வாழ்றாங்கப்பா இந்த பாலிவுட் காரவங்க... இந்தி திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி கிட்ட இத்தன கார்களா?

பாலிவுட் திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டியிடம் பயன்பாட்டில் இருக்கும் சொகுசு கார்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். அதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வாழ்றாங்கப்பா இந்த பாலிவுட் காரவங்க... இந்தி திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி கிட்ட இத்தன கார்களா?

பாலிவுட் திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ரோஹித் ஷெட்டியும் ஒருவர். கோல்மால், சென்னை எக்ஸ்பிரஸ், ஆல் தி பெஸ்ட், சிங்கம், சூர்யவன்ஷி, தில்வாலே போன்ற ஹிட் படங்களை அவர் இயக்கியிருக்கின்றார். இந்த படங்களில் சில பாலிவுட் திரையுலகில் மட்டுமின்றி இந்தியாவின் பிற மொழி திரையுலகிலும் நல்ல ஹிட் அடித்திருக்கின்றன.

வாழ்றாங்கப்பா இந்த பாலிவுட் காரவங்க... இந்தி திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி கிட்ட இத்தன கார்களா?

ஆகையால், மிகவும் ஃபேமஸான இயக்குநராக ரோஹித் ஷெட்டி காட்சியளிக்கின்றார். இந்த பிரபலம் வெறும் திரைப்பட காதலர் மட்டுமல்ல வாகன காதலரும் என அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ரோஹிஜ் ஷெட்டியிடத்தில் பல்வேறு ஆடம்பர மற்றும் சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

வாழ்றாங்கப்பா இந்த பாலிவுட் காரவங்க... இந்தி திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி கிட்ட இத்தன கார்களா?

அந்தவகையில், அவரிடத்தில் என்ன மாதிரியான சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன?, அவற்றின் விலை என்ன? மற்றும் அவை என்ன மாதிரியான திறன்களைக் கொண்டவை? என்பது போன்ற பல்வேறு முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வாழ்றாங்கப்பா இந்த பாலிவுட் காரவங்க... இந்தி திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி கிட்ட இத்தன கார்களா?

லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue)

ரோஹித் ஷெட்டி பயன்படுத்தும் மிகவும் விலையுயர்ந்த சொகுசு கார்களில் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் மாடலும் ஒன்று. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். தற்போது இந்த விலையுயர்ந்த கார் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக இந்தியாவில் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

வாழ்றாங்கப்பா இந்த பாலிவுட் காரவங்க... இந்தி திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி கிட்ட இத்தன கார்களா?

ரோஹித் ஷெட்டி வைத்திருக்கும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் கார் 555 எனும் மிகவும் ஸ்பெஷலான பதிவெண்ணால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த பதிவெண்ணிற்கே அவர் பல லட்சங்களை வாரி இறைத்திருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் விலை மட்டுமே ரூ. 2.5 கோடிகள் ஆகும்.

வாழ்றாங்கப்பா இந்த பாலிவுட் காரவங்க... இந்தி திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி கிட்ட இத்தன கார்களா?

எஸ்யூவி காரில் மிக அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய 4.4 லிட்டர் வி8 டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும், 740 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது. இதுமட்டுமின்றி, பயணத்தை இனிமையானதாக மாற்றக் கூடிய சொகுசு வசதிகள் பல இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன. ஆகையால், இந்த காரில் பயணிக்கும்போது நட்சத்திர விடுதியில் இருப்பதைப் போன்ற உணர்வு நிச்சயம் கிடைக்கும்.

வாழ்றாங்கப்பா இந்த பாலிவுட் காரவங்க... இந்தி திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி கிட்ட இத்தன கார்களா?

லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus)

லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் சொகுசு காருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷெட்டி பயன்படுத்தி வரும் மிக விலையுயர்ந்த சொகுசு காராக லம்போர்கினி உருஸ் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக வாகனமாகும். இக்காரை 2019ம் ஆண்டிலேயே அவர் வாங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்றாங்கப்பா இந்த பாலிவுட் காரவங்க... இந்தி திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி கிட்ட இத்தன கார்களா?

இந்த காரின் விலை 3.5 கோடி ரூபாய் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. உலகில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் அதி-வேக இயக்க திறன் கொண்ட எஸ்யூவி காராக இது காட்சியளிக்கின்றது. மணிக்கு 305 கிமீ வேகத்தில் இக்கார் ஒடும். அதேநேரத்தில் வெறும் 3.6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.

வாழ்றாங்கப்பா இந்த பாலிவுட் காரவங்க... இந்தி திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி கிட்ட இத்தன கார்களா?

இந்த உச்சபட்ச வேகத்திற்காக லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரில் 4.4 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 650 பிஎஸ் மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த மோட்டார் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்றாங்கப்பா இந்த பாலிவுட் காரவங்க... இந்தி திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி கிட்ட இத்தன கார்களா?

ஃபோர்டு மஸ்டாங் ஜிடி (Ford Mustang GT)

ரோஹித் ஷெட்டியிடத்தில் இருக்கும் மற்றுமொரு அதி-திறன் கொண்ட வாகனமாக ஃபோர்டு மஸ்டாங் ஜிடி இருக்கின்றது. இந்த காரை டிஏ டிசன் நிறுவனத்தின் வாயிலாக அவர் மாடிஃபை செய்து பயன்படுத்தி வருகின்றார். இதனால், இந்த கார் இன்னும் ஸ்பெஷலான வாகனமாக காட்சியளிக்கின்றது. தற்போது இக்கார் இந்தியாவில் விற்பனையில் இல்லை. விற்பனையில் இருந்தபோது ரூ. 75 லட்சம் தொடங்கி 2 கோடி ரூபாய் வரையிலான விலையில் விற்பனைச் செய்யப்பட்டது.

வாழ்றாங்கப்பா இந்த பாலிவுட் காரவங்க... இந்தி திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி கிட்ட இத்தன கார்களா?

பிரத்யேகமாக பர்ப்பிள் நிறத்தால் கார் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, பிரத்யேக எக்சாஸ்ட் சிஸ்டம் மற்றும் பாடி கிட்களும் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், மெக்கானிக்கல் விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே 5.0 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பையர்டு பெட்ரோல் எஞ்ஜினே இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 395 பிஎச்பி பவரையும், 515 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

வாழ்றாங்கப்பா இந்த பாலிவுட் காரவங்க... இந்தி திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி கிட்ட இத்தன கார்களா?

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் (BMW 7 Series)

ரோஹித் ஷெட்டி பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் மாடலும் பயன்பாட்டில் இருக்கின்றது. இது ஓர் பழைய தலைமுறை கார் மாடலாகும். இது ஓர் செடான் ரக கார் மாடலாகும். வெள்ளை நிறத்தாலும், 555 எனும் பதிவெண்ணாலும் இக்கார் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இக்காரின் மதிப்பு ரூ. 1.97 கோடிகள் வரை இருக்கும் என யூகிக்கப்படுகின்றது.

வாழ்றாங்கப்பா இந்த பாலிவுட் காரவங்க... இந்தி திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டி கிட்ட இத்தன கார்களா?

மஸராட்டி கிரான் டூரிஸ்மோ ஸ்போர்ட் (Maserati Gran Turismo Sport)

ரோஹித் ஷெட்டி இடத்தில் பயன்பாட்டில் இருக்கும் மிகவும் கவர்ச்சிகரமான கார் மாடலாக மஸராட்டி கிரான் டூரிஸ்மோ ஸ்போர்ட் இருக்கின்றது. இந்த காரும் வெள்ளை நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இதனை 2018ம் ஆண்டிலேயே ரோஹித் ஷெட்டி வாங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் 4.7 லிட்டர் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 453 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறனைக் கொண்டது குறிப்பிடத்தகுந்தது. இக்காரின் விலை ரூ. 2.51 கோடிக்கும் அதிகம் ஆகும்.

Article Published On: Monday, March 28, 2022, 11:10 [IST]
English summary
Bollywood film director rohit shetty and his luxury car collection
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+