கார் தொடு திரையில் ஏற்படும் ஸ்கிராட்ச்களை அகற்ற இவ்ளோ சுலபமான வழிகள் இருக்கா! கார வித்தவங்ககூட இத சொல்லி தரல!

நவீன கார்களில் வழங்கப்படும் மிக முக்கியமான அம்சங்களில் தொடு திரையும் ஒன்று. இதை காரில் இருக்கும் ஸ்மார்ட்போன் என கூறலாம். இதை பயன்படுத்தியவர்களுக்கு இவ்வாறு கூறுவதற்கான காரணம் தெரியும். இந்த திரை வாயிலாக நம்முடைய செல்போனுக்கு வரும் அழைப்பு முதல் கொண்டு அலர்ட் வரை என அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இதுமட்டுமில்லைங்க, காரின் சில முக்கிய அம்சங்களையும் இதன் வாயிலாகக் கன்ட்ரோல் செய்ய முடியும். இதன் பயன்பாட்டை கடல் உடன் ஒப்பிடலாம். அந்தளவிற்கு பரந்த பயன்பாட்டை இது வழங்கும். எனவேதான் நவீன கால கார்களில் தவிர்க்க முடியாத அம்சமாக தொடு திரைகள் சிஸ்டங்கள் மாறியிருக்கின்றன. இந்த திரைகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் விரைவில் ஸ்கிராட்ச்களுக்கு ஆளாகின்றன. இது அந்த குறிப்பிட்ட திரையை பழையதாக காண்பிப்பதுடன், பயன்படுத்துவதற்கும் சிரமமானதாக மாற்றிவிடுகின்றது.

டச் ஸ்கிரீன்

ஆகையால், ஸ்கிராட்சுகளிடம் இருந்து அவற்றை காப்பாது நம்முடைய முக்கிய கடமையாக இருக்கின்றது. இந்த திரையை ஸ்கிராட்ச் குவார்டுகளைக் கொண்டு கீரல்களிடம் இருந்து காப்பாற்ற முடியும். இந்த ஸ்கிராட் குவார்டை பயன்படுத்தும் முன்னரே உங்க காரின் தொடுதிரையில் ஸ்கிராட்ச் விழுந்திருச்சா?, கவலையே வேண்டாம். ஸ்கிராட்சை போக்குவதற்கு பல யுக்திகள் உள்ளன. அந்தவகையில், சில எக்ஸ்பர்ட்டுகள் வாயிலாக கிடைத்த ஸ்கிராட்சை போக்க உதவும் டிப்ஸையே இந்த பதிவில் வழங்கி உள்ளோம். இதுகுறித்து விரிவாக பதிவிற்குள் போகலாம், வாங்க

டூத் பேஸ்டை கொண்டு ஸ்கிராட்சை போக்கலாம்:

சில எக்ஸ்பர்ட்டுகள் தங்களின் காரில் உள்ள தொடுதிரையில் ஏற்பட்டிருக்கும் ஸ்கிராட்சை போக்க டூத் பேஸ்டை பயன்படுத்தியிருக்கின்றனர். அப்போது அவர்களுக்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மிக முக்கியமாக அவர்கள் பேஸ்டை கொண்டு சுத்தம் செய்யும்போது அந்த திரையை முழுமையாக அணைத்து விட்டு செய்திருக்கின்றனர். அதேவேலையில், நாம் சுத்தம் செய்யும்போது கூடுதல் கவனத்துடன் செயல்படுது நல்லது. குறிப்பாக, பேஸ்டைக் கொண்டு திரையைச் சுத்தம் போது சுத்தமான மற்றும் மிகவும் மிருதுவான துணியை பயன்படுத்துவது நல்லது.

நாம் பயன்படுத்தும் துணிகளே சில நேரங்களில் கூடுதல் ஸ்கிராட்சுகளை உருவாக்கிவிடலாம். ஆகையால், காரின் திரையை சுத்தம் செய்யும்போது சாஃப்டான துணியைப் பயன்படுத்துவது மிக மிக அவசியமானதாக இருக்கின்றது. இது ஸ்கிராட்சுகளில் இருந்து நம்முடைய காரின் திரையை பாதுகாக்கும். மேலும், அதிக அழுத்தத்துடன் திரையை சுத்தம் செய்யக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இந்த திரைகள் மிகவும் மென்மையானவை என்பதால் நாம் கொடுக்கும் அதிக அழுத்தம் அதை பாதிக்கச் செய்யலாம். எனவே இந்த விஷயத்தில் மிக அதிக கவனத்துடன் செயல்படுவதே நல்ல பலனை அளிக்கும்.

பேக்கிங் பவுடரை பயன்படுத்தலாம்:

காரின் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஏற்படும் ஸ்கிராட்சுகளை போக்குவதில் பேக்கிங் பவுடர் மிக சிறப்பாக செயலாற்றுகின்றது. பேக்கிங் பவுடருடன் சிறிதளவு தண்ணீரை பயன்படுத்தி, அந்த பேஸ்டை தொடுதிரை மீது பூசிவிட வேண்டும். அது காய்ந்து விடுவதற்குள் மிகவும் மென்மையான துணியைக் கொண்டு துடைத்தெடுக்க வேண்டும். அதற்கு முன்னபாக திரை மீது வைத்து லேசாக தேய்த்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் வாயிலாக உடனுக்குடன் திரை மீது உருவாகியிருக்கும் ஸ்கிராட்சுகள் உடனடியாக மாயமாகும். மேலும், அது பார்க்க புதிது போல் பளிச்சிட தொடங்கும். இதை செய்யும்போதும் அந்த திரையை ஆஃப் செய்திருப்பது நல்லது.

ஸ்கிராட்ச்களை போக்கும் வெஜிடபிள் ஆயில்:

வெஜிடபிள் ஆயிலில் ஸ்கிராட்ச்களை மறைக்கும் தன்மை இருப்பதை உங்களால் நம்ப முடிகின்றதா?, இதை ஏற்கனவே சில எக்ஸ்பர்ட்டுகள் செய்து பார்த்து வெற்றியைக் கண்டிருக்கின்றனர். ஓர் மென்மையான துணியில் லேசான அளவு வெஜிடபிள் ஆயிலை தொட்டு, அதை திரையின் மீது பூசுவதன் வாயிலாக ஸ்கிராட்ச்களை உடனடியாக மறைக்க முடியும். குறிப்பாக, 10 முதல் 15 நிமிடங்கள் விட்டு பின்னர் அந்த ஆயிலைத் துடைக்கும்பட்சத்தில் அந்த திரை புதிதுபோல் மாறிவிடும். இந்த செயலின்போதும் திரை ஆஃப் செய்யப்பட்ட நிலையில் இருத்தல் அவசியமானது. மேலும், தலைக்கு எண்ணெய்யை ஊற்றுவதுபோல் ஊற்றாமல் மிக மிக குறைவாக தொட்டு திரை மீது பூச வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஸ்கிராட்சுகளை போக்கும் கிரீம்கள்:

சந்தையில் தற்போது தொடு திரைகளை பராமரிப்பதற்கு என தனி கிரீம்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவை எந்தவித பக்கவிளைவுகளையும் திரையில் ஏற்படுத்தாதது. மேலும், பயன்படுத்த பாதுகாப்பானவை என கூறப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, திரையில் ஏற்படும் ஸ்கிராட்சுகளை நொடிப் பொழுவதில் போக்குவதிலும் இவை நல்ல பலனை அளிக்கும். அதேநேரத்தில், இதைக் கொண்டு திரையை சுத்தம் செய்யும்போது மிகவும் சுத்தமான மற்றும் மென்மையான துணியையே பயன்படுத்த வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஸ்கிராட்ச் குவார்டுகள்:

மேலே பார்த்த அனைத்தைக் காட்டிலும் ஸ்கிராட்ச் குவார்டுகளைப் பயன்படுத்துவதே மிக மிக சிறந்தது. நாம் ஓர் புதிய காரை வாங்கிய உடன் இது செய்துவிட்டால், அந்த திரையை வாழ்நாள் முழுவதும் ஸ்கிராட்சுகளில் இருந்து காப்பாற்ற முடியும். ஸ்கிராட்ச் குவார்டுகள் தற்போது சந்தையில் மிக மிக குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவை மாற்றுவது மிக மிக சுலபமானது. ஸ்கிராட்ச் காரணமாக திரையை மாற்றுவதைக் காட்டிலும் பலமடங்கு குறைவான செலவே ஸ்கிராட்ச் குவார்டுகளை மாற்ற ஆகும்.

Most Read Articles

English summary
Car touchscreen scratch remove technique
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X