டாடாவுக்கு நேரம் சரியில்ல... தாக்குதல் தொடுக்க ரெடியாகும் பிரான்ஸ் நிறுவனம்... சுத்தி வளச்சு அணை கட்றாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று சிட்ரோன் சி3 (Citroen C3). 5.88 லட்ச ரூபாய் முதல் 8.15 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் சிட்ரோன் சி3 கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

சிட்ரோன் சி3 காரில், மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.2 லிட்டர், 3 சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகும். இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 82 பிஹெச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

டாடாவுக்கு நேரம் சரியில்ல... தாக்குதல் தொடுக்க ரெடியாகும் பிரான்ஸ் நிறுவனம்... சுத்தி வளச்சு அணை கட்றாங்க!

அதே நேரத்தில் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 110 பிஹெச்பி பவர் மற்றும் 190 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியதாக உள்ளது. இந்த சூழலில், சி3 காரின் புதிய சிஎன்ஜி (CNG) வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய சிட்ரோன் நிறுவனம் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. இந்திய சந்தையில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளதையடுத்து, பிரான்ஸை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

தற்போதைய நிலையில் இந்த சிஎன்ஜி வெர்ஷன் சோதனை கட்டத்தில் உள்ளது. வரும் 2023ம் ஆண்டின் முதல் பாதியில், அதாவது முதல் 6 மாதங்களுக்கு உள்ளாக சிட்ரோன் சி3 காரின் சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வெர்ஷனில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமான பெட்ரோல் இன்ஜினுடன் ஒப்பிடும்போது, சிஎன்ஜி வெர்ஷனின் பவர் மற்றும் டார்க் அவுட்புட் சற்று குறைவாக இருக்கலாம். டாடா டியாகோ சிஎன்ஜி (Tata Tiago CNG) காருக்கு, புதிய சிட்ரோன் சி3 சிஎன்ஜி கார் விற்பனையில் கடுமையான சவாலை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் டாடா டியாகோ சிஎன்ஜி கார், 6.09 லட்ச ரூபாய் முதல் 7.64 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

சி3 காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இன்னும் பல்வேறு அப்டேட்களை செய்வதற்கு சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு பகுதியாக, சி3 காரில், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனை அறிமுகம் செய்ய சிட்ரோன் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிட்ரோன் சி3 கார், தற்போதைய நிலையில் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

2023ம் ஆண்டின் இரண்டாவது பாதியில், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் கூடிய சிட்ரோன் சி3 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எய்சின் (Aisin) நிறுவனத்திடம் இருந்து, இந்த 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பெறப்படலாம். சிட்ரோன் சி3 காரின் ஆட்டோமேட்டிக் மாடலின் வருகை, டாடா பன்ச் (Tata Punch) காருக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும். சிஎன்ஜி மற்றும் ஆட்டோமேட்டிக் வெர்ஷன்கள் மட்டுமல்லாது, சி3 காரின் எலெக்ட்ரிக் (Electric) வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளும் சிட்ரோன் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

டாடா டியாகோ எலெக்ட்ரிக் (Tata Tiago EV) காருக்கு போட்டியாக, சிட்ரோன் சி3 எலெக்ட்ரிக் கார், வரும் 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இவை எல்லாம் தவிர, சி3 காரின் அடிப்படையில், 7 சீட்டர் எஸ்யூவி கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் சிட்ரோன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இந்த 7 சீட்டர் மாடலும், 2023ம் ஆண்டு விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, December 16, 2022, 23:57 [IST]
English summary
Citroen c3 cng automatic electric and seven seater variants launch details
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+