கூடுதல் வருமானம் மூலம் புதிய கார் கனவை நிஜமாக்க உதவும் பினாமோ... ஆயிரக்கணக்கான வர்த்தகர்களின் நம்பிக்கை!

அனைவரது வாழ்க்கையிலும் கார்கள் இன்று அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டன. ஆனால் முன்பெல்லாம் கார்கள் ஆடம்பரமான ஒன்றாக மட்டுமே கருதப்பட்டன. முன்பெல்லாம் தங்கள் அந்தஸ்தை வெளிக்காட்டுவதற்காகவே பலரும் கார்களை வாங்கினர். ஆனால் தற்போது அன்றாட தேவைகளுக்கு கார்கள் அவசியமான ஒன்றாக மாறியுள்ளன.

கார்கள் இருந்தால் நமது பயணங்கள் பாதுகாப்பாக அமைவதுடன், விரும்பிய இடத்திற்கு விரும்பிய நேரத்தில் எந்த தொந்தரவும் இன்றி சென்று வரலாம். அதுவும் அவசர சமயங்களில், எந்தவிதமான தாமதமும் ஏற்படாமல் நமது பயணங்களை கார்கள் சுலபமாக்குகின்றன. உதாரணத்திற்கு யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முடியும்.

கூடுதல் வருமானம் மூலம் புதிய கார் கனவை நிஜமாக்க உதவும் பினாமோ... ஆயிரக்கணக்கான வர்த்தகர்களின் நம்பிக்கை!

இப்படி கார்கள் வைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் கார்களை வாங்க வேண்டுமென்றால், நாம் அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். விலை குறைவான கார்களை வாங்க வேண்டுமென்றால் கூட நாம் ஒரு சில லட்சங்களை செலவழிக்க வேண்டும். விலை உயர்ந்த சொகுசு கார்கள் என்றால் கோடிகளில் கூட செலவழிக்க நேரிடும். அத்துடன் பராமரிப்பு போன்ற விஷயங்களுக்கும் பணத்தை செலவு செய்ய வேண்டியதிருக்கும். எனவே கார் வாங்குவதற்கு முன்பாக அதன் செயல்முறைகளின் 6 படிநிலைகளை நீங்கள் தெரிந்து கொள்வது நன்மை பயக்கும்.

உங்கள் தேவைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

பொதுவாக ஹேட்ச்பேக்குகள், செடான்கள், எம்யூவி மற்றும் எஸ்யூவி என பல வகையான கார்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆனால் ஆட்டோமொபைல் துறையில் தற்போது காலம் மாறி விட்டது. குறிப்பாக இந்திய சந்தையில்! அதாவது செக்மெண்ட்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக்குகள், காம்பேக்ட் செடான்கள், மிட்-சைஸ் செடான்கள், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவிகள், காம்பேக்ட் எஸ்யூவிகள், மிட்-சைஸ் எஸ்யூவிகள் என சப்-செக்மெண்ட்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்து வருகிறது.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், முன்பு போல் அல்லாமல், தற்போது தேர்ந்து எடுப்பதற்கு நிறைய கார்கள் உள்ளன. எனவே உங்கள் தேவைகளை தெளிவாக தெரிந்து கொள்வதுதான், கார் வாங்குவதன் முதல் படி. கார் எதற்காக பயன்படுத்தப்படவுள்ளது? அதிகமாக எங்கு கார் ஓட்டப்படும்? காரில் எத்தனை பேர் பயணம் செய்வார்கள்? குறிப்பிட்ட ஒரு சில வசதிகள் தேவைப்படுமா? எத்தனை ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டும்? என்பது போன்ற கேள்விகளை உங்களுக்குள்ளேயே கேட்டு பாருங்கள். உங்களுக்கு என்ன வகையான கார் தேவைப்படும்? என்பதற்கான விடை கிடைத்து விடும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யாத காரை வாங்குவது அனாவசியமானது.

பட்ஜெட்!

ஏற்கனவே குறிப்பிட்டபடி கார் வாங்குவது என்பது செலவு வைக்க கூடிய விஷயம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. நிறைய வாடிக்கையாளர்களால் காருக்கான முழு பணத்தையும் தங்கள் கைகளில் இருந்து செலுத்த முடியாத நிலைதான் காணப்படுகிறது. எனவே அவர்கள் வங்கி லோன் உதவிகளை நாடுகின்றனர். லோன் பெற வேண்டும் என்றால், குறிப்பிட்ட தொகையையாவது நீங்கள் செலுத்த வேண்டும். அதன்பின் மாதந்தோறும் வட்டியுடன் இஎம்ஐ செலுத்த வேண்டும்.

கூடுதலாக எரிபொருள், பராமரிப்பு, காப்பீடு, பழுது போன்றவைகளுக்கும் செலவு செய்ய வேண்டியதிருக்கும். இந்த அம்சங்கள் பலரால் கவனிக்கப்படுவதில்லை. கார் வாங்கும்போது செலுத்த வேண்டிய தொகைக்கும் மட்டும் திட்டமிட்டால் போதாது. தினமும் காரை ஓட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்? என்பதையும் சேர்த்தே திட்டமிட வேண்டும்.

வாய்ப்புகளை ஆராயுங்கள், நிறைய கார்களை டெஸ்ட் டிரைவ் செய்யுங்கள்!

கார் வாங்கும் செயல்முறைகளில் இந்த நடவடிக்கைகள் மிகவும் முக்கியமான ஒன்று. அருகில் உள்ள டீலர்ஷிப்களுக்கு நேரில் செல்லுங்கள். ஒரு காரின் எந்த வேரியண்ட் உங்கள் தேவைகளுக்கும், பட்ஜெட்டிற்கு ஏற்றதாக இருக்கும்? என்பதை ஆராயுங்கள். ஒரு டீலர்ஷிப்புடன் நின்று விடாமல், வேறு சில டீலர்ஷிப்களுக்கும் செல்லுங்கள். ஒரு சில நிறுவனங்கள் உங்கள் தேவைக்கும், பட்ஜெட்டிற்கும் ஏற்ற ஒரே ஒரு ஆப்ஷனை மட்டுமே வழங்கலாம். அதே சமயம் வேறு சில நிறுவனங்கள் உங்களுக்கு நிறைய ஆப்ஷன்களை கொடுக்கலாம்.

கார்களில் என்னென்ன வசதிகள் வழங்கப்படுகின்றன? என்பதை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். அத்துடன் எந்த டீலர்ஷிப்பில் உங்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கிறது? என்பதையும் பாருங்கள். முக்கியமான ஒரு டீலர்ஷிப்பில் சொல்லப்படும் ஒரு காரின் விலையை, மற்றொரு டீலர்ஷிப்பில் சொல்லப்படும் விலையுடன் ஒப்பிட்டு பார்ப்பது அவசியம். அத்துடன் கார்களை பற்றி நன்கு தெரிந்தவர்களின் ரிவியூக்களுக்கும் மதிப்பு கொடுங்கள். கார்களை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கும் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களிடமும் ஆலோசனைகளை பெறலாம். மேலும் பல்வேறு கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். அப்போது எந்த கார் ஓட்டுவதற்கு உங்களுக்கு ஏற்றதாக உள்ளது? என்பது தெரியவரும்.

பேரம் பேசுங்கள்!

இந்தியாவில் உள்ள பெரும்பாலான டீலர்ஷிப்கள் குறிப்பிட்ட கார்களுக்கு குறிப்பிட்ட தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்குகின்றன. ஆனால் இந்த தள்ளுபடிகளுக்கு பிறகு, பெரும்பாலான டீலர்ஷிப்கள் இறங்கி வர தயாராக இருக்க மாட்டார்கள். இங்கேதான் நீங்கள் செய்து வைத்திருக்கும் ஆய்வு உதவி செய்யும். நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு கார், ஒரு டீலர்ஷிப்பில் குறைவான விலையில் கிடைக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால், மற்றொரு டீலர்ஷிப்பில் விலையை மேலும் குறைப்பதற்கு உதவியாக இருக்கும்.

நீங்கள் மனதில் வைக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், டீலர்ஷிப்கள் கூறும் விலையில், காப்பீடு, சாலை வரி, பதிவு கட்டணம் போன்றவை அடங்கும். ஆனால் ஒரு சில டீலர்ஷிப்கள், காரின் ஆன்-ரோடு விலையில் ஹேண்ட்லிங் கட்டணத்தையும் சேர்க்கின்றன. ஹேண்ட்லிங் கட்டணத்தை சேர்க்க கூடாது என நீங்கள் அழுத்தமாக வலியுறுத்த வேண்டும். அதே சமயம் காப்பீடு கட்டணங்கள், சேவை வழங்கும் நிறுவனத்தை பொறுத்து மாறுபடலாம். எனவே குறைவான கட்டணத்தில் எது சிறந்த தேர்வாக உள்ளதோ, அதை நீங்கள் தேர்ந்து எடுக்கலாம்.

உங்கள் உரிமைகளை தெரிந்து கொள்ளுங்கள்!

ஒரு வாடிக்கையாளராக உங்களுக்கென்று சில உரிமைகள் இருக்கின்றன. அவற்றை பூர்த்தி செய்வது, டீலர்ஷிப்களின் கடமை. இதன் உண்மையான பலனை நீங்கள் பெற வேண்டுமென்றால், உங்கள் உரிமைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் உரிமைகள் மிகவும் நீளமானது. எனவே முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே வழங்கியுள்ளோம்.

- கார் திருப்திகரமான தரத்தில் இருப்பது அவசியம். நல்ல கண்டிஷனில் உள்ள காரைதான் டீலர்ஷிப்கள் உங்களுக்கு வழங்க வேண்டும்.

- எந்த தகவலும் மறைக்கப்பட கூடாது. உங்கள் கார் பற்றிய அனைத்து தகவல்களையும், உங்களுக்கு தெரிவிக்க வேண்டும். தவறான தகவல்கள் சட்ட விரோதமானது.

- காரின் தரம் திருப்திகரமாக இல்லையென்றால், அதனை மறுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. உங்களால் அப்படி செய்ய முடியாது என உங்களை சமரசம் செய்ய டீலர்ஷிப் பணியாளர்கள் முயற்சிக்கலாம். ஆனால் அது சாத்தியமே.

- டெலிவரி முன்பாக காரை பரிசோதனை செய்யும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. எந்த டீலர்ஷிப்பும் அதனை தடுக்க முடியாது.

கூடுதல் வருமானம்

கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கிகளிடம் இருந்து கார் லோன் பெறலாம். லோன் மூலம் காரை வாங்கி விட்டாலும் கூட, அதனை திருப்பி செலுத்த வேண்டும். எனவே கூடுதல் வருமானம் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். எரிபொருள், பராமரிப்பு மற்றும் பழுது ஆகியவற்றை ஈடுகட்டுவதற்கும் கூடுதல் வருமானம் உதவிகரமாக அமையும்.

உங்கள் கூடுதல் வருமானத்திற்கான முக்கிய ஆதாரமாக பினாமோ பிளாட்பார்ம் (Binomo Platform) இருக்கும். பினாமோ மிகவும் பிரபலமான ட்ரேடிங் பிளாட்பார்ம் ஆகும். 130க்கும் மேற்பட்ட நாடுகள் இது கிடைக்கிறது. நம்பகத்தன்மை வாய்ந்தது மற்றும் வர்த்தகம் உண்மையானது என்பதால், இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான வர்த்தகர்களும் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பினாமோவை நம்பியுள்ளனர். பினாமோவில் முதலீடு செய்வது, பங்குகள், பொருட்கள் மற்றும் உலோகங்கள் உள்ளிட்டவற்றை வர்த்தகம் செய்வதற்கு உங்களை அனுமதிக்கும்.

முதல் முறை வர்த்தகர்களுக்கு பினாமோ மிகச்சிறந்த பயிற்சியையும் வழங்குகிறது. டெமோ அக்கௌண்ட் மிகவும் பாதுகாப்பானது. ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ஆபத்து இல்லாமல் வர்த்தகம் செய்வதற்கு இது உதவும். ஏனெனில் டெமோ அக்கௌண்ட்டில் நீங்கள் முதலீடு செய்ய தேவையில்லை. நீங்கள் தயாரானவுடன், பினாமோவில் உண்மையான வர்த்தக உலகம் உங்களுக்காக காத்திருக்கிறது.

பினாமோ மூலம் சம்பாதிக்கும் பணத்தின் மூலம் நீங்கள் காரும் வாங்கலாம். அதற்கான பராமரிப்பு செலவுகளையும் செய்யலாம். கூடுதல் வருமானம் பெறுவதற்கு இது மிகச்சிறந்த தளமாக தெரிகிறது.

டிப்ஸ்!

புதிய காரை வாங்குவதற்கு தேவையான மற்றும் அதற்குண்டான பராமரிப்பு செலவுகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவது கடினமான வேலையாக இருக்கலாம். ஆனால் கூடுதல் வருமானத்திற்கு பினாமோ உதவி செய்வதால், அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் எந்தவொரு முதலீடு நடவடிக்கையும், நிதி இழப்பு அபாயத்தை கொண்டுள்ளது. எனவே நீங்கள் சற்று கவனமாக ரிஸ்க் எடுத்தால், பணம் சம்பாதிக்க முடியும். உங்கள் கனவு காரை சொந்தமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை நீங்கள் தொடங்கும் நேரம் இது!

More from DriveSpark

Article Published On: Tuesday, April 26, 2022, 16:28 [IST]
English summary
Car buying process in 6 steps
மேலும்... #கார் டாக் #car talk
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+