எவ்ளோ செலவானாலும் பரவா இல்ல... வாங்கினா இப்படி ஒரு காரதான் வாங்கணும்... பிஒய்டி அட்டோ3 ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ!

சீனாவைச் சேர்ந்த மின் வாகன உற்பத்தி நிறுவனம் பிஒய்டி (Build Your Dreams). இந்த நிறுவனம் இந்தியாவிற்காக களமிறக்கிய இரண்டாவது தயாரிப்பே அட்டோ 3. இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் ஆகும். பிரீமியம் அம்சங்கள் நிரம்பிய வாகனமாக இது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த வாகனம் விற்பனைக்கு வருவதற்கு முன்னர் வரை நிறுவனம் இ6 எனும் எம்பிவி ரக எலெக்ட்ரிக் காரை மட்டுமே நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருந்தது. முதலில் கால் டாக்சி பிரிவிற்காக மட்டுமே விற்பனைச் செய்து வந்தநிலையில், தனி நபர்களும் தங்களின் பயன்பாட்டிற்காக இந்த வாகனத்தை வாங்கிக் கொள்ளலாம் பிஒய்டி அறிவித்தது. இதைத்தொடர்ந்து, இந்த ஒற்றை கார் மாடலுக்காக நாடு முழுவதும் அந்நிறுவனம் ஷோரூம்களை அமைக்கும் பணியில் களமிறங்கியது. ஒற்றை கார் மாடலுக்காக நாடு முழுவதும் ஷோரூமா என்றே பலரையும் நிறுவனத்தின் இந்த செயல் நினைக்கச் செய்தது.

அட்டோ3

ஆனால், நிறுவனமோ வேறு பிளானை செயல்படுத்துக் கொண்டிருந்தது. அதுதான் அட்டோ3. இந்த காரை இந்திய பிரீமியம் மின்சார கார் பிரியர்களைக் கவரும் விதமாக கொண்டு வருவதே நிறுவனத்தின் திட்டம் ஆகும். திட்டத்தின்படி இதை தற்போது விற்பனைக்கும் கொண்டு வந்துவிட்டது. இந்த எலெக்ட்ரிக் காரையே சமீபத்தில் சென்னையில் வைத்து நமது டிரைவ்ஸ்பார்க் குழு இயக்கி பார்த்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த சுவாரஷ்ய அனுபவம் பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

முதலில் காரின் வெளிப்புற அழகை பற்றி பார்க்கலாம்:

பிஒய்டி நிறுவனம் இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக டிராகன் ஃபேஸ் 3.0 டிசைன் தாத்தபரியத்தைப் பயன்படுத்தியிருக்கின்றது. இதுவே காரின் முன் பக்கத்தின் மிகுந்த அழகுக்கு காரணமாக இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே முக்கோண வடிவ ஹெட்லேம்ப், நீல நிற அணிகலனுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பிஒய்டி என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பட்டையான குரோம் இரு ஹெட்லைட்டுக்கும் இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர காரின் ஸ்போர்ட்டி தோற்றத்தை மேலும் மெருகேற்றும் வகையில் முன் பக்க பம்பரின் இருபுறமும் ஏர் இன்டேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

அட்டோ3

இதுபோதாது என்று காரின் பக்கவாட்டு பகுதியையும் பிஒய்டி நிறுவனம் மிக சூப்பரானதாக அலங்கரித்திருக்கின்றது. 18 அங்குல ஏரோ அலாய் வீல் காரின் பக்கவாட்டு பகுதிக்கு கவர்ச்சி சேர்க்கும் விதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர பார்வையாளர்களைக் கவரும் விதமாக இன்னும் பல அம்சங்கள் இந்த காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் காரின் சி-பில்லரும் ஒன்று. இது காருக்கு அட்டகாசமான ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்கும் வகையில் இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க வழு வழுப்பான கதவுகள், பளபளப்பான ரூஃப் ரெயில்களும் இந்த காருக்கு அழகு சேர்க்கும் விதமாக உள்ளது.

பின் பக்கத்திற்கும் அழகு சேர்க்கும் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மெல்லிய இழைபோன்ற லைட் பார், எல்இடி டெயில் லைட், பிஒய்டி எனும் பெயர் (முன் பக்கத்தில் இருப்பதைப் போலவே), இணைக்கப்பட்ட ரூஃப் ஸ்பாய்ளர், ரிவர்ஸ் லைட் என எக்கசக்க அம்சங்கள் காரின் பின் பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் ரூஃப் ஸ்பாய்ளரில் கூடுதல் சிறப்பு வசதியாக மூன்றாவது ஓர் ஸ்டாப் லைட் அதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ரூஃப் ஸ்பாய்ளருக்கும், பின் பக்கத்திற்கும் பல மடங்கு அதிக அழகைச் சேர்க்கும் வகையில் உள்ளது.

அட்டோ3

காரின் உட்பக்கத்தின் சிறப்புகள்:

ஓர் லக்சூரி ஹோட்டலுக்குள் நுழையும் எப்படி உற்சாகமான அனுபவம் உங்களுக்குக் கிடைக்குமோ அதுபோன்ற மிக சிறந்த அனுபவம் இந்த காருக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் உங்களுக்குக் கிடைக்கும். ஏனெனில் அந்தளவு சிறப்பம்சங்களையும், பிரீமியம் வசதிகளையும் அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் பிஒய்டி நிறுவனம் வாரி வழங்கியிருக்கின்றது. குறிப்பாக, லக்சூரி வசதியை உணரும் விதமாக நிறுவனம் வழங்கியிருக்கும் சிறப்பு வசதிகள் எங்களின் மனதையே கொள்ளை அடித்துவிட்டது.

டம்பெல் ஸ்டைல் ஏசி வெணஅடுகள், விமானங்களில் காணப்படுவதைப் போன்ற கியர் லிவர், கிரிப் ஸ்டைல் டூர் ஹேண்டில், கீழே விழும் பொருட்களை பத்திரமாக காருக்குள்ளேயே தடுத்து நிறுத்தும் டூர் பாக்கட் உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றுடன் பயணிகள் அதிக சொகுசான பயண அனுபவத்தை பெறும் விதமாக பட்டுபோன்ற இருக்கை காருக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், பெரிய பனோரமிக் சன்ரூஃப்பும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றது. இது பயணிகள் இயற்கை சூழல்நிறைந்த பகுதிக்குள் பயணிக்கும்போது சுற்றுப்புறத்தை பார்வையிடவும், அதிக காற்றோட்டத்தைப் பெற்றுக் கொள்ளவும் உதவியாக இருக்கும்.

காரின் பின் பகுதியிலேயே பேட்டரி பேக்குகள் நிலை நிறுத்தப்ப்டடுள்ளன. ஆகையால் இருக்கைகள் சற்று உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஹெட்ரூம் சற்று குறைவாகவே பின்னிருக்கையாளர்களுக்கு இருக்கின்றது. இருப்பினும், அந்த இருக்கை சொகுசாக இருப்பதை எங்களால் உணர முடிகின்றது. கேபினுள் மிகப் பெரிய 12.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒற்றை பட்டனை அழுத்துவன் மூலம் இந்த திரையை போர்ட்ரெய்டுக்குக் கொண்டு வர முடியும். இதே தேவைக்கு ஏற்ப சுழற்றிக் கொள்ளவும் முடியும்.

இந்த திரையில் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒயர் இணைப்பு மூலம் மட்டுமே இதனை நம்மால் இணைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், டிரைவர் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கும் திரை சற்று சிறியதாக உள்ளது. டிரைவர்கள் இதை பயன்படுத்துவதை சற்று சிரமமாக உணரலாம். இதுதவிர, பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் ஃபோனை சார்ஜ் செய்து கொள்ள ஒயர்லெஸ் சார்ஜர், என்எஃப்சி கார்டு சாவி மற்றஉம் ஆட்டோமேட்டிக் டெயில்கேட் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதேபோல் பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டிருப்பதை எங்களால் காண முடிந்தது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றின் லிஸ்ட் இதோ, 7 ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஏபிஎஸ், இஎஸ்சி, டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ஹில் டெசன்ட் கன்ட்ரோல் போன்றவையே வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர அடாஸ் எனும் மிக முக்கியமான தொழில்நுட்பமும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் வாயிலாக ஆட்டோமேட்டிக் அவசர கால பிரேக்கிங், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் கொல்லிசன் வார்னிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் செயல் திறன் மற்றும் அதன் டிரைவிங் இம்பிரசன் எப்படி?

பிஒய்டி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரில் பிளேட் லித்தியம் ஃபெர்ரோ பாஸ்பேட் பேட்டரி பேக்கையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கின் பாதுகாப்பு தன்மை பல நிலைகளில் ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கின்றது. இதன் பின்னரே இதை அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் பிஒய்டி நிறுவனம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. 60.48kWh பேட்டரி பேக்கே இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 521 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும்.

இந்த காருடன் நீண்ட நேரம் எங்களால் செலவிட முடியாத காரணத்தினால் அதன் முழு ரேஞ்ஜ் திறனையும் எங்களால் அனுபவிக்க முடியவில்லை. மேலும், வழக்கமான சார்ஜ் திறனையும் எங்களால் முழுமையாக கண்டறிய முடியவில்லை. இருப்பினும், 80 kW DC சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தபோது வெறும் 50 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை இந்த கார் எட்டிவிட்டது. இந்த காரின் பிளேட் பேட்டரி பேக் சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது.

இது முன் பக்க வீலை இயக்க உதவியாக இருக்கும். இந்த மின்சார மோட்டார் அதிகபட்சமாக 20.1 பிஎச்பி பவரையும், 310 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதுமட்டுமில்லைங்க வெறும் 7.3 செகண்டுகளில் இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். சற்று பெரிய தோற்றத்திலேயே இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. 4,455 மிமீ நீளமும், 1,865 மிமீ அகலத்திலும், 1,615 மிமீ உயரத்திலும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 175 மிமீ ஆகும். இதேபோல் இதன் வீல் பேஸ் 2,720 மிமீட்டராக இருக்கின்றது.

இந்த அளவும், காரில் வழங்கப்பட்டிருக்கும் மின்சார மோட்டாரும் மிக சிறப்பான இயக்க அனுபவத்தை எங்களுக்கு வழங்கும் வகையில் இருந்தது. குறிப்பாக, அதிக பிரீமியம் மற்றும் லக்சூரியான அனுபவத்தை விரும்புவர்களுக்கு ஏற்ற ஓர் தயாரிப்பாகவே இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான ரைடிங் மோட்கள் இந்த அட்டோ3 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் ஆகிய டிரைவிங் மோட்களே கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான ரைடிங் அனுபவத்தை வழங்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மோட்கள் மட்டுமில்லைங்க இழந்த மின்சாரத்தைக் கணிசமான அளவு மீட்டெடுப்பதற்காக இரு விதமான ரீஜெனரடேட்டிவ் மோட்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இரண்டிலும் பெரியளவில் மாற்றங்கள் இல்லை என்பதே எங்களின் கருத்து. இதேபோல் பிற மின்சார கார்களைப் போல் ஒற்றை பெடல் டிரைவிங் சிஸ்டத்தையும் இந்த காரில் எங்களால் காண முடியவில்லை. ஆனால், காரில் இடம் பெற்றிருக்கும் சஸ்பென்ஷன் மிக சிறப்பான இயக்க அனுபவத்தை எங்களுக்கு வழங்கியது. பள்ளம், மேடு, குழி என அனைத்தையும் இந்த சஸ்பென்ஷன் செட்-அப் அசால்டாக கையாண்டது.

குறிப்பாக, மிதமான வேகத்தில் பயணிக்கும்போது எங்களால் மிக சிறப்பான பயண அனுபவத்தை பெற முடிந்தது. ஆனால், அதிக வேகத்தை தவிர்க்க வேண்டும் என்பதே எங்களின் அறிவுறுத்தலாக இருக்கின்றது. ஆனால், மேடு-பள்ளம் இல்லாத தரமான சாலைகளில் சற்று அதிக வேகத்தில் பயணிக்கலாம். அப்போது ஸ்மூத்தான இயக்கத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். என்ன வேகத்தில் சென்றாலும் ஸ்டியரிங் வீல் பயன்பாடு மிக சிறப்பானதாக இருக்கின்றது.

இதேபோல் பிரேக்கிங் சிஸ்டமும் மிக மிக சூப்பரானதாக இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். நான்கு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவே மிக ஸ்மூத்தான மற்றும் மிக ஷார்ப்பான பிரேக்கிற்கு உதவியாக இருக்கின்றன. குறிப்பாக, பிரேக் பெடல் ஓர் பஞ்சு போன்று இருப்பதை எங்களால் உணர முடிகின்றது. ஆகையால், பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் ஒட்டுமொத்தமாகவே எங்களைக் கவரக் கூடியதாக இருந்தது. பல கார்களை இதுவரை இயக்கி பார்த்திருக்கின்றோம். அவை அனைத்திலும் இருந்து பல மடங்கு மாறுபட்டதாக அது காட்சியளிக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, December 12, 2022, 13:08 [IST]
English summary
Byd atto 3 review
மேலும்... #பிஒய்டி #byd
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+