பணியாளருக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை பரிசளித்த தொழிலதிபர்... என்ன கம்பெனி தெரிஞ்சா நாமலும் சேர்ந்திடலாம்!

தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் பணியாற்றி வந்தவருக்கு விலையுயர்ந்த எஸ்யூவி ரக பென்ஸ் சொகுசு காரைப் பரிசளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

பணியாளருக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை பரிசளித்த தொழிலதிபர்... என்ன கம்பெனி தெரிஞ்சா நாமலும் சேர்ந்திடலாம்!

நமது அண்டை மாநிலமான கேரளாவிலேயே இந்த பரிசளிப்பு நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. சிஆர் அணிஷ் என்பவரே விலையுயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு காரை பரிசாக பெற்றவர் ஆவார். ஏகே ஷாஜி என்பவரே அணிஷுக்கு ஆடம்பர காரை பரிசளித்த தொழிலதிபர். தன்னிடத்தில் 22 ஆண்டுகளாக அணிஷ் பணியாற்றி வருகின்ற காரணத்தினால் அவர் விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கியிருக்கின்றார்.

பணியாளருக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை பரிசளித்த தொழிலதிபர்... என்ன கம்பெனி தெரிஞ்சா நாமலும் சேர்ந்திடலாம்!

தொழிலதிபரின் இந்த செயல் கேரள மாநில மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அம்மாநில மக்கள் மத்தியில் மட்டுமில்லைங்க சொகுசு கார் விரும்பிகள் பலரையும் இந்த நிகழ்வு வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றது. இப்பரிசளிப்பு நிகழ்வு குறித்த வீடியோவை ஷாஜி அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார்.

பணியாளருக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை பரிசளித்த தொழிலதிபர்... என்ன கம்பெனி தெரிஞ்சா நாமலும் சேர்ந்திடலாம்!

கேக் வெட்டப்பட்டு அதற்கு பின்னரே சொகுசு கார் அணிஷிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. அப்போது ஷாஜி நிறுவனத்தில் பணி புரியும் பலர் கலந்துக் கொண்டனர். "அணிஷை தன்னுடைய வேலையாளாக எண்ணவில்லை என்றும், அவரை தன்னுடைய பார்ட்னராகவே தான் கருதுவதாகவும்" ஷாஜி இன்ஸ்டா பதிவில் தெரிவித்திருக்கின்றார்.

பணியாளருக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை பரிசளித்த தொழிலதிபர்... என்ன கம்பெனி தெரிஞ்சா நாமலும் சேர்ந்திடலாம்!

இத்துடன், "இந்த புதிய பார்ட்னரை நிச்சயம் நீ விரும்புவாய் என நம்புகின்றேன்" எனவும் அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஷாஜி இதுபோன்று காரை பரிசளிப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் அவர் இதுபோன்ற கார் பரிசளிப்பை நிகழ்த்தியிருக்கின்றார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை 6 பணியாளர்களுக்கு அவர் கார்களை பரிசளித்திருக்கின்றார்.

தன்னுடைய நிறுவனத்தில் பணி புரியும் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என கூறி ஷாஜி கார் பரிசளிப்பை செய்து வருவதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே தற்போதைய புதிய கார் பரிசளிப்பு நிகழ்வையும் ஷாஜி அரங்கேற்றியிருக்கின்றார்.

பணியாளருக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை பரிசளித்த தொழிலதிபர்... என்ன கம்பெனி தெரிஞ்சா நாமலும் சேர்ந்திடலாம்!

சொகுசு கார் விரும்பிகளின் பிரியமான கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ 220டி இருக்கின்றது. இந்த ஆடம்பர கார் இந்தியாவில் ரூ. 45.60 லட்சம் எனும் உச்சபட்ச விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது ஓர் மிட்-ஸ்பெக் வேரியண்ட் ஆகும். 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

பணியாளருக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை பரிசளித்த தொழிலதிபர்... என்ன கம்பெனி தெரிஞ்சா நாமலும் சேர்ந்திடலாம்!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 192 பிஎஸ் மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முன் வீலுக்கு இயக்க திறனை கடத்தும்.

பணியாளருக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை பரிசளித்த தொழிலதிபர்... என்ன கம்பெனி தெரிஞ்சா நாமலும் சேர்ந்திடலாம்!

இந்த தேர்வைக் காட்டிலும் உயர்நிலை தேர்வாக ஜிஎல்ஏ 220டி 4எம் இருக்கின்றது. இந்த காரிலும் அதே 2.0 லிட்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதில் கூடுதல் சிறப்பு வசதியாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 4 மேட்டிக் ஆல்-வீல் இயக்கம் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், சற்றே அதிக திறன் வெளிப்பாடுக் கொண்ட தேர்வாக இது இருக்கின்றது.

பணியாளருக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை பரிசளித்த தொழிலதிபர்... என்ன கம்பெனி தெரிஞ்சா நாமலும் சேர்ந்திடலாம்!

வழு வழுப்பான சாலைகளைக் கூட அசால்டாக கையாள 4 மேட்டிக் ஆல்-வீல் இயக்கம் சிஸ்டம் உதவும். இந்த தேர்வைக் காட்டிலும் மிக குறைந்த விலை வேரியண்டாக ஜிஎல்ஏ 200 இருக்கின்றது. 1.3 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினே இந்த வேரியண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், மைல்டு ஹைபிரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கின்றது.

பணியாளருக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை பரிசளித்த தொழிலதிபர்... என்ன கம்பெனி தெரிஞ்சா நாமலும் சேர்ந்திடலாம்!

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 165 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றும். 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் தானியங்கி டிரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ. 44 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இத்தேர்வு விற்பனைக்குக் கிடைக்கின்றது. எனவேதான் ஜிஎல்ஏ வேரியண்டின் மலிவு விலை தேர்வாக ஜிஎல்ஏ 200 காட்சியளிக்கின்றது.

பணியாளருக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை பரிசளித்த தொழிலதிபர்... என்ன கம்பெனி தெரிஞ்சா நாமலும் சேர்ந்திடலாம்!

இவை அனைத்தைக் காட்டிலும் சக்சி வாய்ந்த தேர்வாக ஏஎம்ஜி ஜிஎல்ஏ 35 உள்ளது. இந்த தேர்வில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் டர்போசார்ஜட் எஞ்ஜின் ஆகும். அதிகபட்சமாக 310 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இக்காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும். மேலும், வெறும் 5.1 செகண்டுகளில் இக்கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, February 11, 2022, 16:38 [IST]
English summary
Businessman gifts mercedes benz gla luxury suv to his employee here is full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+