனி சேல்ஸ் பிச்சுக்க போகுது!

இதே யுக்தியை பயன்படுத்தி நடப்பாண்டிலும் மிக சிறந்த சொகுசு விற்பனையாளராக திகழ பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதன் அடிப்படையில் பல்வேறு புதுமுகங்களை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர அது ஆலோசித்து வருகின்றது. இந்த நிலையில், பென்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாக செயல்படும் வகையில் பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டீசல் எஞ்ஜினிலும் வந்தாச்சு! எக்ஸ் 3 கார் மாடலை புதிய எஞ்ஜின் தேர்வால் அலங்கரித்த பிஎம்டபிள்யூ... இனி சேல்ஸ் பிச்சுக்க போகுது!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் புதுமுகங்களை இந்தியாவில் களமிறக்குவதில் அதிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. நடப்பாண்டின் தொடக்க மாதமான ஜனவரியில் சில மாடல்களை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்தநிலையில் அவற்றின் தேர்வுகளை விரிவாக்கம் செய்யும் பணியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது.

டீசல் எஞ்ஜினிலும் வந்தாச்சு! எக்ஸ் 3 கார் மாடலை புதிய எஞ்ஜின் தேர்வால் அலங்கரித்த பிஎம்டபிள்யூ... இனி சேல்ஸ் பிச்சுக்க போகுது!

நிறுவனம் போன மாதம் தொடக்கத்தில் எக்ஸ்3 (X3) எனும் எஸ்யூவி ரக சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் தேர்வையே தற்போது நிறுவனம் விரிவாக்கம் செய்திருக்கின்றது. இந்த மாடலில் டீசல் எஞ்ஜின் தேர்வையே நிறுவனம் புதியதாக தற்போது அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த டீசல் வேரியண்ட் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ்20டி (BMW X3 xDrive20d) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கு அறிமுக விலையாக ரூ. 65.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டீசல் எஞ்ஜினிலும் வந்தாச்சு! எக்ஸ் 3 கார் மாடலை புதிய எஞ்ஜின் தேர்வால் அலங்கரித்த பிஎம்டபிள்யூ... இனி சேல்ஸ் பிச்சுக்க போகுது!

ஏற்கனவே, எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ ஸ்போர்ட்-எக்ஸ் ப்ளஸ் (X3 xDrive 30i SportX Plus) மற்றும் எக்ஸ்3 டிரைவ் 30ஐ எம் ஸ்போர்ட் (X3 xDrive 30i M Sport) ஆகிய வேரியண்டுகளில் இந்த எஸ்யூவி சொகுசு கார் விற்பனைக்கு கிடைத்து வருகின்றது. இவற்றின் வரிசையிலேயே புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ்20டி டீசல் வேரியண்ட் தற்போது இணைந்திருக்கின்றது.

டீசல் எஞ்ஜினிலும் வந்தாச்சு! எக்ஸ் 3 கார் மாடலை புதிய எஞ்ஜின் தேர்வால் அலங்கரித்த பிஎம்டபிள்யூ... இனி சேல்ஸ் பிச்சுக்க போகுது!

ஏற்கனவே விற்பனையில் இருப்பவை ரூ. 59.90 லட்சம் மற்றும் ரூ. 65.90 லட்சம் என்ற அதிகபட்ச விலையில் கிடைத்து வருகின்றன. எந்த மாற்றமும் இன்றி புதிய டீசல் வேரியண்ட் விற்பனைக்கு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த காரில் டர்போசார்ஜட் டீசல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

டீசல் எஞ்ஜினிலும் வந்தாச்சு! எக்ஸ் 3 கார் மாடலை புதிய எஞ்ஜின் தேர்வால் அலங்கரித்த பிஎம்டபிள்யூ... இனி சேல்ஸ் பிச்சுக்க போகுது!

2.0 லிட்டர் 4 சிலிண்டர் ட்வின் டர்போ டீசல் எஞ்ஜினே இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 190 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் மணிக்கு 213 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடியது. மேலும், வெறும் 7.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு நூறு கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் இதுக் கொண்டிருக்கின்றது.

டீசல் எஞ்ஜினிலும் வந்தாச்சு! எக்ஸ் 3 கார் மாடலை புதிய எஞ்ஜின் தேர்வால் அலங்கரித்த பிஎம்டபிள்யூ... இனி சேல்ஸ் பிச்சுக்க போகுது!

இந்த காரில் பிஎம்டபிள்யூ நிறுவனம் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் தேர்வை வழங்குகின்றது. இத்துடன் தானியங்கி ஹோல்ட் மற்றும் பேடில் ஷிஃப்டர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதல் சிறப்பாக அனைத்து வீல் இயக்கம் வசதியும் வழக்கமான அம்சமாக இதில் வழங்கப்பட்டுள்ளது.

டீசல் எஞ்ஜினிலும் வந்தாச்சு! எக்ஸ் 3 கார் மாடலை புதிய எஞ்ஜின் தேர்வால் அலங்கரித்த பிஎம்டபிள்யூ... இனி சேல்ஸ் பிச்சுக்க போகுது!

இதுமட்டுமின்றி ஹில் டெசண்ட் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்களும் இச்-சொகுசு காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் ஈகோ ப்ரோ, கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. உருவத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

டீசல் எஞ்ஜினிலும் வந்தாச்சு! எக்ஸ் 3 கார் மாடலை புதிய எஞ்ஜின் தேர்வால் அலங்கரித்த பிஎம்டபிள்யூ... இனி சேல்ஸ் பிச்சுக்க போகுது!

ஆகையால், பெட்ரோல் வெர்ஷனை போலவே தற்போதைய புதிய வருகை டீசல் வெர்ஷனும் காட்சியளிக்கின்றது. பெரிய கிட்னி க்ரில், மேட்ரிக்ஸ் ரக அடாப்டீவ் எல்இடி ஹெட்லைட், 19 இன்ச் அலாய் வீல், இரட்டை எக்சாஸ்ட் குழாய்கள் மற்றும் ஸ்போர்ட்டியர் பம்பர் உள்ளிட்டவை காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக வழங்கப்பட்டுள்ளன.

டீசல் எஞ்ஜினிலும் வந்தாச்சு! எக்ஸ் 3 கார் மாடலை புதிய எஞ்ஜின் தேர்வால் அலங்கரித்த பிஎம்டபிள்யூ... இனி சேல்ஸ் பிச்சுக்க போகுது!

சொகுசு மற்றும் பிரீமியம் அம்சங்களும் இக்காரில் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், மிருதுவான இருக்கைகள், பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்போர்ட் ஸ்டியரிங் வீல், எலெக்ட்ரிக் இருக்கை அட்ஜெஸ்ட்மென்ட் வசதி, பனோரமிக் கிளாஸ் ரூஃப், ஆம்பிசியண்ட் மின் விளக்குகள் மற்றும் மூன்று ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவை இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

டீசல் எஞ்ஜினிலும் வந்தாச்சு! எக்ஸ் 3 கார் மாடலை புதிய எஞ்ஜின் தேர்வால் அலங்கரித்த பிஎம்டபிள்யூ... இனி சேல்ஸ் பிச்சுக்க போகுது!

இதுதவிர, 3டி நேவிகேஷன், 12.3 இன்ச் அளவுள்ள தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (கெஸ்சர் கன்ட்ரோல், ஆப்பிள் கார்-ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது), ஹர்மேன் கார்டோன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

டீசல் எஞ்ஜினிலும் வந்தாச்சு! எக்ஸ் 3 கார் மாடலை புதிய எஞ்ஜின் தேர்வால் அலங்கரித்த பிஎம்டபிள்யூ... இனி சேல்ஸ் பிச்சுக்க போகுது!

அதிக பாதுகாப்பான பயணத்தை வழங்கும் பொருட்டு ஆறு ஏர் பேக்குகள், பார்க்கிங் அசிஸ்டண்ட் ப்ளஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, அட்டன்டீவ்னஸ் அசிஸ்டன்ஸ், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்ட் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் பார்கிங் பிரேக், சைடு இம்பேக்ட் புரடெக்சன், எலெக்ட்ரானிக் வெஹிக்கிள் இம்மொபிளைசர் மற்றும் கிராஷ் சென்சார்கள் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, February 17, 2022, 18:07 [IST]
English summary
Bmw launches x3 diesel option in india here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+