இந்தியாவில் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள்... எல்லாத்தையும் வாங்கணும் போல தோணுதே!
இந்தியாவில் நடப்பு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2022-23 நிதியாண்டு தொடங்கியுள்ளது. இந்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ஹூண்டாய் கிரெட்டா நைட் எடிசன் மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ லெஜெண்ட் எடிசன் போன்ற ஒரு சில கார்கள் இந்த மாதத்தில் ஏற்கனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டன.

அதே நேரத்தில் இன்னும் ஒரு சில புதிய கார்கள் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளன. இதன்படி இந்திய சந்தையில் நடப்பு ஏப்ரல் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ள புதிய கார் மாடல்கள் பற்றிய விபரங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். நீங்கள் புதிய கார் வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த தகவல்கள் உங்களுக்கு உதவி செய்யும் என நம்புகிறோம்.

மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 ஃபேஸ்லிஃப்ட் (Maruti Suzuki XL6 Facelift)
நடப்பு ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் எக்ஸ்எல்6 காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்த புதிய மாடலின் வெளிப்புறத்தில் ஒரு சில டிசைன் அப்டேட்கள் மட்டுமே செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் உட்புறத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இதன்படி பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இன்ஜினில் எந்த மாற்றங்களும் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இதன்படி இந்த புதிய மாடலில், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டிருக்கும்.

டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய அப்டேட்கள் காரணமாக மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 காரின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

மாருதி சுஸுகி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் (Maruti Suzuki Ertiga Facelift)
மாருதி சுஸுகி நிறுவனத்தின் எக்ஸ்எல்6 எம்பிவி காரை போலவே, எர்டிகா எம்பிவி காரும் ஃபேஸ்லிஃப்ட் மாடலை பெறவுள்ளது. இதுவும் நடப்பு ஏப்ரல் மாதத்திலேயே விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசைன் அப்டேட்கள் தவிர, இந்த புதிய மாடலில் கூடுதலாக ஒரு சில வசதிகள் வழங்கப்படும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

இருப்பினும் மாருதி சுஸுகி எர்டிகா காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்துடன் கூடிய 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின், எந்தவித மாற்றங்களும் செய்யப்படாமல் தொடர்ந்து வழங்கப்படலாம். அத்துடன் சிஎன்ஜி தேர்வும் (மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் இல்லாமல்) தொடர்ந்து வழங்கப்படும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் லாங்-ரேஞ்ச் மாடல் (Tata Nexon EV Long Range)
இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்றுள்ள நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஏப்ரல் 6ம் தேதி இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

இருப்பினும் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வழங்கப்படுவதை காட்டிலும், பெரிய பேட்டரி தொகுப்பை இந்த புதிய மாடல் பெறவுள்ளது. இது அதிக ரேஞ்ச் வழங்க கூடியதாக இருக்கும். ஏற்கனவே விற்பனையில் உள்ள நெக்ஸான் எலெக்ட்ரிக் காருடன், இந்த லாங்-ரேஞ்ச் மாடலும் இணைந்து விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய லாங்-ரேஞ்ச் மாடலில், கூடுதலாக ஒரு சில வசதிகள் வழங்கப்படும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அத்துடன் டிசைனும் மேம்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை மேலும் அதிகரிப்பதற்கு இந்த புதிய மாடல் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் லாங் ரேஞ்ச் மாடல் (Tata Tigor EV Long Range)
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை போலவே, டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரும் அப்டேட் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை போலவே, இந்த எலெக்ட்ரிக் செடான் காரிலும், தற்போது இருப்பதை காட்டிலும் பெரிய பேட்டரி தொகுப்பு வழங்கப்படவுள்ளது. எனவே ரேஞ்ச் அதிகமாக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








