இந்த ஐந்து பொருட்கள் மட்டும் உங்க கையில இருந்தா போதும்... எப்பவுமே காரை புதுசு போல வச்சுக்கலாம்!

காரை எப்போதும் புதிதுபோல் வைத்துக் கொள்வதற்கு உதவும் ஐந்து முக்கிய பொருட்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

காரை வீட்டிலேயே வைத்து டீடெய்லிங் செய்ய தேவைப்படும் 5 முக்கிய பொருட்களின் பட்டியல்! எப்பவுமே காரை புதுசு போல வச்சுக்கலாம்!

காரை புதிதுபோல் வைத்துக் கொள்ள யாருக்குதான் பிடிக்காது. இதற்காக சிலர் ஆயிரக் கணக்கான ரூபாயை அவ்வப்போது கொட்டி வருகின்றனர். சாதாரணமான வாட்டர் வாஷைக் காட்டிலும் 'டீடெய்லிங்' (Detailing) எனப்படும் முறையிலேயே கார் முற்றிலும் புதிதுபோன்ற தோற்றத்தைப் பெறுகின்றது. தெளிவாகக் கூற வேண்டுமானால் ஷோரூமில் இருந்து புதிதாக இறக்கப்பட்ட வாகனத்தைப் போல் கார் டீடெய்லிங் செய்யப்பட்ட வாகனங்கள் காட்சியளிக்கும்.

காரை வீட்டிலேயே வைத்து டீடெய்லிங் செய்ய தேவைப்படும் 5 முக்கிய பொருட்களின் பட்டியல்! எப்பவுமே காரை புதுசு போல வச்சுக்கலாம்!

ஆனால் இதற்கு ரூ. 8000 முதல் ரூ. 10000 வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆம், இந்த மாதிரியான உயரிய கட்டணத்திலேயே கார் டீடெய்லிங் செய்யப்படுகின்றது. இதைவிட கூடுதல் கட்டணம் வசூலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தங்களுடைய கார் புதிது போல் தோன்றுவதால் இந்த உச்சபட்ச தொகையை ஒரு சிலர் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. மேலும், அதனை ஒர்த்தானதாகவே கருதுகின்றனர்.

காரை வீட்டிலேயே வைத்து டீடெய்லிங் செய்ய தேவைப்படும் 5 முக்கிய பொருட்களின் பட்டியல்! எப்பவுமே காரை புதுசு போல வச்சுக்கலாம்!

அதேவேலையில், இந்தளவு பெரும் தொகையை செலவு செய்ய வேண்டுமான என யோசிப்பவர்களும் இருக்கின்றனர். அந்தமாதிரியான நபர்களுக்கானதே இந்த பதிவு. வீட்டிலேயே வைத்து காரை டீடெய்லிங் செய்ய தேவையான பொருட்களின் பட்டியலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இவற்றை நாமே வாங்கி, நாமே காரை சுத்தம் செய்வதனால் பல ஆயிரக்கணக்கான ரூபாயை நம்மால் மிச்சப்படுத்த முடியும். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

காரை வீட்டிலேயே வைத்து டீடெய்லிங் செய்ய தேவைப்படும் 5 முக்கிய பொருட்களின் பட்டியல்! எப்பவுமே காரை புதுசு போல வச்சுக்கலாம்!

கார் டீடெய்லிங் மையங்கள் காரை ஷோரூம் புதிதுக்குக் கொண்டு வருவதற்காக பல்வேறு கருவிகளையும், மெஷின்களையும் பயன்படுத்தி வருகின்றன. அவையனைத்தையும் நம்மால் வாங்க முடியாது என்றாலும், குறைந்தபட்சம் ஐந்து பொருட்கள் இருக்க வேண்டியது அவசியமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த பொருட்கள் கையில் இருந்தால் எந்தளவு பழைய வண்டியாக இருந்தாலும், சில மணி நேரங்களில் புதிதுபோல் மாற்றிவிடலாம்.

காரை வீட்டிலேயே வைத்து டீடெய்லிங் செய்ய தேவைப்படும் 5 முக்கிய பொருட்களின் பட்டியல்! எப்பவுமே காரை புதுசு போல வச்சுக்கலாம்!

இதோ அவற்றின் லிஸ்ட்:

பிரஷ்ஷர் வாஷர்:

காரை டீடெய்லிங் செய்வதற்கு முன்னர் அதனை சுத்தமாக கழுவி எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கான கருவியே பிரஷ்ஷர் வாஷர். இது காரின் மீது படர்ந்திருக்கும் தூசு மற்றும் அழுக்குகளை முழுமையாக அகற்ற உதவும். இதுமட்டுமின்றி, சில கண்ணுக்கு தெரியாத இடத்தில் ஒளிந்திருக்கும் அழுக்குகளையும் போக்க இந்த பிரஷ்ஷர் வாஷர் பயன்படுகின்றன.

காரை வீட்டிலேயே வைத்து டீடெய்லிங் செய்ய தேவைப்படும் 5 முக்கிய பொருட்களின் பட்டியல்! எப்பவுமே காரை புதுசு போல வச்சுக்கலாம்!

காரை கழுவும்போது ஃபோம் வாஷ் கொண்டு இன்னும் கூடுதல் பலனை அளிக்கும். குறிப்பாக, நீண்ட நாட்களாக படிந்து கிடக்கும் அழுக்கு மற்றும் பறவைகளின் எச்சத்தை அகற்ற முடியும். அதேவேலையில், காரின் பேனல்கள் மீது மட்டுமே கவனத்தை செலுத்தாமல் டயர், காரின் அடிப்பகுதி என அனைத்து பகுதிகளிலும் கவனத்தைச் செலுத்துவது நல்லது.

காரை வீட்டிலேயே வைத்து டீடெய்லிங் செய்ய தேவைப்படும் 5 முக்கிய பொருட்களின் பட்டியல்! எப்பவுமே காரை புதுசு போல வச்சுக்கலாம்!

வாஷிங் மிட்ஸ் மற்றும் மைக்ரோ ஃபைபர் துணிகள்:

வாஷிங் மிட்ஸ் மற்றும் மைக்ரோ ஃபைபர் ஆகிய இரண்டும் உங்கள் காரை சிராய்ப்புகளில் இருந்து காப்பாற்ற உதவும். நாம் பயன்படுத்தும் கண்ட துணிகளால்கூட கார்களில் சிராய்ப்புகள் ஏற்படக் கூடும். எனவேதான் வாகன ஆர்வலர்கள் காரை சுத்தம் செய்வதற்கு மிட்ஸ் அல்லது மைக்ரோஃபைபர் துண்டை பயன்படுத்துகின்றனர்.

காரை வீட்டிலேயே வைத்து டீடெய்லிங் செய்ய தேவைப்படும் 5 முக்கிய பொருட்களின் பட்டியல்! எப்பவுமே காரை புதுசு போல வச்சுக்கலாம்!

இவை அழுக்கை நீக்குவதுடன், சிராய்ப்புகள் ஏற்படாமலும் வாகனங்களைக் காக்கின்றன. அதுமட்டுமின்றி, சிறிய நீர் துளிகளைகூட இந்த துணிகள் உறிஞ்சுக் கொள்ளும். ஆகையால், நீர் காய்ந்த பின்னர் ஏற்படும் துளிகளின் அச்சுகள்கூட இல்லாத வகையில் கார்களை சுத்தம் செய்து கொள்ள முடியும். எனவே இவற்றை பயன்படுத்துவதனால் மிகப் பெரிய வித்தியாசத்தை உங்களால் உணர முடியும்.

காரை வீட்டிலேயே வைத்து டீடெய்லிங் செய்ய தேவைப்படும் 5 முக்கிய பொருட்களின் பட்டியல்! எப்பவுமே காரை புதுசு போல வச்சுக்கலாம்!

பாலிஷ் மற்றும் கார் வேக்ஸ்:

காரை டீடெய்லிங் செய்ய இவையிரண்டும் முக்கியமானவை. பெண்கள் என்னதான் உயரிய விலைக் கொண்ட சோப்பை பயன்படுத்தினாலும், தங்களை மேலும் அழகுப்படுத்திக் கொள்ள ஃபுவண்டேஷன், ஸ்ட்ரோப் க்ரீம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகின்றனர். இதைப் போல்தான் இந்த பாலிஷும், கார் வேக்ஸும். காரை புதிதுபோல் காட்டுவதில் இவையே முக்கிய பங்களிக்கின்றன.

காரை வீட்டிலேயே வைத்து டீடெய்லிங் செய்ய தேவைப்படும் 5 முக்கிய பொருட்களின் பட்டியல்! எப்பவுமே காரை புதுசு போல வச்சுக்கலாம்!

இவற்றை தேர்வு செய்வதில் சற்று கவனமாக இருத்தல் அவசியம். விலை மலிவானவை நீண்ட உழைக்காது. மேலும், பெரியளவில் பலனையும் அளிக்காது. ஆகையால், சிறந்த வேக்ஸ் மற்றும் பாலிஷை தேர்வு செய்வது உகந்தது. கார் பாலிஷ்கள் சிறிய கீறல்களை மறைக்கும் திறன் கொண்டவை. மேலே பார்த்த ஸ்டெப்புகளுக்கு அடுத்தபடியாக கார் பாலிஷை பயன்படுத்துவது மிக நல்லது. பாலிஷைத் தொடர்ந்து கார் வேக்ஸ் அல்லது செராமிக் கோட்டிங் ஸ்பிரேவை கொண்டு காரை மீண்டும் துடைப்பதனால் அந்த காரின் தோற்றம் இன்னும் வேற லெவலுக்கு மெருகேற்றப்படும்.

காரை வீட்டிலேயே வைத்து டீடெய்லிங் செய்ய தேவைப்படும் 5 முக்கிய பொருட்களின் பட்டியல்! எப்பவுமே காரை புதுசு போல வச்சுக்கலாம்!

காரின் உட்பக்கம் மற்றும் டயர்கள்

மேலே பார்த்த மூன்று வழி முறைகளும் காரின் வெளிப்புற பேனல்களை மட்டுமே புதிதுபோல் காண்பிக்கும். டயர், காரின் உட்புறம் மற்றும் கண்ணாடிகளை புதிதுபோல் காண்பிக்க, அதற்கான க்ளீனர்களையே பயன்படுத்த வேண்டும். இந்த க்ளீனிங் மருந்துகளும் சந்தையில் தனியாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு காரின் டயர், டேஷ்போர்டு, இருக்கைகள் என பலவற்றை சுத்தம் செய்ய முடியும். இந்த ஒற்றை கெமிக்கல் உங்கள் காரின் பலதரப்பட்ட பாகங்களைச் சுத்தம் செய்யும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

காரை வீட்டிலேயே வைத்து டீடெய்லிங் செய்ய தேவைப்படும் 5 முக்கிய பொருட்களின் பட்டியல்! எப்பவுமே காரை புதுசு போல வச்சுக்கலாம்!

வேக்யூம் க்ளீனர்:

காரை வேக்யூம் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்வது ரொம்ப ரொம்ப நல்லதுங்க. கண்களுக்கு தெரியாத தூசி மற்றும் சிறிய மண் துகள்களை இதன் வாயிலாக முழுமையாக அகற்ற முடியும். இதனால், கார் பராமரிப்பில் மிக முக்கியமான கருவியாக இது பார்க்கப்படுகின்றது. சில நேரங்களில் நாம் காருக்குள் வைத்து உணவு உண்ண நேரிடும். அந்த நேரத்தில் சிறிதளவு உணவு பொருட்கள் சிதறினாலும்கூட அதனால் ஏற்படும் பின் விளைவுகள் அதிகம்.

காரை வீட்டிலேயே வைத்து டீடெய்லிங் செய்ய தேவைப்படும் 5 முக்கிய பொருட்களின் பட்டியல்! எப்பவுமே காரை புதுசு போல வச்சுக்கலாம்!

எறும்பு மொய்த்தல், எலி புகுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இவற்றை சமாளிக்க வேக்யூம் க்ளீனர் மிகுந்த உதவியாக இருக்கும். கண்களுக்கு தெரியாத பகுதியில் விழுந்திருக்கும் சிறிய துண்டு உணவைகூட இதன் வாயிலாக நீக்கிவிட முடியும். இதை தினந்தோறும் பயன்படுத்துவதனால் காருக்குள் ஏற்படும் தேவையற்ற துர்நாற்றத்தை வெளியேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேலே பார்த்த இந்த ஐந்து அம்சங்கள் நம் கையில் இருந்தால் வீட்டில் வைத்தே நம்முடைய காரை எப்போதும் புதிதுபோல் வைத்துக் கொள்ள முடியும். மேலும், பல ஆயிரங்களை இதன் வாயிலாக சேமித்துக் கொள்ள முடியும்.

Article Published On: Monday, October 10, 2022, 13:18 [IST]
English summary
Car detailing accessories
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+