காரில் குழந்தை-இருக்கை ஏன் மிக முக்கியமானது? கை குழந்தை வைத்திருப்போர் தெரிஞ்சிக்க வேண்டியவை!!

கொரோனாவினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்குகள் சற்று தளர்த்தப்பட்டதை தொடர்ந்து குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு பயணிப்பது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இருப்பினும் மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்த பயம் தொற்றி கொண்டுதான் இருக்கிறது. இதனாலேயே, இப்போதும் பலர் கூட்டம் மிகுந்த ரயில்கள், பேருந்துகளில் செல்ல தயக்கம் காட்ட தான் செய்கின்றனர்.

காரில் குழந்தை-இருக்கை ஏன் மிக முக்கியமானது? கை குழந்தை வைத்திருப்போர் தெரிஞ்சிக்க வேண்டியவை!!

அதிலிலும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு தனி பயன்பாட்டு வாகனங்களையே பலர் விரும்புகின்றனர். ஏனெனில் இன்னும் சிறு குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் கார்களில் பயணிப்பது முன்னர் காலங்களில் ஆபத்தாக கூட பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது குழந்தைகளுக்கு என்றே பிரத்யேகமான இருக்கைகளும், கொக்கிகளும் வழங்கப்படுகின்றன. இவை ஏன் ஒவ்வொரு காரிலும் முக்கியமானவை என்பதை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

காரில் குழந்தை-இருக்கை ஏன் மிக முக்கியமானது? கை குழந்தை வைத்திருப்போர் தெரிஞ்சிக்க வேண்டியவை!!

குழந்தை இருக்கை

குழந்தை இருக்கை என்பது கை குழந்தைகளுக்கு என்றே பிரத்யேகமாக, கூடுதலாக வழங்கப்படும் இருக்கை ஆகும். கூடுதல் குஷின்களுடன் வழங்கப்படும் இந்த பிரத்யேக இருக்கை அமைப்பானது முன் இருக்கையின் பின்னால் பின் இருக்கைக்கு நேரெதிராக வழங்கப்படுகிறது. இவை மலிவான மற்றும் நீடித்த பொருட்களால் ஆனவை.

காரில் குழந்தை-இருக்கை ஏன் மிக முக்கியமானது? கை குழந்தை வைத்திருப்போர் தெரிஞ்சிக்க வேண்டியவை!!

விபத்து ஏற்பட்டாலும், சாலை பயணம் முழுவதும் உங்கள் குழந்தை பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதை இது உறுதி செய்கிறது. இந்த இருக்கைகள் சீட்பெல்ட்களை பயன்படுத்தி இருக்கையில் கட்டப்படுகின்றன. குழந்தை இருக்கைகள் விற்பனைக்கு-பிறகான பாகமாக கிடைகிறது. வேண்டுமென்போர் தங்களது காருக்கு ஏற்ப வாங்கி பொருத்தி கொள்ளலாம். தயாரிப்பு நிறுவனங்கள் குழந்தை இருக்கைக்கையை பொருத்தி கொள்வதற்கான கொக்கியை வழங்குகிறது.

காரில் குழந்தை-இருக்கை ஏன் மிக முக்கியமானது? கை குழந்தை வைத்திருப்போர் தெரிஞ்சிக்க வேண்டியவை!!

இவை ஏன் முக்கியமானவை

கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளின்படி, குழந்தை இறப்பு & காயங்களின் பட்டியலில் மோட்டார் வாகன விபத்துகள் முதலிடத்தை பிடித்துள்ளன. ஆனால் முறையான கட்டுப்பாடுகள் மற்றும் குழந்தை இருக்கைகள், குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்படும் அபாயத்தை சுமார் 71 சதவீதமும், இறப்பு நிகழ்வுகளை 28 சதவீதமும் குறைக்கின்றன.

காரில் குழந்தை-இருக்கை ஏன் மிக முக்கியமானது? கை குழந்தை வைத்திருப்போர் தெரிஞ்சிக்க வேண்டியவை!!

தற்போதைய காலக்கட்டத்தில் கார் விபத்துகள் மிகவும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. கார் விபத்துகளுக்கு கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மோசமான சாலை நிலைமைகள் முக்கிய காரணிகளாக உள்ளன. கார் இருக்கைகளின் முக்கியத்துவம் என்ன என்பதை புரிந்துக் கொள்ள, கார் விபத்துக்குள்ளானால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காரில் குழந்தை-இருக்கை ஏன் மிக முக்கியமானது? கை குழந்தை வைத்திருப்போர் தெரிஞ்சிக்க வேண்டியவை!!

விபத்து நிகழும்போது, சீட் பெல்ட் அல்லது குழந்தை இருக்கை இல்லாமல் காருக்குள் இருக்கும் எந்தவொரு பயணியும் வாகனத்தின் அதே வேகத்தில் கேபினுக்குள் தூக்கி எறியப்படுவார்கள். இருக்கையில் சவுகரியமாக அமர்ந்திருக்கும் பயணிகளுக்கே இந்த நிலைமை என்றால், மடியில் வைத்திருக்கும் குழந்தையை பற்றி யோசித்தாலே உடல் சிலிர்க்கிறது. அதுவே குழந்தை இருக்கைகள் சரியாக நிறுவப்பட்டு பயன்படுத்தப்படும்போது, அவை குழந்தைகளின் உயிரை காக்கும்.

காரில் குழந்தை-இருக்கை ஏன் மிக முக்கியமானது? கை குழந்தை வைத்திருப்போர் தெரிஞ்சிக்க வேண்டியவை!!

அதுமட்டுமின்றி, குழந்தை இருக்கைகள் பொருத்தப்படும் முன் மற்றும் பின் இருக்கைகளுக்கு மத்திய பகுதி எந்தவொரு காரிலும் விபத்தின்போது குறைவாகவே பாதிப்பை சந்திப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. புள்ளிவிவரப்படி, இத்தகைய இருக்கைகள் விபத்துகளின்போது சுமார் 54 சதவீதம் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான அபாயங்களை குறைப்பதாக நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

காரில் குழந்தை-இருக்கை ஏன் மிக முக்கியமானது? கை குழந்தை வைத்திருப்போர் தெரிஞ்சிக்க வேண்டியவை!!

ஆகவே பயன்படுத்தப்படும் கார் மற்றும் குழந்தையின் வயதை பொறுத்து சரியான குழந்தைகளுக்கான இருக்கையை வாங்கி பொருத்துவதன் மூலம் குழந்தைகளுடன் பயமின்றி பயணத்தை துவங்கலாம். மேலும், உலகளாவிய என்சிஏபி (NCAP) சோதனைகளில் கூட குழந்தைகள் பாதுகாப்பிற்கென்று தனியாக மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன. ஆதலால் ஆரம்பத்திலேயே குழந்தை பாதுகாப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற கார்களை பார்த்து தேர்வு செய்வது நல்லது.

காரில் குழந்தை-இருக்கை ஏன் மிக முக்கியமானது? கை குழந்தை வைத்திருப்போர் தெரிஞ்சிக்க வேண்டியவை!!

இவை எல்லாவற்றையும் விட காரை வாங்கிய பிறகு விற்பனைக்கு-பிந்தைய சந்தையில் இருந்து வாங்கப்படும் குழந்தை இருக்கைகளின் தரத்தினை பரிசோதித்து வாங்குவது முக்கியமாகும். பொதுவாகவே குழந்தை இருக்கைகள் எளிதில் சேதமடையாத உலோகத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன. சில தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது கார்களுக்கு கூடுதல் ஆக்ஸஸரீயாகவும் இத்தகைய இருக்கைகளை வழங்குகின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, February 28, 2022, 21:31 [IST]
English summary
Importance of Child Seat in a Four Wheeler.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+