ஒற்றை கார் மாடலுக்காக ஷோரூம்களை திறக்கும் பணியில் சீன நிறுவனம் தீவிரம்... இது மேல அவ்ளோ நம்பிக்கையா!!
சீன மின்வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி இந்திய சந்தையில் அதன் ஷோரூம்களை திறக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சீனாவைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் பிஒய்டி இ6 எனும் எம்பிவி ரக காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இது ஓர் மின்சார காராகும். இந்த எலெக்ட்ரிக் காரை முன்னதாக இந்தியாவின் கால் டாக்சி சேவை நிறுவனங்களுக்கு மட்டுமே பிஒய்டி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருந்தது. இதற்கு கேப் சேவை நிறுவனங்கள் மத்தியில் நல்ல வரேவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே இவ்வாகனத்தை தனிநபர் பயன்பட்டாளர்களும் வாங்கிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை பிஒய்டி நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காரை விளம்பரப்படுத்தும் விதமாக நிறுவனம் இந்தியாவில் ஷோரூம்களை திறக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அதாவது, தற்போது விற்பனையில் இருக்கும் ஒற்றைக் கார் மாடலுக்காக நாடு முழுவதும் ஷோரூம்களை திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நிறுவனத்தின் இந்த முடிவிற்கு இதுமட்டுமே காரணம் இல்லைங்க. நிறுவனம் அடுத்தடுத்தாக இன்னும் சில எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. குறிப்பாக, இ6 எலெக்ட்ரிக் காருக்கு அடுத்தபடியாக நிறுவனம் அட்டோ இ3 எலெக்ட்ரிக் காரையும் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுபோன்ற விரிவாக்க பணியைத் தொடர்ந்தே இந்தியாவில் ஷோரூம்களை திறக்கும் பணியில் பிஒய்டி களமிறங்கியிருக்கின்றது.

தற்போது நிறுவனம் அதன் முதல் ஷோரூமை இந்தியாவில் திறந்திருக்கின்றது. இந்தியாவின் தலைநகரம் டெல்லியிலேயே முதல் ஷோரூம் திறக்கப்பட இருக்கின்றது. இதனைத்தொடர்ந்து நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் ஷோரூம்களை திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே நிறுவனத்தின் சென்னை, ஹைதராபாத் மற்றும் விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் நிறுவும் பணிகளை பிஒய்டி தொடங்கிவிட்டது.

நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான பிஒய்டி ஓர் முழு சார்ஜில் 520 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறன் கொண்டது. டிரைவிங் கண்டிஷனை பொருத்து இந்த ரேஞ்ஜ் திறன் மாறுபடும். அதாவது நகரத்தின் அதிக நெரிசல் மிகுந்த சாலையில் பயணித்தால் இதன் ரேஞ்ஜ் திறன் 415 கிமீட்டராக குறையும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக இ6 எலெக்ட்ரிக் காரில் 60 கிலோவாட் பேட்டரி பேக்கை நிறுவனம் பயன்படுத்தியிருக்கின்றது.

இப்பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 1.5 மணி நேரமே போதும். இந்த எம்பிவி காரில் 90 பிஎஸ் பவர் மற்றும் 180 என்எம் டார்க்கை வெளியற்றக் கூடிய இ-மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலக சந்தையில் பன்முக தேர்வில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் ஜிஎல்எக்ஸ் எனும் ஒற்றை தேர்வில் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்த தேர்வில் 10.1 அங்குல ரொட்டேட்டிங் வசதிக் கொண்ட தொடுதிரை வழங்கப்பட்டிருக்கின்றது. இது ஆன்ட்ராய்டு ஆட்டோ சிஸ்டம் வசதிக் கொண்டது. இத்துடன், 5 அங்குல எம்ஐடி திரை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆறு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய முன்பக்க இருக்கை உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுதவிர, ஐசோஃபிக்ஸ் இருக்கை, டயர் பிரஷ்ஷர் மானிட்டர், ரிவர்ஸ் கேமிரா உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் தற்போதைய விலை ரூ. 29.5 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட காராக பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் காராகும். பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் அன்லாக் டெயில்கேட், ரூஃப் ரெயில்கள் மற்றும் அட்ஜஸ்டபிள் ஓஆர்விஎம் உள்ளிட்ட அம்சங்களுடம் இந்த காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்காரின் வெளிப்புறம் மட்டுமில்லைங்க உட்பக்கமும் அல்ட்ரா லக்சூரியஸ் அம்சங்களுடன் இக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இதுமட்டுமின்றி, கூடுதல் பிரீமியம் அம்சங்களாக 12.8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 5 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், எலெக்ட்ரிக் பவர் அசிஸ்டட் ஸ்டியரிங் வீல், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய பிரீமியம் டைரக் எச்டி ஆடியோ சிஸ்டம், டைப் சி மற்றும் டைப் ஏ யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள், டிரைவர் மற்றும் முன் பக்க பயணிக்களுக்கு ஹீட்டட் வசதிக் கொண்ட இருக்கைகள் மற்றும் வாய்ஸ் கமேண்ட் வசதியும் உள்ளிட்டவைஅட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் இடம் பெற இருக்கின்றன. இதுதவிர, அடாஸ் தொழில்நுட்பமும் இந்த காரில் இடம் பெற இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த அம்சமானது பல்வேறு பாதுகாப்பு செயல்களை செய்ய உதவிய இருக்கும்.


Click it and Unblock the Notifications








