டாடா பன்ச் காரை 'பஞ்சர்' ஆக்கும் முடிவுடன் களமிறங்கிய சிட்ரோன் சி3... 2 காருக்கும் விலையில் இவ்ளோ வித்தியாசமா?

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிட்ரோன் சி3 கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா பன்ச் காரை 'பஞ்சர்' ஆக்கும் முடிவுடன் களமிறங்கிய சிட்ரோன் சி3... 2 காருக்கும் விலையில் இவ்ளோ வித்தியாசமா?

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த சிட்ரோன் சி3 கார் (Citroen C3) இன்று (ஜூலை 20) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுதான் சிட்ரோன் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் 'மாஸ் மார்க்கெட்' (Mass-market) கார் ஆகும்.

டாடா பன்ச் காரை 'பஞ்சர்' ஆக்கும் முடிவுடன் களமிறங்கிய சிட்ரோன் சி3... 2 காருக்கும் விலையில் இவ்ளோ வித்தியாசமா?

இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனம் அறிமுகம் செய்த முதல் காரான சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி (Citroen C5 Aircross SUV), மிகவும் விலை உயர்ந்த மாடல் ஆகும். ஆனால் சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தனது 2வது தயாரிப்பாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ள சி3 கார், பலராலும் வாங்க கூடிய வகையில், மிகவும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா பன்ச் காரை 'பஞ்சர்' ஆக்கும் முடிவுடன் களமிறங்கிய சிட்ரோன் சி3... 2 காருக்கும் விலையில் இவ்ளோ வித்தியாசமா?

எனவேதான் இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் முதல் 'மாஸ் மார்க்கெட்' கார் என்ற பெருமையை சி3 கார் தன்வசப்படுத்தியுள்ளது. சிட்ரோன் சி3 கார் தற்போதுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாலும், முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. சிட்ரோன் டீலர்ஷிப்கள் அல்லது அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சி3 காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

டாடா பன்ச் காரை 'பஞ்சர்' ஆக்கும் முடிவுடன் களமிறங்கிய சிட்ரோன் சி3... 2 காருக்கும் விலையில் இவ்ளோ வித்தியாசமா?

விலை குறைவான மாடல் என்றாலும், சிட்ரோன் நிறுவனம் சி3 காரில், ஏராளமான வசதிகளை வழங்கியுள்ளது. இதில், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் கூடிய 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது. இதுதவிர டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 4 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும் சிட்ரோன் சி3 காரில் உள்ளன.

டாடா பன்ச் காரை 'பஞ்சர்' ஆக்கும் முடிவுடன் களமிறங்கிய சிட்ரோன் சி3... 2 காருக்கும் விலையில் இவ்ளோ வித்தியாசமா?

சிட்ரோன் சி3 காரின் முன் மற்றும் பின் பகுதியில் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்களும் இருக்கின்றன. பாதுகாப்பை பொறுத்தவரையில், 2 ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற வசதிகள் சிட்ரோன் சி3 காரில் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் செயல்திறனை பொறுத்தவரையில், சிட்ரோன் சி3 காரில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டாடா பன்ச் காரை 'பஞ்சர்' ஆக்கும் முடிவுடன் களமிறங்கிய சிட்ரோன் சி3... 2 காருக்கும் விலையில் இவ்ளோ வித்தியாசமா?

அவை இரண்டுமே பெட்ரோல் இன்ஜின்கள்தான். இதில், 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 82 ஹெச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மற்றொரு இன்ஜின் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர், டர்போசார்ஜ்டு இன்ஜின் ஆகும்.

டாடா பன்ச் காரை 'பஞ்சர்' ஆக்கும் முடிவுடன் களமிறங்கிய சிட்ரோன் சி3... 2 காருக்கும் விலையில் இவ்ளோ வித்தியாசமா?

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 110 ஹெச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய சிட்ரோன் சி3 காரின் ஆரம்ப விலை 5.70 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 8.05 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாடா பன்ச் காரை 'பஞ்சர்' ஆக்கும் முடிவுடன் களமிறங்கிய சிட்ரோன் சி3... 2 காருக்கும் விலையில் இவ்ளோ வித்தியாசமா?

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் (Maruti Suzuki Ignis) போன்ற கார்களுடன் சிட்ரோன் சி3 போட்டியிடும். இதில், டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை 5.93 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.49 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டாடா பன்ச் காரை 'பஞ்சர்' ஆக்கும் முடிவுடன் களமிறங்கிய சிட்ரோன் சி3... 2 காருக்கும் விலையில் இவ்ளோ வித்தியாசமா?

அதாவது முக்கியமான போட்டியாளரான டாடா பன்ச் காரை காட்டிலும் குறைவான விலையில் சிட்ரோன் சி3 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் ஆரம்ப விலை 5.35 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 7.72 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

டாடா பன்ச் காரை 'பஞ்சர்' ஆக்கும் முடிவுடன் களமிறங்கிய சிட்ரோன் சி3... 2 காருக்கும் விலையில் இவ்ளோ வித்தியாசமா?

டாடா பன்ச் காரை விட விலை குறைவானதாக இருந்தாலும், மாருதி சுஸுகி இக்னிஸ் காருடன் ஒப்பிடும்போது சிட்ரோன் சி3 கார் சற்றே விலை உயர்ந்தது. அதே நேரத்தில் இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். டாடா பன்ச் மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் ஆகிய 2 கார்களிலும், மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் உள்ளது.

டாடா பன்ச் காரை 'பஞ்சர்' ஆக்கும் முடிவுடன் களமிறங்கிய சிட்ரோன் சி3... 2 காருக்கும் விலையில் இவ்ளோ வித்தியாசமா?

ஆனால் சிட்ரோன் சி3 காரில், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் தற்போதைக்கு இல்லை. எனினும் பின் நாட்களில், சிட்ரோன் சி3 காரிலும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட்டால், சிட்ரோன் சி3 இன்னும் மதிப்புமிக்க காராக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 20, 2022, 13:35 [IST]
English summary
Citroen c3 vs tata punch vs maruti suzuki ignis price comparison
மேலும்... #சிட்ரோன் #citroen
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+