காஸ்ட்லி கார்களை தான் இந்திய மக்கள் வாங்குகிறார்களாம்... லோ பட்ஜெட் கார்களுக்கு மவுசே இல்லாம போச்சு...

இந்தியாவில் ரூ10 லட்சத்திற்கு அதிகமான கார்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணுங்கள்

காஸ்ட்லி கார்களை தான் இந்திய மக்கள் வாங்குகிறார்களாம் . . . லோ பட்ஜெட் கார்களுக்கு மவுசே இல்லாம போச்சு . . .

கார்கள் வாங்க வேண்டும் என்றால் பெரும்பாலான இந்தியர்களின் மன நிலை குறைந்த விலையில் தரமான கார் எது என்று தான் யோசிப்பார்கள் ஒவ்வொரு காரையும் ஒப்பிட்டு அதில் எதன் விலை குறைவாக இருக்கும் என்பதைப் பார்த்து ஆனால் சமீபத்தில் இந்தியர்களின் கார் வாங்கும் மன நிலை தற்போது மாறியுள்ளது என்பது சமீபத்திய கார் விற்பனை ரிப்போர்ட்கள் தெரிவித்துள்ளது.

காஸ்ட்லி கார்களை தான் இந்திய மக்கள் வாங்குகிறார்களாம் . . . லோ பட்ஜெட் கார்களுக்கு மவுசே இல்லாம போச்சு . . .

கடந்த 7 ஆண்டுகளில் ரூ10 லட்சத்திற்கு அதிகமான கார்களின் விற்பனை இந்தாண்டு 38 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த விற்பனை வளர்ச்சியால் பிரிமியர் கார்களுக்கான மார்கெட் பங்கில் 500 பேஸ் பாயிண்ட் ஏறியுள்ளது. இதனால் ஒட்டு மொத்த கார் மார்கெட்டில் 30 சதவீத இடத்தை பிரிமியம் கார்கள் பெற்றுள்ளது. இந்த ஆய்வை சமீபத்தில் சிரிசில் என்ற நிறுவனம் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

காஸ்ட்லி கார்களை தான் இந்திய மக்கள் வாங்குகிறார்களாம் . . . லோ பட்ஜெட் கார்களுக்கு மவுசே இல்லாம போச்சு . . .

இந்தியாவில் சமீபகாலத்தில் ரூ10 லட்சத்திற்கும் அதிகமான விலையில் உள்ள கார் விற்பனையில் 68 சதவீதத்தை ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி எர்டிகா, சியாஸ், மஹிந்திரா பொலிரோ, ஸ்கார்ப்பியோ, ஹோண்டா சிட்டி, ஃபோர்டு எக்கோ ஸ்போர்ட், டொயோட்டா இனோவா ஆகிய கார்கள் விற்பனையாகி வருகிறது.

காஸ்ட்லி கார்களை தான் இந்திய மக்கள் வாங்குகிறார்களாம் . . . லோ பட்ஜெட் கார்களுக்கு மவுசே இல்லாம போச்சு . . .

2019ம் நிதியாண்டில் அதிகவிலை கொண்ட வாகனங்களில் விற்பனை சரிவைச் சந்தித்தது. ஆனால் அடுத்தடுத்து அறிமுகமான கார்கள் மக்களை ஈர்த்து இந்த ரக கார்களின் விற்பனையை அதிகரித்து. இதை உதாரணமாக கியா செல்டாஸ், மாருதி XL6, எம்ஜி ஹெக்டர், மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் ஹூண்டாய் அல்காசர் ஆகிய கார்களின் விற்பனை இந்த கேட்டகிரியில் புதிதாக வந்து நல்ல விற்பனையை பெற்று வரும் கார்கள் ஆகும். இதே போல இருசக்கர வாகனங்களிலும் ரூ70 ஆயிரத்திற்கு அதிகமான விலையில் உள்ள பைக்குளின் விற்பனை தான் அதிகரித்துள்ளது.

காஸ்ட்லி கார்களை தான் இந்திய மக்கள் வாங்குகிறார்களாம் . . . லோ பட்ஜெட் கார்களுக்கு மவுசே இல்லாம போச்சு . . .

குறைந்த விலை கார்களில் அதிகம் விற்பனையாகும் மாருதி ஆல்டோ, ஸ்விஃப்ட், பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா, செலிரியோ, டிசையர், ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ10, ஐ20 ஆகிய கார்களின் விற்பனை கடும் சரிவைக் கடந்த 3 ஆண்டுகளில் சந்தித்துள்ளது. 2016ம் ஆண்டு இந்த விலையில் மொத்தம் மார்கெட்டில் 56 வகை வாகனங்கள் விற்பனையாகி வந்தன. தற்பேஆது வெறும் 39 வகை வாகனங்கள் மட்டுமே மார்கெட்டில் உள்ளது. 2020ம் ஆண்டிற்குப் பிறகு மார்கெட் சந்தையில் இந்த கார் வெறும் 15 சதவீத பங்கை மட்டுமே வைத்திருக்கிறது.

காஸ்ட்லி கார்களை தான் இந்திய மக்கள் வாங்குகிறார்களாம் . . . லோ பட்ஜெட் கார்களுக்கு மவுசே இல்லாம போச்சு . . .

மேலும் இந்த ஆய்வில் இந்தியாவில் குறைந்த விலை கார்களை வாங்கும் பலர் புதிதாக கார் வாங்குபவர்கள் அல்லது ஏற்கனவே விற்பனையான காரை வாங்கி பயன்படுத்தவிட்டு பின்னர் புதிய கார் வாங்குபவர்களாக இருக்கின்றனர். இதில் பெரும்பாலும் கார் வாங்குபவர்கள் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களில் ஊழியர்களாக இருப்பதாக கூறுப்படுகிறது.

காஸ்ட்லி கார்களை தான் இந்திய மக்கள் வாங்குகிறார்களாம் . . . லோ பட்ஜெட் கார்களுக்கு மவுசே இல்லாம போச்சு . . .

மக்கள் குறைந்த விலை கார்களை விட்டு அதிக விலை கார்களுக்கு செல்ல குறை விலை கார்கள் சமீபத்தில் விலையேறியது ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது.மத்திய அரசு ஏபிஎஸ், முன்பக்க ஏர் பேக், ஸ்பீடு வார்னிங் அலாரம், சீட்பெல்ட் எச்சரிக்கை, பின்பக்க பார்க்கிங் சென்சார், க்ரேஷ் டெஸ்ட் விதிமுறைகள் எனப் பல விஷயங்களைக் கட்டாயமாக்கிய நிலையில் இதனால் கார்களின் விலையும் அதிகரித்தது. இதற்கிடையில் பிஎஸ் 6 வருகையும் விலையுயர்வுக்குக் காரணமாக அமைந்தது.

காஸ்ட்லி கார்களை தான் இந்திய மக்கள் வாங்குகிறார்களாம் . . . லோ பட்ஜெட் கார்களுக்கு மவுசே இல்லாம போச்சு . . .

கன தயாரிப்பு நிறுவனங்களும் அதிக விலை கார்களை தயாரிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 2015ம் ஆண்டு 71 மாடல் அதிக விலை கொண்ட கார்கள் இந்தியாவில் விற்பனையாகிவந்த நிலையில் தற்போது அது 93 மாடலாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காஸ்ட்லி கார்களை தான் இந்திய மக்கள் வாங்குகிறார்களாம் . . . லோ பட்ஜெட் கார்களுக்கு மவுசே இல்லாம போச்சு . . .

இந்த ஆய்வை நடத்தியவர்கள் அதிக விலை கார்கள் விற்பனை அதிகரித்ததற்கு முக்கியமான காரணமாக இருப்பது வாடிக்கையாளர்கள் அந்த ரக கார்களை வாங்கும் அளவிற்குப் பணம் சம்பாதிக்கத் துவங்கிவிட்டனர். மேலும் புதிய கார்களின் வருகை அவர்களை வாங்கத் தூண்டும் அளவிற்குச் சிறப்பாக இருந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 17, 2022, 16:55 [IST]
English summary
Cars price above 10 lakhs sells faster than low priced cars in india find the full report
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+