ஹார்ட் அட்டாக் வந்தாலும் காப்பாற்றும்... விரைவில் வெளியாகவுள்ள அதிசய எலெக்ட்ரிக் கார்...
சீனாவில் ரெனால்ட் குழுமத்தின் கீழ் இயங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று டிரைவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தாலும் காப்பாற்றும் கார் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் பியான்கா, இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தை தற்போது ரெனால்ட் நிறுவனம் வாங்கி அந்நிறுவனம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தயாரித்த தனது முதல் காரை வரும் 2023ம் ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த கார் இந்த உலகின் மற்ற எந்த காரிலும் இல்லாத பல வசதிகளுடன் வெளியாகவிருக்கிறது.

இந்த காருக்கு அந்நிறுவனம் ஜிடி ஓப்பரஸ் 1 என பெயரிட்டுள்ளனர். இந்த கார் ஏற்கனவே மார்கெட்டில் உள்ள பிஎம்டபிள்யூ ஏஜிஸ் 7 சிரீஸ், போர்ஷே ஏஜிஸ் டேக்கேன் சிரீன் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது.

இது முழுமையான எலெக்ட்ரிக் காராகும் இந்த காரில் டிரைவரின் உடல் நிலையை மானிட்டர் செய்து நெஞ்சு வலி போன்ற ஏதேனும் விபரீதங்கள் நேர்ந்தால் உடனடியாக அவரை காப்பாற்ற வழி வகுக்கும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக இந்த காரில் சென்சார்கள் மற்றும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் டிரைவரின் நடவடிக்கைகள் எல்லாம் மானிட்டர் செய்யப்படும். அதில் ஏதாவது வித்தியாசமாக நடந்தால், அதை முதலில் காரில் உள்ள செயற்கை நுண்ணறிவு கண்டறிந்து டிரைவருக்கு ஒரு குரலை ஒலிக்க வைக்கும்.

அதற்கு டிரைவர் பதிலளிக்கிறாரா என செக் செய்யும், அதற்கு டிரைவர் பதிலளிக்கத் தவறும் பட்சத்தில் ஏதோ விபரீதமாக நடக்கப்போவதை உணர்ந்து காரை முழுவதுமாக அந்த செயற்கை நுண்ணறிவு தனது கட்டுப்பாட்டில் எடுத்து காரை ஓரமாகப் பத்திரமாக பார்க் செய்யும். பின்னர் காரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மூலம் விர்ச்சூவலாக டாக்டரை தொடர்பு கொள்ளும்,

இதன் மூலம் டாக்டர் பாதிக்கப்பட்டவருக்கு எப்படிப்பட்ட பாதிப்பு உள்ளது. இவருக்கு முதலுதவி என்ன செய்ய வேண்டும். உடனடியாக அருகில் உதவிக்கு ஆட்களை அழைப்பது, கார் தற்போது எந்த பகுதியில் இருக்கிறது என்பதை அறிந்து அருகில் உள்ள மருத்துவமனையை உஷார் படுத்துவது என எல்லா வேலைகளையும் செய்ய முடியும்.

பியான்கா நிறுவனத்தைப் பொருத்தவரை அதற்கு ரெனால்ட் நிறுவனத்தின் தெற்காசியத் தலைவர் தான் அந்த நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறது. தற்போது அந்த பொறுப்பில் சோ வெய்மிங் என்பவர் இருக்கிறார். இவர் இவர் 15 ஆண்டுகளாக ஃபோக்ஸ்வேகன் சீனா நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு கடந்தாண்டு ரெனால்ட் நிறுவனத்திற்கு வந்துள்ளார்.

பியான்கா நிறுவனம் சீனாவில் சூப்பர் பிரிமியர் கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. 3 முதல் 5 மாடல் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் இந்நிறுவனம் ஆண்டிற்கு 1 லட்சம் கார்களை தயாரிக்கும் அளவிற்குக் கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

பிரிமியம் கார்களுக்கு சீனா மிகப்பெரிய மார்கெட்டாக இருக்கிறது. அதைக் குறி வைத்துத் தான். இந்நிறுவனம் பிரிமியம் கார்களை தயாரித்து வருகிறது. இந்த பியான்கா நிறுவனம் வெளியிடும் ஜிடி ஓப்பஸ் 1 காரை பொருத்தவரை 8.98 லட்சம் சீன யென் அதாவது ரூ1.2 கோடி ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் மாடல் 1.8 மில்லியன் சீன யென் அதாவது இந்திய மதிப்பில் ரூ2.04 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications