சீன நிறுவனம் செய்த தரமான சம்பவம்... பிஒய்டி அட்டோ 3 இவி கார் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?
சீன கார் தயாரிப்பு நிறுவனமான பிஓய்டி நிறுவனம் தனது அட்டோ 3 காரை இந்தியாவில் ரூ33.99 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்துள்ளது.
பிஒய்டி நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே தனது இ6 என்ற எம்பிவி காரை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இ்நநிறவனம் தனது அட்டோ 3 என்ற எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்தது.

பிஒய்டி நிறுவனம் இந்த அட்டோ 3 எலெக்ட்ரிக் காரை முதன் முதலாக இந்தியாவில் கடந்த அக்டோபர் 11ம் தேதி வெளிப்படுத்தியது. அப்பொழுதே ரூ50,000 கொடுத்து அந்த காரை புக்கிங் செய்யலாம் எனவும் அறிவித்தது. அந்த காருக்கு இதுவரை 1500 பேர் புக்கிங் செய்துள்ள நிலையில் இந்த காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காருக்கான டெலிவரி வரும் 2023 ஜனவரியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசைன்
அட்டோ 3 காரின் டிசைனை பொருத்தவரை முன்பக்கம் சில்வர் கிரில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்லீக் ஹெட்லைட் மற்றும் றெக்கை வடிவ எல்இடி டிஆர்எல்லம் பொருத்தப்பட்டுள்ளது. முகப்பு பக்க கிரிலில் பிஓய்டி லெட்டர் அச்சு செய்யப்பட்டுள்ளது. இது போக டிராப்ஸ்யாய்டு ஷேப்டு டூயல்டோன் பம்பர் மற்றும் ஃபாவுக்ஸ் சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியன பொருத்தப்பட்டுள்ளது.

பக்கவாட்டு பகுதியில் கருப்பு நிறத்தில் வீல் ஆர்ச்சகள், 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், சி பில்லரில் முடியும் ஷோல்டர் லைன் இருக்கிறது. இந்த காரின் பின்பக்கம் முழு நீள டெயில் லைட்கள், ரூஃப் மவுண்ட்ட் ஸ்பாய்லர்கள், டூயல் டோல் பம்பரில் 'Build Your Dreams' எழுத்து, ஆகியன இருக்கிறது.
இந்த கார் ஃபோல்டர் க்ரே, பார்க்கூர் ரெட், ஸ்கீ ஒயிட் மற்றும் சர்ஃப் ப்ளூ ஆகிய நிறங்களில் மார்கெட்டில் கிடைக்கிறது. இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை டோர் மவுண்டெட் ஸ்பீக்கர்கள், ஸ்டைலிஷ் ஏர்-கான் வென்ட்கள், 12.8 இன்ச் ஆண்ட்ரோடு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை சப்போர்ட் செய்யக்கூடிய ரோட்டேடிங் சென்ட்ரல் ஸ்கிரின், ஆகிய வசதிகள் இருக்கிறது.

இது போக இந்த காரின் பானரோமிக் சன்ரூஃப், பவர்டு டெயில்கேட், ஒயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 5 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சிந்தடிக் லெதர் சீட்கள், டிரைவர் மற்றும் முன்பக்க பாசஞ்சருக்கா பவர் சீட்கள், மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்டிங், பாதுகாப்பு அம்சங்களுக்காக ஏடிஏஎஸ் தொழிற்நுட்பம், 360 டிகிரி கேமரா, ஏபிஎஸ், இஎஸ்சி டிராக்ஷன் கண்ட்ரோல், ஹில் டிசென்ட் மற்றும் 7 ஏர்பேக் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.
பவர்டெரைன் மற்றும் சார்ஜில்
இந்த அட்டோ 3 காரின் முன்பக்கத்தில் பெர்மனென்ட் மேக்னெட் ஸ்சிங்க்ரோனைசஸ் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 201 எச்பி பவரையும், 310 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.3 நொடிகளில் எட்டி பிடிக்கும் திறன் கொண்டது. பிஓய்டி நிறுவனம் இந்த அட்டோ 3 காரில் 60.48 கிலோ வாட் ஹவர் பேட்டரியை கொண்டுள்ளது. இது முழு சார்ஜில் 521 கி.மீ ரேஞ்ச் செல்லும் என் ஏஆர்ஏஐ சான்றளித்துள்ளது.
அட்டோ 3 காரின் பேட்டரியை சார்ஜ் செய்ய 2 விதமான ஆப்ஷன்கள் உள்ளன. முதல் ஆப்ஷன் டைப் 2, 7 கிலோவாட் ஏசி சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றலாம் இதில் முழு பேட்டரி சார்ஜ் ஏற 10 மணி நேரம் வரை ஆகும். அல்லது 80 கிலோவாட் டிசி சார்ஜர் மூலம் சார்ஜ் ஏற்றினால் 50 நிமிடத்தில் 0-80 சதவீத பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். இந்த காருடன் 7 கிலோவாட் ஹோம் சார்ஜர் மற்றும் 3 கிலோ வாட் போர்ட்டபிள் சார்ஜர் ஆகியவற்றை பிஒய்டி நிறுவனம் வழங்குகிறது.
வாரண்டி
பிஓய்டி நிறுவனம் இந்த காருக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிலோ மீட்டர் வரையில் வாரண்டியை பேட்டரிக்காக வழங்குகிறது. 8 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கிலோ மீட்டர் வரையில் மோட்டார் மற்றும் மோட்டார் கண்ட்ரோல்களுக்கு வாரண்டியை வழங்குகிறது. 6 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கி.மீ வரை வாகனத்திற்கு வாரண்டியை வழங்குகிறது. இது போக 3 ஆண்டுகளுக்கு இலவச 4 ஜி டேட்டா சப்ஸ்கிரிப்ஷன், 6 ஆண்டு ரோடு சைடு அசிஸ்டென்ஸ் மற்றும் 6 இலவச சர்வீஸ்களை வழங்குகிறது.
இந்த பிஒய்டி ஆட்டோ 3 கார் மார்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. விலையை ஒப்பிட வில்லை என்றால் இந்த கார் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் இவி மேக்ஸ் காருக்கும் போட்டி தான்.இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








