பிரைவேட் யூசுக்காகவும் இனி இந்த இ-காரை வாங்க முடியும்... ஒரு முழு சார்ஜில் இந்த இ-கார் 520 கிமீ பயணிக்கும்!

பிஒய்டி நிறுவனம் அதன் இ6 (BYD e6) எலெக்ட்ரிக் காரை இனி தனி நபர் பயன்பாட்டிற்கும் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த மின்சார காரின் சிறப்புகளையும், அதன் விலை விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரைவேட் யூசுக்காகவும் இனி இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும்... ஒரு முழு சார்ஜில் இந்த இ-கார் 520 கிமீ பயணிக்கும்!

பிரபல சீன மின் வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (Build Your Dreams) இந்தியாவில் இ6 (BYD e6) எனும் காரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இது ஓர் எம்பிவி ரக மின்சார காராகும். இந்த காரை பிஒய்டி நிறுவனம் பிரத்யேகமாக பி2பி (B2B) எனும் பிரிவிற்காக இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியது. அதாவது, வர்த்தக பயன்பாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களுக்காக மட்டுமே இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பிரைவேட் யூசுக்காகவும் இனி இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும்... ஒரு முழு சார்ஜில் இந்த இ-கார் 520 கிமீ பயணிக்கும்!

இந்த காரையே தற்போது நிறுவனம் தனி நபர்களும் தங்களின் பயன்பாட்டிற்காக வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நிறுவனம் கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதகியில் ஓர் ஷோரூமை திறந்து வைத்துள்ளது. இந்த ஷோரூம் வாயிலாக தனி நபர்கள் தங்களுக்கான பிஒய்டி இ6 எம்பிவி எலெக்ட்ரிக் காரை வாங்கிக் கொள்ள முடியும். இதன் விலை ரூ. 29.15 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

பிரைவேட் யூசுக்காகவும் இனி இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும்... ஒரு முழு சார்ஜில் இந்த இ-கார் 520 கிமீ பயணிக்கும்!

பிஒய்டி இ6 ஓர் அதிக பிரீமியம் வசதிகள் எலெக்ட்ரிக் காராகும். இதனால்தான் இந்த வாகனத்தின் விலை பல மடங்கு அதிகமாக காட்சியளிக்கின்றது. காருக்கான சார்ஜருக்காக கூடுதல் கட்டணமாக ரூ. 45 ஆயிரம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 7 kW சார்ஜர் வீட்டில் வைத்து சார்ஜ் செய்து கொள்ள வசதியாக வழங்கப்படுகின்றது. இந்த காரில் 71.7 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிரைவேட் யூசுக்காகவும் இனி இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும்... ஒரு முழு சார்ஜில் இந்த இ-கார் 520 கிமீ பயணிக்கும்!

இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 520 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்துடன் 94 எச்பி பவரை வெளியேற்றக் கூடிய மோட்டார் இவ்வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 180 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 130 கிமீ ஆகும். ஆகையால், இந்த பிரீமியம் தர எம்பிவி எலெக்ட்ரிக் காரில் அதிக வேகமாகவும் அதன் உரிமையாளர்களால் பயணிக்க முடியும்.

பிரைவேட் யூசுக்காகவும் இனி இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும்... ஒரு முழு சார்ஜில் இந்த இ-கார் 520 கிமீ பயணிக்கும்!

இந்த காரை ஏசி மற்றும் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் என அனைத்திலும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதில் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது 30 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை வெறும் 35 நிமிடங்களில் ஏற்றிக் கொள்ள முடியும். அதேவேலையில், ஏசி சார்ஜிங் பாயிண்டில் சார்ஜ் செய்தோமேயானால் முழுமையாக சார்ஜாக பல மணி நேரங்களை அக்கார் எடுத்துக் கொள்ளும்.

பிரைவேட் யூசுக்காகவும் இனி இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும்... ஒரு முழு சார்ஜில் இந்த இ-கார் 520 கிமீ பயணிக்கும்!

சிறப்பு வசதிகளுக்கு சற்றும் குறைச்சலில்லாத காராக பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் கார் காட்சியளிக்கின்றது. இந்த காரில், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், லெதர் இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதில், முன் பக்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் இருக்கைகளை 6 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், 10.1 அங்குல ரொடேட்டபிள் தொடுதிரை, ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு, சிஎன் 95 ஏர் ஃபில்டரேஷன் சிஸ்டம் மற்றும் ரியர்வியூ மிர்ரர் ஆகிய அம்சங்களும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளன.

பிரைவேட் யூசுக்காகவும் இனி இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும்... ஒரு முழு சார்ஜில் இந்த இ-கார் 520 கிமீ பயணிக்கும்!

இந்த மாதிரியான அம்சங்களுடனேயே வெறும் கேப் சேவை நிறுவனங்களின் பயன்பாட்டிற்கென பிரத்யேகமாக அறிமுகமானது இந்த பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் கார். ஆனால், இப்போது தனி நபர் பயன்பாட்டிற்கும் இக்காரை வாங்கிக் கொள்ள முடியும். இது மின்சார வாகன பிரியர்களை மகிழ்ச்சியடையச் செய்திருக்கின்றது. குறிப்பாக, எம்பிவி ரக கார்களை அதிகம் விரும்புபவர்கள் மத்தியில் இந்த தகவல் குஷியை ஏற்படுத்தியிருக்கின்றது.

பிரைவேட் யூசுக்காகவும் இனி இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும்... ஒரு முழு சார்ஜில் இந்த இ-கார் 520 கிமீ பயணிக்கும்!

இந்த காரில் ஆறு பேர் வரை மிக தாராளமாக அமர்ந்து பயணிக்க முடியும். மாருதி சுஸுகி எர்டிகாவைப் போல் அதிக இட வசதிக் கொண்ட எம்பிவி ரக காரே இந்த பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் கார். அதிக உறுப்பினர்களைக் கொண்ட பெரிய குடும்பங்களை இந்த கார் வெகு விரைவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்காரின் பூட் ஸ்பேஸ் மட்டும் 580 லிட்டர் ஆகும். மேக் பெர்சன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷன் முன் பக்கத்திலும், மல்டி லிங்க் சஸ்பென்ஷன் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிரைவேட் யூசுக்காகவும் இனி இந்த எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும்... ஒரு முழு சார்ஜில் இந்த இ-கார் 520 கிமீ பயணிக்கும்!

இதுதவிர, பாஷ் ஐபிபி இன்டெல்லிஜன்ட் பிரேக் கன்ட்ரோல்சிஸ்டம், பன்முக ஏர் பேக்குகள் மற்றும் அனைத்து பயணிகளுக்குமான சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் பிஒய்டி இ6 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பிஒய்டி நிறுவனம் இந்த காருக்கு 3 வருடங்கள் அல்லது 1.25 லட்சம் கிமீ வாரண்டி, 8 ஆண்டுகள் அல்லது 5 லட்சம் கிமீ வாரண்டி பேட்டரிக்கும் வழங்கியிருக்கின்றது. இதுதவிர, மின் மோட்டாருக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கிமீ வாரண்டி வழங்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 20, 2022, 14:05 [IST]
English summary
Byd announces private users also can buy byd e6 mpv car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+