நண்பர்கள் எல்லாம் சேர்ந்து செஞ்ச காரியம்... ஆடிபோன பிரபல நடிகை! அவங்க இத எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!
ராக்கி சவந்திற்கு அவரது நண்பர்கள் சேர்ந்து பிஎம்டபிள்யூ சொகுசு காரை பரிசாக வழங்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

ராக்கி சவந்த், இந்தி திரையுலகின் ஃபேமஸான நடிகைகளில் இவங்களும் ஒருவர். இவர் இந்தியில் மட்டுமின்றி இந்தியாவின் இன்னும் பல்வேறு மொழிகளிலும் நடித்திருக்கின்றார். தெலுங்கு, மராத்தி, கன்னடா, பெங்காலி மற்றும் போஜ்புரி ஆகிய மொழி திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். ஏன், நம்ம தமிழ் சினிமாவிலும் அவர் நடித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

"என்ன சொல்றீங்க!.. தமிழ் சினிமாவுல இவங்கள பார்த்ததா ஞாபகமே இல்லையே" அப்படினு மட்டும் சொல்லிடாதீங்க. ஏன்னா அவங்க தமிழ் திரைப்படங்களின் சில குத்தாட்ட பாடல்களில்தான் அவர் நடித்திருக்கின்றார். சரத்குமார் மற்றும் லைலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த கம்பீரம், என் சகியே, முத்திரை படங்களில் அவர் நடித்துள்ளார்.

இவர் சிறந்த நடன கலைஞர் ஆவார். ஆகையால், சில டிவி ஷோக்களிலும் இவர் கால் தடம் பதித்திருக்கின்றனர். மாடலாக வலம் வந்த வரலாறும் இவருக்கு உண்டு. இவ்வாறு பல ரோல்களை இவர் மேற்கொண்டதால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதேபோல் நண்பர்கள் வட்டாரமும் அதிகம்.

இந்த நிலையில்தான் ராக்கி சவந்தின் நண்பர்கள் சிலர் இணைந்து அவரை ஆச்சரியப்படுத்தும் ஓர் காரியத்தைச் செய்திருக்கின்றனர். அதாவது, பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு காரை ஆச்சரிய பரிசாக வழங்கியிருக்கின்றனர். இதுகுறித்த தகவலை மிகுந்த மகிழ்ச்சியுடன் ராக்கி சவந்த் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார்.

காரை முழுமையாக காட்சிப்படுத்தும் வீடியோவை அவர் தற்போது வெளியிட்டிருக்கின்றார். இதன் வாயிலாக அது என்ன மாடல்? என்ன மாதிரியான சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய முக்கிய விபரங்கள் தெரிய வந்ததிருக்கின்றன.

ராக்கி சவந்திற்கு அவரது நண்பர்களுக்கு வழங்கியிருப்பது பழைய தலைமுறை பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மாடல் ஆகும். இந்தியாவில் 2010 முதல் 2012 ஆம் ஆண்டு வரை இக்கார் விற்பனையில் இருந்தது. அப்போது, ரூ. 25.65 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இது விற்பனைச் செய்யப்பட்டது.

மேலும், இது இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கப்பட்டது. எஸ் டிரைவ் 18ஐ மற்றும் எஸ் டிரைவ் 20 டி எக்ஸ்க்ளூசிவ் ஆகிய தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைத்தது. இது, எஸ் டிரைவ் 18ஐ வேரியண்டையே ராக்கி சவந்திற்கு அவரது நண்பர்கள் பரிசளித்திருக்கின்றனர். இது ஆரம்ப நிலை வேரியண்டாகும்.
ராக்கி சவந்த்திடம் பயன்பாட்டிற்கு வரும் முதல் சொகுசு கார் இதுவாகும். ஆகையால், அவர் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருக்கின்றார். அவரிடத்தில், மாருதி பலேனோ காரும் பயன்பாட்டில் இருக்கின்றது. இது முந்தைய தலைமுறை பலேனோவாகும். ஃபையர் ரெட் நிறத்திலான பலேனோ காரை அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மாருதி சுஸுகி நிறுவனம் மிக சமீபத்திலேயே புதிய தலைமுறை பலேனோ காரை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது. இது மிக சூப்பரான விற்பனையாகும் கார் மாடலாக தற்போது மாறியிருக்கின்றது. ஸ்போர்ட்டி மற்றும் கர்வியான தோற்றத்தில் அது அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், புதிய ஸ்டியரிங் வீல், புதிய டேஷ்போர்டு, புதிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை அதில் சேர்க்கப்பட்டுள்ளன. 1.2 லிட்டர் ட்யூவல் ஜெட் விவிடி பெட்ரோல் மோட்டார் வசதியில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த மோட்டாருடன் சேர்த்து சிஎன்ஜி தேர்வும் வழங்கப்படுகின்றது. இரண்டும் நல்ல மைலேஜ் தரும் தேர்வுகளாக உள்ளன.

பலேனோ ரூ. 6.35 லட்சம் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், வழக்கமான அம்சங்களாக மடக்கிக் கொள்ளக்கூடிய கண்ணாடிகள், ஆன்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று இன்னும் பல முக்கிய வசதிகளை நிறுவனம் ஸ்டாண்டர்டு அம்சங்களாக பலேனோவில் வழங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








