பிரான்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு... சிட்ரோன் சி3 கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா? எகிறும் எதிர்பார்ப்பு

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சிட்ரோன் சி3 கார் குறித்த முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரான்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு... சிட்ரோன் சி3 கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா? எகிறும் எதிர்பார்ப்பு!

பிரான்ஸை சேர்ந்த சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள இரண்டாவது தயாரிப்பு சி3 (Citroen C3). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிட்ரோன் நிறுவனம் சி3 காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

பிரான்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு... சிட்ரோன் சி3 கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா? எகிறும் எதிர்பார்ப்பு!

அதை தொடர்ந்து 2022ம் ஆண்டின் தொடக்கத்திலேயே சிட்ரோன் சி3 கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அது நடக்கவில்லை. இந்த சூழலில் நடப்பு 2022ம் ஆண்டின் மத்தியில் சிட்ரோன் சி3 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு... சிட்ரோன் சி3 கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா? எகிறும் எதிர்பார்ப்பு!

அனேகமாக வரும் ஜூன் மாதம் சிட்ரோன் சி3 கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்ரோன் சி3 காரின் நீளம் 3,980 மிமீ ஆகும். அதே சமயம் இந்த காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 180 மிமீ. சிட்ரோன் சி3 கார் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக சி3 காருக்கு சிட்ரோன் நிறுவனத்தால் சவாலான விலை நிர்ணயத்தை செய்ய முடியும்.

பிரான்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு... சிட்ரோன் சி3 கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா? எகிறும் எதிர்பார்ப்பு!

சிட்ரோன் சி3 காரில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 10.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது. அத்துடன் தட்டையான அடிப்பாகம் கொண்ட மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஸ்மார்ட்போன் ஹோல்டர் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

பிரான்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு... சிட்ரோன் சி3 கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா? எகிறும் எதிர்பார்ப்பு!

அதே சமயம் சிட்ரோன் சி3 கார் முழு எல்இடி லைட்டிங் வசதியை பெறவுள்ளது. எனவே அனைத்து லைட்களிலும் எல்இடி பல்புகள்தான் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் மெஷின் கட் அலாய் வீல்களையும் சிட்ரோன் சி3 கார் பெற்றிருக்கும். சிட்ரோன் சி3 காரில், ட்யூயல்-டோன் வண்ண தேர்வுகளும் வழங்கப்படும். இது காரின் அழகை இன்னும் மேம்படுத்தும்.

பிரான்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு... சிட்ரோன் சி3 கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா? எகிறும் எதிர்பார்ப்பு!

ஆனால் சிட்ரோன் சி3 காரின் தொழில்நுட்ப விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் இந்த காரில், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு... சிட்ரோன் சி3 கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா? எகிறும் எதிர்பார்ப்பு!

ஆனால் சிட்ரோன் சி3 காரில் டீசல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிகிறது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதன் காரணமாக சிட்ரோன் சி3 கார் ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்கவுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை 7 லட்ச ரூபாயாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு... சிட்ரோன் சி3 கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா? எகிறும் எதிர்பார்ப்பு!

அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாயாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதிகாரப்பூர்வ விலையானது, சிட்ரோன் சி3 கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு... சிட்ரோன் சி3 கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா? எகிறும் எதிர்பார்ப்பு!

இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்ட கார்களுடன் சிட்ரோன் சி3 கார் போட்டியிடவுள்ளது.

பிரான்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு... சிட்ரோன் சி3 கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா? எகிறும் எதிர்பார்ப்பு!

இது மிகவும் போட்டி நிறைந்த செக்மெண்ட் ஆகும். இந்தியாவில் தற்போது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே அனைத்து நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் குறைந்தபட்சம் ஒரு காரையாவது வைத்திருக்க வேண்டும் என விரும்புகின்றன. இந்த வகையில்தான் சிட்ரோன் நிறுவனமும் தனது சி3 காரை இந்த செக்மெண்ட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்கிறது.

பிரான்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு... சிட்ரோன் சி3 கார் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா? எகிறும் எதிர்பார்ப்பு!

இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பெறுவதற்கு சி3 சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சவாலான விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளதால், சிட்ரோன் சி3 கார் இந்திய வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக தென்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 28, 2022, 23:59 [IST]
English summary
Citroen c3 compact suv launch expected in india by june 2022 details here
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+