டாடா, மஹிந்திரா கார்களின் விற்பனை தாறுமாறா அதிகரிக்குது!! உள்நாட்டு தயாரிப்புகளை தேடிச் செல்லும் மக்கள்!
உலகின் மிக பெரும் பயணிகள் கார்கள் சந்தைகளுள் ஒன்றாக விளங்கும் நமது இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களை வரிசைப்படி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

வழக்கம்போல் கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் பயணிகள் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக மாருதி சுஸுகி முதலிடத்தை தொடர்ந்துள்ளது. மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 1,34,166 ஆகும்.

அதுவே 2021 ஆகஸ்ட் மாதத்தில் 1,03,187 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, மாருதி கார்களின் விற்பனை வருடம்-வருடம் ஒப்பிடுகையில், 30.02% அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த பயணிகள் கார்களில் மாருதி சுஸுகியின் பங்கு மட்டுமே 40.87% ஆகும்.

இவ்வாறு கார்கள் விற்பனையில் எட்ட முடியாத இடத்தில் உள்ள மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை பலத்த போட்டிக்கு நடுவே ஹூண்டாய் மோட்டார்ஸ் தனதாக்கியுள்ளது. ஹூண்டாய் பிராண்டில் இருந்து கடந்த ஆகஸ்ட்டில் 49,510 கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2021 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஹூண்டாய் கார்களின் விற்பனையில் பெரிய அளவில் மாற்றமில்லை.

ஏனெனில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் 46,866 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்தது. இருப்பினும், துல்லியமாக பார்க்கும்போது, 2021 ஆகஸ்ட்டை காட்டிலும் கடந்த ஆகஸ்ட்டில் 5.64% அதிக கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது. இந்த வரிசையில் 3வது இடத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸை மிகவும் நெருங்கியவாறு டாடா மோட்டார்ஸ் உள்ளது.

உள்நாட்டு சந்தையில் கடந்த மாதத்தில் மொத்தம் 47,166 பயணிகள் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2021 ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 28,018 கார்களை மட்டுமே டாடா விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்க்கும்போது, டாடா கார்களின் விற்பனை கடந்த 1 வருடத்தில் மட்டும் 68.34% அதிகரித்துள்ளதை அறியலாம். டாடாவின் இந்த வளர்ச்சிக்கு நெக்ஸான் காருக்கு தொடர்ந்து அதிகரித்துவரும் தேவையை ஒரு காரணமாக கூறினாலும், பஞ்ச் உள்ளிட்ட புதிய அறிமுகங்களும் காரணங்களாக விளங்குகின்றன.

டாடா மோட்டார்ஸை தொடர்ந்து 4வது இடத்தில் மஹிந்திரா 29,852 கார்களின் விற்பனை உடன் உள்ளது. டாடா கார்களை போல், இந்திய ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திராவின் கார்களின் விற்பனையும் கடந்த ஒரு வருடத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் 15,973 கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில், வருடம்-வருடம் ஒப்பீடுகையில் மஹிந்திரா கார்களின் விற்பனை ஆனது 86.89% அதிகரித்துள்ளது. ஒரு சமயத்தில் மாருதி, ஹூண்டாய்க்கு அடுத்து இந்தியாவில் 3வது மிக பெரும் கார் பிராண்டாக உருவெடுக்க துவங்கிய கியா இம்முறை 5வது இடத்தை பெற்றுள்ளது. ஹூண்டாயை போல் தென்கொரியாவை சேர்ந்த கார் பிராண்டான கியா கடந்த மாதத்தில் மொத்தம் 22,322 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

ஆனால் 2021 ஆகஸ்ட்டில் மஹிந்திராவை காட்டிலும் சில நூறு கார்களை அதிகமாக கியா விற்பனை செய்திருந்ததை கீழே உள்ள அட்டவணையில் காணலாம். அதுமட்டுமின்றி, கியாவிற்கு அடுத்து எந்தெந்த நிறுவனங்கள், எந்த அளவிற்கு பயணிகள் கார்களை கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளன, 2021 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் அவை எந்த அளவிற்கு அதிகம்/குறைவு என்பதையும் இந்த அட்டவணையின் மூலம் அறியலாம்.
| Rank | Brand | Aug-22 | Aug-21 | Growth (%) YoY |
| 1 | Maruti | 1,34,166 | 1,03,166 | 30.02 |
| 2 | Hyundai | 49,510 | 46,866 | 5.64 |
| 3 | Tata | 47,166 | 28,018 | 68.38 |
| 4 | Mahindra | 29,852 | 15,973 | 86.89 |
| 5 | Kia | 22,322 | 16,750 | 33.27 |
| 6 | Toyota | 14,959 | 12,772 | 17.12 |
| 7 | Honda | 7,769 | 11,177 | -30.49 |
| 8 | Renault | 7,012 | 9,703 | -27.73 |
| 9 | Skoda | 4,222 | 3,829 | 10.26 |
| 10 | MG | 3,823 | 4,315 | -11.40 |
| 11 | Nissan | 3,283 | 3,209 | 2.31 |
| 12 | Volkswagen | 2,052 | 1,631 | 25.81 |
| 13 | Jeep | 1,321 | 1,173 | 12.62 |
| 14 | Citroen | 850 | 50 | 1600.00 |
| Rank | Brand | Aug-22 | Jul-22 | Growth (%) MoM |
| 1 | Maruti | 1,34,166 | 1,42,850 | -6.08 |
| 2 | Hyundai | 49,510 | 50,500 | -1.96 |
| 3 | Tata | 47,166 | 47,505 | -0.71 |
| 4 | Mahindra | 29,852 | 28,053 | 6.41 |
| 5 | Kia | 22,322 | 22,022 | 1.36 |
| 6 | Toyota | 14,959 | 19,693 | -24.04 |
| 7 | Honda | 7,769 | 6,784 | 14.52 |
| 8 | Renault | 7,012 | 7,128 | -1.63 |
| 9 | Skoda | 4,222 | 4,447 | -5.06 |
| 10 | MG | 3,823 | 4,013 | -4.73 |
| 11 | Nissan | 3,283 | 3,667 | -10.47 |
| 12 | Volkswagen | 2,052 | 2,915 | -29.61 |
| 13 | Jeep | 1,321 | 1,150 | 14.87 |
| 14 | Citroen | 850 | 575 | 47.83 |


Click it and Unblock the Notifications








