செம கெத்தா காட்சியளிக்குது! ஷோரூம்களை வந்தடைய தொடங்கியது சிட்ரோன் சி3... டாடா பன்ச் காருக்கு கடும் நெருக்கடி!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் சிட்ரோன் சி3 (Citroen C3) கார் மாடல் ஷோரூம்களை வந்தடையத் தொடங்கியிருக்கின்றது. விரைவில் இக்கார் விற்பனைக்கு வர இருக்கும் நிலையில் ஷோரூம்களில் அது கம்பீரமாகக் காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

செம கெத்தா காட்சியளிக்குது! ஷோரூம்களை வந்தடைய தொடங்கியது சிட்ரோன் சி3... டாடா பன்ச் காருக்கு கடும் நெருக்கடி!

சிட்ரோன் நிறுவனம் வெகுவிரைவில் இந்திய சந்தையில் புதுமுக கார் மாடல் சி3 (Citroen C3)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இக்காருக்கான ப்ரீ புக்கிங் பணிகள் ஏற்கனவே நாட்டில் தொடங்கப்பட்டுவிட்டன. ரூ. 25 ஆயிரம் முன்தொகையில் நிறுவனம் சி3 காருக்கான ப்ரீ-புக்கிங்கை ஏற்று வருகின்றது. ஆன்லைன் மற்றும் விற்பனையாளர்கள் ஷோரூம் வாயிலாக இப்பணிகள் மும்மரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

செம கெத்தா காட்சியளிக்குது! ஷோரூம்களை வந்தடைய தொடங்கியது சிட்ரோன் சி3... டாடா பன்ச் காருக்கு கடும் நெருக்கடி!

இந்த மாதிரியான சூழ்நிலையில் சிட்ரோன் சி3 கார் ஷோரூம்களை வந்தடையத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஷோரூமில் சிட்ரோன் சி3 கார் கம்பீரமாக நின்றுக் கொண்டிருக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகத் தொடங்கியுள்ளன.

செம கெத்தா காட்சியளிக்குது! ஷோரூம்களை வந்தடைய தொடங்கியது சிட்ரோன் சி3... டாடா பன்ச் காருக்கு கடும் நெருக்கடி!

சிட்ரோன் சி3 கார் இந்தியாவில் வரும் 20ம் தேதி அன்றே அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக இருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே இக்கார் ஷோரூம்களில் காட்சியளிக்கத் தொடங்கியிருக்கின்றது. இக்காரின் வருகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தவர்கள், தற்போது அதன் வருகையை அறிந்து ஷோரூம்களுக்கு சென்று சி3-ஐ ஆய்வு செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

செம கெத்தா காட்சியளிக்குது! ஷோரூம்களை வந்தடைய தொடங்கியது சிட்ரோன் சி3... டாடா பன்ச் காருக்கு கடும் நெருக்கடி!

சிட்ரோன் சி3 லைவ் (Live) மற்றும் ஃபீல் (Feel) என இரு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். இத்துடன், ட்யூவல் டோன் மற்றும் சிங்கிள் டோன் என இரு விதமான நிற தேர்வுகள், வழக்கமான பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகள், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது.

செம கெத்தா காட்சியளிக்குது! ஷோரூம்களை வந்தடைய தொடங்கியது சிட்ரோன் சி3... டாடா பன்ச் காருக்கு கடும் நெருக்கடி!

1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பையர்டு பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே சிட்ரோன் சி3 காரில் வழங்கப்பட இருக்கின்றது. இதில், டர்போ பெட்ரோல் 109 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. அதேவேலையில், வழக்கமான பெட்ரோல் மோட்டார் 81 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

செம கெத்தா காட்சியளிக்குது! ஷோரூம்களை வந்தடைய தொடங்கியது சிட்ரோன் சி3... டாடா பன்ச் காருக்கு கடும் நெருக்கடி!

Source: Team BHP

இதில், டர்போ பெட்ரோல் மோட்டார் ஒரு லிட்டருக்கு 19.4 கி.மீட்டர்., மைலேஜையும், வழக்கமான பெட்ரோல் மோட்டார் ஒரு லிட்டருக்கு 19.8 கிமீ மைலேஜையும் வழங்கும். இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் சிட்ரோன் சி3 கார் இந்திய சந்தையை விரைவில் அலங்கரிக்க இருக்கின்றது.

செம கெத்தா காட்சியளிக்குது! ஷோரூம்களை வந்தடைய தொடங்கியது சிட்ரோன் சி3... டாடா பன்ச் காருக்கு கடும் நெருக்கடி!

இக்காரின் வருகை இந்தியாவில் டாடா பன்ச், மாருதி சுஸுகி இக்னிஸ், ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர கார் என்பதால் இக்காரில் பிரீமியம் அம்சங்கள் எக்கசக்கமாக காட்சியளிக்க இருக்கின்றன.

செம கெத்தா காட்சியளிக்குது! ஷோரூம்களை வந்தடைய தொடங்கியது சிட்ரோன் சி3... டாடா பன்ச் காருக்கு கடும் நெருக்கடி!

அந்தவகையில், 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன் காரின் பிரீமியமான தோற்றத்திற்காக ஸ்பிளிட் டைப் ஹெட்லேம்ப், ட்யூவல் ஸ்லேட் ரக குரோம் கிரில், சதுர வடிவ டெயில் லைட், டூயல் டோன் பம்பர் மற்றும் சில்வர் நிற ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

செம கெத்தா காட்சியளிக்குது! ஷோரூம்களை வந்தடைய தொடங்கியது சிட்ரோன் சி3... டாடா பன்ச் காருக்கு கடும் நெருக்கடி!

சிட்ரோன் நிறுவனம் இப்போதைய நிலவரப்படி ஒரே ஒரு கார் மாடலை மட்டுமே இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. சி5 ஏர்கிராஸ் எஸ்யூவி கார் மாடலையே அது விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரைத் தொடர்ந்து இந்தியாவிற்கான இரண்டாவது தயாரிப்பாகவே சிட்ரோன் சி3 விரைவில் அறிமுகமாக உள்ளது.

செம கெத்தா காட்சியளிக்குது! ஷோரூம்களை வந்தடைய தொடங்கியது சிட்ரோன் சி3... டாடா பன்ச் காருக்கு கடும் நெருக்கடி!

இக்காரின் விலை உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதுகுறித்த தகவல்கள் வரும் 20ம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளன. முன்னதாக இணையத்தின் வாயிலாக வெளியாகிய தகவல்கள் சிட்ரோன் சி3 கார் ரூ. 6 லட்சம் அல்லது 6.25 லட்சம் ரூபாய் என்கிற குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, July 15, 2022, 10:17 [IST]
English summary
Citroen c3 arrives at dealerships here is pics
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+