சுத்தம் செய்யுறதா சொல்லிட்டு கண்டபடி செஞ்சிடாதீங்க... எளிய முறையில் ஏசி வெண்டை சுத்தம் செய்யும் வழிகள்!
கார் ஏசி வெண்டை பராமரிக்கும் டிப்ஸையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். குறிப்பாக, வீட்டிலேயே வைத்து இதை எவ்வாறு செய்வது என்பதற்கான வழிக்காட்டுதல்களே இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
கார்களில் இருக்க வேண்டிய மிக முக்கியமான அம்சமாக ஏசி இருக்கின்றது. இது இல்லாத எந்தவொரு வாகனமும் சொகுசு வாகனமாக இருக்க முடியாது. இத்தகைய அம்சத்தை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் பாதுகாக்க வேண்டியது என்பது மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. அதிகமாக வேலை செய்யக் கூடிய அம்சமாக இது (ஏசி) இருப்பதாலேயே விரைவில் பழுதாகுதலுக்கு ஆளாகுகின்றது. இதுமட்டுமின்றி, அதிக தூசி படிவதற்கும், அழுக்காகுதலுக்கும் ஏசி வெண்டுகள் ஆளாகின்றன.

இதன் விளைவாக காருக்குள் தேவையற்ற துர்நாற்றம் வீசுதல், அசௌகரியமான சூழல் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று முறையாவது ஏசி வெண்டுகளை சுத்தம் செய்து விட வேண்டும். குறிப்பாக, ஏசி வெண்டுகளுக்கு இடையில் இருக்கும் காற்று வரும் வழியை அதிக கவனத்துடன் சுத்தம் செய்தல் வேண்டும். ஈரப்பதம் அதிகம் ஏற்படும் பகுதி இது என்பதால் இங்கு பூஞ்சைகள் சேர வாய்ப்புகள் மிக அதிகம்.
இதனால்தான் சில நேரங்களில் ஏசி ஆன் செய்த உடன் துர்நாற்றம் வீசும். இந்த மாதிரியான சூழலில் அந்த வெண்டுகளை ஓர் குட்டி சர்வீஸ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் காருக்குள் புத்துணர்வான சூழலை ஏற்படுத்த முடியும். இதை எவ்வாறு எளிய முறையில் செய்யலாம் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். அதாவது, ஏசி வெண்டை பராமரிக்கும் டிப்ஸையே இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஃபோம் பெயிண்ட் பிரஷை கொண்டு சுத்தம் செய்யும் முறை:
பழையது இல்லாமல் புதிதாக ஓர் ஃபோம் பெயிண்ட் பிரஷ்ஷை வாங்கிக் கொள்வது நல்லது. ஏசி வெண்டை சுத்தம் செய்ய மிக சிறப்பான கருவி இதுவாகும். இது விலை அதிகமானதுதான், இருப்பினும் எளிதில் இதை வாங்கிவிட முடியும். கார் ஒர்க்ஷாப் மற்றும் உதிரிபாகங்கள் விற்கும் கடைகளில் சுலபமாகக் கிடைக்கும். அடுத்ததாக சுடுநீர் மற்றும் வினிகரை இரண்டையும் சேர்த்து சுத்தம் திரவத்தை தயார் செய்ய வேண்டும். இந்த திரவத்தில் பிரஷ்ஷை ஒவ்வொரு முறையும் நனைத்து எடுத்து ஏசி வெண்டை சுத்தம் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதனால் முழுமையாக தூசிகள் அகற்றப்படும். குறிப்பாக, பூஞ்சைகள் ஏதேனும் படர்ந்திருந்தால் அவை முற்றிலுமாக அகற்றப்படும். இதை செய்து முடித்த பின்னர் கடைசியாக காய்ந்த பிரஷ்ஷைக் கொண்டு ஒரு முறை மீண்டும் சுத்தம் செய்து விட வேண்டும்.
கார் கேபினின் ஏர் ஃபில்டரை ரீ-பிளேஸ் செய்யலாம்:
மாடர்ன் கார்கள் பல ஈசியாக கேபின் ஏர் ஃபில்டரை ரீ-பிளேஸ் செய்யும் வசதி உடன் வருகின்றன. காரின் கேபினுக்குள் இருந்தே இதை செய்து விட முடியும். இதை எவ்வாறு செய்வது என்பதற்கான வழிக்காட்டுதல்கள் உங்கள் காரின் மேனுவல் புக்கில் வழங்கப்பட்டிருக்கும். ஒரு சில ஸ்டெப்களை கடைப்பிடிப்பதனால் கேபின் ஏர் ஃபில்டரை ரீ-பிளேஸ் செய்து விட முடியும். எப்போது கேபின் ஏர் ஃபில்டரை மாற்றலாம் என்கிற உங்களுக்கு எழும்பலாம். ஒவ்வொரு 24,000 கிமீ பயணத்திற்கு பின்னர் கேபின் ஏர் ஃபில்டரை மாற்றுவது நல்லது. குறிப்பாக, நீங்கள் மிகுந்த மாசுள்ள நகர்புற பகுதியில் வசிப்பீர்கள் என்றால் ஃபில்டரை அவ்வப்போது மாற்றுவது ரொம்ப ரொம்ப நல்லது. இது உங்களின் காருக்குள் தூய்மான காற்று இருப்பதை உறுதிப்படுத்தும்.
ஏர் இன்டேக்கை சுத்தம் செய்தல் வேண்டும்:
காருக்குள் காற்றைக் கடத்தும் ஓர் அம்சமாக ஏர் இன்டேக்குகள் இருக்கின்றன. இந்த பகுதியையே பயன்படுத்தி ஏசி தனக்கான காற்றைப் பெறுகின்றது. ஆகையால், இதையும் அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியமானதாக இருக்கின்றது. இந்த பகுதியை பிரஷ்ஷைக் கொண்டு சுத்தம் செய்யலாம். இத்துடன், இதை சுத்தம் செய்வதற்கென தனியாக ஸ்பிரேக்கள் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதைக் கொண்டு சுத்தம் செய்வதனால் கார் கேபினுக்குள் வரும் காற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.
கேபின் ஏசி வெண்டில் கிருமி நாசினி தெளிக்கலாம்:
இந்த ஸ்டெப் மிக முக்கியமானது இதை செய்வதனால் காருக்குள் இருக்கும் கிருமியை முழுமையாக அகற்ற முடியும். இதை செய்யும்போது காரின் அனைத்து கதவுகளும், ஜன்னல்களும் முழுமையாக அடைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, சாவி ஆஃப் நிலையில் இருத்தல் வேண்டும். இதன் பின்னரே காருக்குள் கிருமி நாசினி ஸ்பிரேவை தெளிக்க வேண்டும். இதை செய்த பின்னர் சில நிமிடங்கள் கழித்து காரை ஸ்டார்ட் செய்து ஏசியை ஆன் செய்ய வேண்டும்.
ஃபேன் மோடிலும் சில நிமிடங்கள் ஏசியை ரன் செய்ய வேண்டும். ஒரு 10 நிமிட இடைவெளிக்கு பின்னர் ஏசியை ஆஃப் செய்து விடலாம். இதற்கு பின்னர் மீண்டும் காரின் அனைத்து கதவுகளையும் திறந்துவிட்டு மீண்டும் சில நிமிடங்கள் ஏசியின் ஃபேன் மோடை ஸ்டார்ட் செய்ய வேண்டும். இதன் வாயிலாக முழுமையாக ஏசி வெண்டு சுத்தம் ஆகிவிடும். மேலும், காரில் பயணிக்கும்போது முற்றிலும் புத்துணர்ச்சியான பயண அனுபவத்தை வழங்கும்.


Click it and Unblock the Notifications








