இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்.. நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க!

முன்னணி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்... நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் கங்கனா ரனாவத்தும் ஒருவர். இவர் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக விலையுயர்ந்த சொகுசு வாகனம் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மெர்சிடிஸ் மேபேக் எஸ் 680 (Mercedes-Maybach S 680) சொகுசு காரையே அவர் வாங்கியிருக்கின்றார்.

இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்... நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க

இந்தியாவில் இந்த சொகுசு காருக்கு நல்ல டிமாண்ட் கிடைத்து வருகின்றது. குறிப்பாக, பாலிவுட் திரை பிரபலங்கள் இக்காருக்கு மிக சிறப்பான ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே கங்கனா ரனாவத்தும் இந்த சொகுசு காரை வாங்கியிருக்கின்றார். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 3.2 கோடி ஆகும்.

இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்... நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க

இத்தகைய பெருந்தொகையையே அசால்டாக செலுத்தி சொகுசு காரை கங்கனா தற்போது வாங்கியிருக்கின்றார். ஏற்கனவே பாலிவுட் திரையுலகில் பல மடங்கு அதிக செல்வாக்கு மிக்கவராக நடிகை இருக்கின்றார். இந்த லேட்டஸ்ட் கொள்முதல் அவரின் மதிப்பை இன்னும் பல மடங்கு அதிகரிக்க செய்துவிட்டது என்றே கூறலாம்.

இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்... நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க

மெர்சிடிஸ் மேபேக் எஸ் கிளாஸ் இரு விதமான வேரியண்டுகளில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எஸ் 580 (S 580) மற்றும் எஸ் 680 4 மேட்டிக் (S 680 4MATIC) என்ற இரு வேரியண்டுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில், கங்கனா உயர் நிலை வேரியண்டான எஸ் 680 4 மேட்டிக்கையே வாங்கியிருக்கின்றார். இந்த மாடலை மெர்சிடிஸ் நிறுவனம் சிபியூ (Completely Built Unit)-ஆக விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்... நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க

இந்த நிலையால்தான் மிக அதிக விலையில் இக்கார் விற்கப்படுகின்றது. இந்த கார் மிக தாரளமான இட வசதி மற்றும் சொகுசு அம்சங்களைக் கொண்ட தயாரிப்பாக காட்சியளிக்கின்றது. இதற்கேற்ப 180 மிமீ நீளமான வீல்பேஸில் இக்கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த மிக நீளமான அமைப்பு காருக்குள் இருப்பவர்களுக்கு கூடுதலான லெக்ரூமை வழங்குகின்றது.

இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்... நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க

மிக சொகுசான பயண அனுபவத்தை வழங்குவதற்காக இத்தகைய சிறப்பு வசதிகள் இக்காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் வழங்கப்பட்டுள்ள கதவுகளை மேனுவலாக திறக்க வேண்டிய அவசியம்கூட இருக்காது. ஏனெனில் இதனை திறப்பதற்கென பிரத்யேக எலெக்ட்ரிக்கல் வசதி வழங்கப்பட்டிருக்கின்றது. இதற்கான பொத்தான்களை அழுத்தினால் போதும் அது தானாகவே திறத்தல் மற்றும் மூடுதலை செய்யும்.

இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்... நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க

இதுபோன்று இன்னும் பல முக்கிய அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், காருக்குள் இருக்கும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக பக்கெட் ரக இருக்கைகள் இருக்கின்றன. இந்த இருக்கைகள் 19 டிகிரி முதல் 44 டிகிரி வரை சாயும் திறன் கொண்டவை ஆகும். இதுமட்டுமின்றி, மசாஜ், மிக சிறந்த காற்றோட்டம் மற்றும் கதகதப்பை வெளிப்படுத்தும் திறன்களும் இருக்கைகளில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்... நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க

இவற்றைக் கொண்டு மிக நீண்ட தூர பயணங்களைக் கூட மிகுந்த சுவாரஷ்யமானதாக மாற்றிக் கொள்ள முடியும். இதுமட்மின்றி பயணங்களை சுவாரஷ்யமானதாக மாற்றும் வகையில் இன்னும் பல சிறப்பு வசதிகளை இக்காரில் மெர்சிடிஸ் வாரி வழங்கியிருக்கின்றது. அந்தவகையில், எம்பியூஎக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அடங்கிய 12.8 இன்ச் திரை, 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 11.6 அங்குல பொழுதுபோக்கு திரை (பின்பக்கத்திற்காக), பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ரிமூவபிள் டேப்ளட்டுகள் உள்ளிட்டவையும் சொகுசு காரில் வழங்கப்பட்டிருக்கும்.

இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்... நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க

இதேபோல் இக்காரில் பாதுகாப்பு வசதிகளும் மிக தாரளமாக வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 13 ஏர்பேக்குகள், லெவல் 2 தன்னாட்சி டிரைவிங் வசதிக் கொண்ட் இவேஸிவ் ஸ்டியரிங் அசிஸ்ட் அம்சம் மற்றும் ஆக்டீவ் பிரக் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை காரை அவசர காலத்தில் தானாக இயக்குவது மற்றும் பிரேக் பிடித்தல் போன்ற செயல்களைச் செய்ய உதவும்.

இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்... நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க

மெர்சிடிஸ் மேபேக் எஸ் கிளாஸ் 680 4 மேடிக் காரில் வழங்கப்பட்டிருக்கும் எஞ்ஜினும் அதிக பவர்ஃபுல்லானதாகக் காட்சியளிக்கின்றது. 6.0 லிட்டர் வி12 மோட்டாரே அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 604 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும்.

இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்... நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க

இது, வெறும் 4.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இத்தகைய மிக சிறப்பான காரையே கங்கனா தற்போது வாங்கியிருக்கின்றார். இந்த கார் மட்டுமின்றி இன்னும் பல அரிய வகை கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்தியாவின் விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய கங்கனா ரனாவத்... நாட்டுல இந்த காரை கொஞ்சம் பேருதான் யூஸ் பண்றாங்க

அந்தவகையில், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ, ஆகிய க்யூ3 உள்ளிட்ட பல சொகுசு மற்றும் விலையுயர்ந்த கார்களை நடிகை பயன்படுத்தி வருகின்றார். இவர் நடிப்பு மட்டுமின்றி பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றார் அந்தவகையில் டிகு வெட்ஸ் ஷெரு எனும் படத்தை அவர் தயாரித்து வருகின்றார். வெகு விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வர இருக்கின்றது.

Article Published On: Saturday, May 21, 2022, 8:30 [IST]
English summary
Bollywood actress kangana ranaut buys mercedes maybach s 680
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+