41வது பிறந்த நாளை விலை உயர்ந்த புதிய காருடன் கொண்டாடும் பிரபல நடிகர்... இவ்ளோ அதிக விலையா! தலையே சுத்துது!
பிரபல நடிகர் ஒருவர் அவரது 41-வது பிறந்த நாளை மிக மிக விலையுயர்ந்த காருடன் கொண்டாடியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் புதிதாக வாங்கியிருக்கும் காரின் விலை மற்றும் சிறப்புகள் பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய 41வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக விலையுயர்ந்த காரை பென்ஸ் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரம் ஷாகித் கபூர், இவரே விலையுயர்ந்த காரை வாங்கியவர் ஆவார். இவர் மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 (Mercedes-Maybach S580) காரையே வாங்கியிருக்கின்றார்.

இந்தியாவில் இந்த சொகுசு கார் ரூ. 3.79க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது ஆன்-ரோடு விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய விலையுயர்ந்த சொகுசு காரையே நேற்றை (பிப்ரவரி 28) தினம் அவர் டெலிவரி பெற்றிருக்கின்றார். ஷாகித் கபூரும் அவரது மனைவி மிரா ராஜ்பூத் ஆகிய இருவரும் டெலிவரி பெற்றிருக்கின்றனர்.

சொகுசு கார்களின் அரசன் என கூறுமளவிற்கு மிக அதிகளவில் லக்சூரி அம்சங்களை தனக்குள் வைத்திருக்கும் காராக மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 காட்சியளிக்கின்றது. எனவேதான் திரை நட்சத்திரங்கள் தொடங்கி முன்னணி தொழிலதிபர்கள் வரை பலரை இக்கார் தன் பக்கம் வளைத்துப் போட்டிருக்கின்றது. அதேநேரத்தில், ஷாகித் கபூர் இடத்திலேயே மற்றுமொரு எஸ்-கிளாஸ் காரும் பயன்பாட்டில் இருக்கின்றது. இது ஓர் முந்தைய தலைமுறை வெர்ஷனாகும்.

ஏஎம்ஜி கிட்டுன் இந்த கார் மிகவும் ஸ்போர்ட்டியான ஸ்டைலில் காட்சியளிக்கின்றது. இந்த பழைய தலைமுறை வாகனத்தில் 329 பிஎச்பி பவர் மற்றும் 480 என்எம் டார்க்கை வெளியேற்றும் 3.0 வி6 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 1.3 கோடிகள் ஆகும். இந்த நிலையிலேயே புதிய தலைமுறை மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 சொகுசு காரை நடிகர் வாங்கியிருக்கின்றார்.

இதுமட்டுமின்றி இன்னும் பல விலையுயர்ந்த கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையிலேயே மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 காரை அவர் வாங்கியிருக்கின்றார். இந்த காரை மெர்சிடிஸ் நிறுவனம் கடந்த ஆண்டே நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் உற்பத்தியை நிறுவனம் உள்ளூர் மயமாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
சக்கன் ஆலையில் வைத்தே மேபேக் எஸ்580 கார் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 503 பிஎஸ் பவர் மற்றும் 700 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இத்துடன், 48 வோல்ட் ஹைபிரிட் தொழில்நுட்பமும் இக்காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த சிஸ்டம் மிக சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்க உதவும். இத்துடன், 9 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் வசதியும் இக்காரில் இணைக்கப்பட்டிருக்கின்றது. மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 அதிக சொகுசு வசதிகளைத் தாங்கிய வாகனம் மட்டுமில்லைங்க, அது அதிக வேகத்தில் பயணிக்கும் காரும்கூட. மணிக்கு 250 கிமீ வேகத்தில் இது பயணிக்கும். இத்துடன் பன்முக டிரைவிங் மோட்களும் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான இயக்க திறனை வெளிப்படுத்தக் கூடியவை ஆகும். காரின் உட்பகுதி பிரீமியம் தர அம்சங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. புதிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, டேப்ளட் போன்று காட்சியளிக்கும். 12.8 இன்ச் அளவில் இதுக் காட்சியளிக்கின்றது. எம்பியூஎக்ஸ் சிஸ்டமும் இக்காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இதுதவிர, 12.3 இன்ச் அளவுள்ள டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் திரை 3டி பார்வை வசதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது டிரைவருக்கான சிறப்பம்சம் ஆகும். இதேபோல் பின் பக்க பயணிகள் தங்களது பயணத்தை சுவாரஷ்யமானதாக மாற்றிக் கொள்ளும் வகையிலும் பன்முக அம்சங்களும் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், மசாஜ் செய்யும் வசதி, சத்தத்தை கட்டுப்படுத்தும் வசதி கொண்ட கண்ணாடிகள், ஆம்பிசியண்ட் மின் விளக்குகள், நான்கு ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பின் பக்கத்தில் டிரே மற்றும் சிறிய குளிர்சாதன பெட்டி போன்ற எக்கசக்க அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று எண்ணற்ற சிறப்பு வசதிகளை தாங்கிய வாகனமாகவே மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 காட்சியளிக்கின்றது.

இத்தகைய ஆச்சரியமளிக்கும் வசதிகளை இதுக் கொண்டிருக்கின்றன காரணத்தினாலயே பலரைக் கவர்ந்து வருகின்றது. இதுமட்டுமின்றி ஷாகித் கபூரிடத்தில் ஜிஎல் கிளாஸ், எல்எல் கிளாஸ், லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் மற்றும் போர்ஷே கேயன்னே ஜிடிஎஸ் உள்ளிட்ட கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர, ஹார்லி டேவிடன் ஃபேட் பாய் போன்ற விலையுயர்ந்த பைக்கும் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








