ஹேக்கர்கள் செம்ம ஷார்ப்... சின்ன கேப் கிடைச்சா போதும் காரை தூக்கிருவாங்க.. இதோ 10 சாத்தியமான வழிகளின் பட்டியல்

ஹேக்கிங் போன்ற இணைய உலகம் சார்ந்த சைபர் கிரைம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. உரிமையாளருக்கே தெரியாமல் அவரது வங்கிக் கணக்கு, சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவது என உலகளவில் பற்பல சைபர் கிரைம்கள் அரங்கேறிக் கொண்டு உள்ளன.

இதுமட்டுமில்லைங்க சமீப காலமாக வாகனங்களிலும் மோசடி மன்னன்கள் (சைபர் கிரைம் ஹேக்கர்கள்) கை வைக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஷாக்கெல்லாம் ஆக வேண்டாம். ஏற்கனவே கார் ஹேக்கர்கள் தங்களை சம்பவங்களை சிறப்பாக செய்ய தொடங்கிவிட்டனர். காரின் பயன்பாட்டை சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாக வழங்கப்படும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கின்றது. இதனை கணினி அல்லது ஸ்மார்ட் ஃபோன் என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கார் ஹேக்

எனவே ஸ்மார்ட் ஃபோன் மற்றும் கணினிகளைப் போல் இவையும் வைரஸ்கள், ஹேக்கிங் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, இந்த தொழில்நுட்ப கருவியில் உள்ள சின்ன ஓட்டையே (தொழில்நுட்ப குறைபாடே) ஹேக்கர்கள் காரை எளிதில் ஹேக் செய்ய உதவியாக இருக்கின்றன. அண்மையில் ஆராய்ச்சியாளர்கள் சிலர் காரை ஹேக் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் என்னென்ன உள்ளன என்பதை பட்டியல் போட்டு இந்த உலகிற்கு வெளிக்காட்டினர். உதாரணமாக அவர்கள் புகழ்பெற்ற ஜீப் செரோகி கார் மாடலை ஹேக் செய்தும் காட்டினர்.

காருடன் எந்த ஒரு நேரடி தொடர்பும் மேற்கொள்ளாமல் ஜீப் செரோகியின் ஸ்டியரிங் வீல், பிரேக்குகள், டிரான்ஸ்மிஷன், டிஜிட்டல் திரை மற்றும் ரேடியோ என பலவற்றை பயன்படுத்தி அனைவரையும் அவர்கள் அதிர்ச்சியில் உறைய வைத்தனர். இதன் வாயிலாக நவீன கார் மாடல்கள் சில ஆபத்தில் உள்ளன என்பதை அவர் நிரூபித்துக் காண்பித்தனர். இதுபோன்று எந்தெந்த வழிகளில் எல்லாம் நவீன கால கார்கள் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதையே இதந் பதிவில் பார்க் இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கார் ஹேக்

கீலெஸ் ரிமோட்:

நவீன கார்கள் சிலவற்றில் சாவிக்கு பதிலாக ரிமோட் வழங்கப்படுகின்றன. இந்த டிஜிட்டல் சாவியில் இருந்து வெளிவரும் சென்சாரே காரை கட்டுப்படுத்துகின்றது. இதையே கார்கள் செயற்கையாக வேறொரு தொழில்நுட்ப கருவியின் உதவியைக் கொண்டு காரை திறக்கின்றனர். இதனை தவிர்க்க பெரியளவில் வழிகள் இல்லை. அதேவேலையில், காரின் ஃபாப்பை (fob) ஃப்ரிட்ஜ் அல்லது மைக்ரோஓவனுக்குள் மறைத்து வைப்பதன் வாயிலாக பிறர் யாரும் கட்டுப்படுத்தாத வண்ணம் பாதுகாக்க முடியும் என்கின்றனர் கார் வல்லுநர்கள். ஆனால், இது சற்று ரிஸ்கான ஒன்று என்பது கவனிக்கத்தகுந்தது.

ஃபிஷ்ஷிங் மெசேஜ் (Phishing Messages):

காரை ஹேக் செய்வதற்கு இந்த ஒரு வழியும் உண்டு. ஒய்-ஃபை சிஸ்டம் வாயிலாகவே இதனை ஹேக்கர்கள் செய்கின்றனர். ஒய்-ஃபை-யை பயன்படுத்தி அதன் வழியாக உங்கள் செல்போனுக்கு இ-மெயில் வாயிலாக லிங்கை அனுப்ப முடியும். இவ்வாறு செய்வதன் வாயிலாக கார் உட்பட அனைத்தின் கட்டுப்பாடும் ஹேக்கர்களின் கைகளுக்கு மாறும். இதை நார்வேவை சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் டெஸ்லா மாடல் எஸ் காரை செய்து காட்டினர் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே உங்கள் ஒய்-ஃபை செட்-அப்பை அதிக பாதுகப்பானதாக வைத்துக் கொள்வது மிக நல்லது.

கார் ஹேக்

ஓபிடி II டாங்கிள் (OBD II Dongles) மற்றும் ஜிபிஎஸ் கருவி:

கார் ஹேக்கர்கள் நாம் நினைப்பதைவிட மிகவும் அதிகம் திறன் வாய்ந்தவர்கள். இதற்கு மிக சிறந்த சான்றாக இந்த ஹேக்கிங் முறை உள்ளது. அவர்கள் நாம் மிகவும் சாதாரணமானது என கருதும் ஜிபிஎஸ் மற்றும் ஓபிடி II கருவியைக் கொண்ட கார்களை ஹேக் செய்துவிடுகின்றனர். குறிப்பாக, ஜிபிஎஸ் கருவியில் உள்ள ஐபி முகவரியைப் பயன்படுத்தியே கார் ஹேக்கர்கள் காரை ஹேக் செய்கின்றனர். இதேபோல், ஓபிடி கருவியில் உள்ள ப்ளூடூத் இணைப்பை பயன்படுத்தியும் ஹேக்கர்கள் காரை ஹேக் செய்கின்றனர். ஓபிடி II கருவி பல்வேறு காரணங்களுக்காக காரில் பொருத்தப்படுகின்றன. குறிப்பாக, டிரைவிங் ஸ்டைலைக் கண்கானிக்கவே இது பயன்படுத்தப்படுகின்றது. இதையே ஹேக்கர்கள் தங்களின் ஹேக்கிங்கிற்காக பயன்படுத்துவது கார் உரிமையாளர்களுக்கு ஷாக் அளிக்கும் தகவல் ஆகும்.

ரேடியோ மற்றும் ஏசி:

இது உங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கலாம். ஹேக்கர்கள் காரில் உள்ள ரேடியோ வாயிலாகவும் காரை ஹேக் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வாயிலாக காரை ஹேக் செய்த பின்னர் ஸ்டீரியோவை மேலே அல்லத கீழே மாற்ற முடியாது. மேலும், ரேடியோவை அணைக்கவோ, இயக்கவோகூட முடியாது. இவ்வாறு செய்வதன் வாயிலாக டிரைவரின் கவனத்தை திசை திருப்பி கார் களவு செய்யப்படலாம். இதேபோல் காரின் ஏசி சிஸ்டத்தையும் ஹேக் செய்து கார் டிரைவரை ஹேக்கர்கள் திசை திருப்பு தங்களின் நாசகாரியத்தை செய்கின்றனர்.

இதுமட்டுமின்றி, வாகனத்தின் த்ரோட்டில், விண்ட்ஷீல்டு வைப்பர்கள், பிரேக் மற்றும் வெயிக்கிள் டைக்னாஸ்டிக் போன்றவற்றையும் ஹேக்கர்கள் ஹேக் செய்கின்றனர். குறிப்பாக, ஓர் காரின் வெயிக்கிள் டைக்னாஸ்டிக் சிஸ்டத்தை ஹேக் செய்யும்போது பல்வேறு அந்த வாகனம் பற்றிய தகவல்களை அவர்களால் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு திருடப்படும் தகவல்களை வைத்து அவர்களால் பல்வேறு காரியங்களை செய்து கொள்ள முடியும். ஹேக்கர்கள் காரை திருட மட்டுமின்றி நம்முடைய சில ஆவணங்களையும் திருடவும் ஹேக் செய்கின்றனர். ஆகையால், நவீன கால இணைப்பு வசதிக் கொண்ட கார்களுக்கு எதிர்காலத்தில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 28, 2022, 6:30 [IST]
English summary
Car could be hacked here is 10 way
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+