ரெண்டு ஃபேமஸான காரை காப்பி செய்து உருவாக்கப்பட்ட கார்... டூப்ளிகேட் செய்வதில் சீனர்களுக்கு நிகர் சீனர்களே!

ரெண்டு ஃபேமஸான கார் மாடலை டூப்ளிகேட் செய்து சீன நிறுவனம் ஒன்று புதிய காரை உருவாக்கி இருக்கின்றது. இந்த டூப்ளிகேட் நிகழ்வு பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரெண்டு ஃபேமஸான காரை காப்பி செய்து உருவாக்கப்பட்ட கார்... டூப்ளிகேட் செய்வதில் சீனர்களுக்கு நிகர் சீனர்களே!

புதுமை மற்றும் டூப்ளிகேட் என இரண்டிற்கும் பெயர்போனவர்கள் சீனர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்களை சீனர்கள் கடந்த காலங்களில் செய்திருக்கின்றனர். இந்த நிலையில், தங்களின் கைதேர்ந்த டூப்ளிகேட் செய்யும் திறனை வெளிக்காட்டும் வகையில் சீன வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று புதிய சம்பவம் ஒன்றை நிகழ்த்தி இருக்கின்றது.

ரெண்டு ஃபேமஸான காரை காப்பி செய்து உருவாக்கப்பட்ட கார்... டூப்ளிகேட் செய்வதில் சீனர்களுக்கு நிகர் சீனர்களே!

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஜெடூர் (Jetour). இந்நிறுவனமே இரு வெவ்வேறு நிறுவனங்களின் இரு கார் மாடல்களை டூப்ளிகேட் செய்து புதிய கார் கலவையை உருவாக்கி இருக்கின்றது. டி-எக்ஸ் எஸ்யூவி ரக காரே நிறுவனம் இரு பிரபல கார் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டிருக்கும் வாகனமாகும்.

ரெண்டு ஃபேமஸான காரை காப்பி செய்து உருவாக்கப்பட்ட கார்... டூப்ளிகேட் செய்வதில் சீனர்களுக்கு நிகர் சீனர்களே!

இது ஓர் எஸ்யூவி ரக வாகனமாகும். இதனை ஜெடூர் நிறுவனம் ஃபோர்டு நிறுவனத்தின் ப்ரோன்கோ மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஃபெண்டர் ஆகிய இரு மாடல்களை தழுவியே இருக்கின்றது. ஆகையால், ஜெடூர் டி-எக்ஸ் எஸ்யூவி காரின் உருவ அமைப்பானது ப்ரோன்கோ மற்றும் டிஃபெண்டர் கார்களின் கலவையாக காட்சியளிக்கின்றது.

ரெண்டு ஃபேமஸான காரை காப்பி செய்து உருவாக்கப்பட்ட கார்... டூப்ளிகேட் செய்வதில் சீனர்களுக்கு நிகர் சீனர்களே!

இவ்விரு கார்களும் வேர்ல்டு ஃபேமஸான கார்களாக இருக்கின்றன. இதனையே சீன நிறுவனம் ஜெடூர் தற்போது டூப்ளிகேட் செய்திருக்கின்றது. சீன நிறுவனத்தின் இந்த செயல் ப்ரோன்கோ மற்றும் டிஃபெண்டர் கார் பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

ரெண்டு ஃபேமஸான காரை காப்பி செய்து உருவாக்கப்பட்ட கார்... டூப்ளிகேட் செய்வதில் சீனர்களுக்கு நிகர் சீனர்களே!

டி-எக்ஸ் எஸ்யூவி கார் ஓர் கான்செப்ட் மாடலாகும். முன் மாதிரி மாடலாகவே இது தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றது. மிக விரைவில் விற்பனைச் செய்யவதற்காக இக்காரை ஜெடூர் நிறுவனம் உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரெண்டு ஃபேமஸான காரை காப்பி செய்து உருவாக்கப்பட்ட கார்... டூப்ளிகேட் செய்வதில் சீனர்களுக்கு நிகர் சீனர்களே!

ஆகையால், ப்ரோன்கோ மற்றும் டிஃபெண்டர் கார்களின் கலவையாக உருவாகி இருக்கும் டி-எக்ஸ் மிக விரைவில் சீனா உள்ளிட்ட சில முக்கிய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ப்ரோன்கோ மற்றும் டிஃபெண்டர் ஆகிய கார்களை பிரதிபலிக்கும் தோற்றம் மற்றும் சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருக்கின்றது.

ரெண்டு ஃபேமஸான காரை காப்பி செய்து உருவாக்கப்பட்ட கார்... டூப்ளிகேட் செய்வதில் சீனர்களுக்கு நிகர் சீனர்களே!

பெட்டி போன்ற உருவ அமைப்பு, முன் பக்க க்ரில், மின் விளக்குகள் உள்ளிட்டவையே இரு கார்களையும் பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுமட்டுமின்றி இன்னும் பல அம்சங்கள் டி-எக்ஸ் ஓர் காப்பியடித்து உருவாக்கப்பட்ட வாகனம்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ரெண்டு ஃபேமஸான காரை காப்பி செய்து உருவாக்கப்பட்ட கார்... டூப்ளிகேட் செய்வதில் சீனர்களுக்கு நிகர் சீனர்களே!

அதேநேரத்தில், டி-எக்ஸ் எஸ்யூவி கான்செப்ட் காரை மிகவும் முரட்டுத் தனமானதாக காட்டும் வகையிலும் சில பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கருப்பு நிற பிள்ளர்கள், சங்கியான பிளாக் பம்பர்கள் மற்றும் அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்ட டயர்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ரெண்டு ஃபேமஸான காரை காப்பி செய்து உருவாக்கப்பட்ட கார்... டூப்ளிகேட் செய்வதில் சீனர்களுக்கு நிகர் சீனர்களே!

இதுமாதிரியான அம்சங்களை வைத்து பார்க்கையில் டி-எக்ஸ் ஆஃப்-ரோடு வாகனமாக விற்பனைக்கு வர இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் டயர் மற்றும் காரின் பிற அம்சங்கள் உள்ளன. தொடர்ந்து, இக்காரில் அடாப்டீவ் சஸ்பென்ஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

ரெண்டு ஃபேமஸான காரை காப்பி செய்து உருவாக்கப்பட்ட கார்... டூப்ளிகேட் செய்வதில் சீனர்களுக்கு நிகர் சீனர்களே!

Image Courtesy: Xincheping

மேலும், ஜெடூர் நிறுழனம் அதன் பிரபல குன்லுன் பிளாட்பாரத்தை பயன்படுத்தி டி-எக்ஸ் காரை உருவாக்கி இருப்பதாக தெரிவித்திருக்கின்றது. ஹைபிரிட் வசதிக் கொண்ட கார்களை இந்த பிளாட்பாரத்தில் வைத்தே நிறுவனம் உருவாக்கி வருகின்றது. ஆகையால், புதிய ஜெடூர் டி-எக்ஸ் காரில் 1,000 கிமீ ரேஞ்ஜ் வழங்கக் கூடிய பெட்ரோல் மற்றும் மின் மோட்டார்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரெண்டு ஃபேமஸான காரை காப்பி செய்து உருவாக்கப்பட்ட கார்... டூப்ளிகேட் செய்வதில் சீனர்களுக்கு நிகர் சீனர்களே!

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை ஜெடூர் நிறுவனம் அறிவிக்கவில்லை. இந்த கார் 2023ம் ஆண்டில் விற்பனைக்குக் கிடைக்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெடூர் நிறுவனம் மிக விரைவில் பிக்-அப் மற்றும் எம்பிவி ஆகிய இரு ரக கார்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
English summary
Chinese latest copycat ford bronco and land rover defender jetour t x concept revealed
Story first published: Monday, January 17, 2022, 11:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X