ஏற்கனவே விற்பனை கொஞ்சம் சுமார் தான்!! சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் விலைகள் ஏறக்குறைய ரூ.1 லட்சம் அதிகரிப்பு!

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி காரின் விலைகள் இந்திய சந்தையில் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஏற்கனவே விற்பனை கொஞ்சம் சுமார் தான்!! சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் விலைகள் ஏறக்குறைய ரூ.1 லட்சம் அதிகரிப்பு!

பிரெஞ்சு கார் பிராண்டான சிட்ரோன் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு ஒருவழியாக இந்திய சந்தையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் களமிறங்கியது. இந்த பிராண்டில் இருந்து முதல் மாடலாக சி5 ஏர்க்ராஸ் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போதைக்கு ஒரே ஒரு சிட்ரோன் மாடலாக விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

ஏற்கனவே விற்பனை கொஞ்சம் சுமார் தான்!! சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் விலைகள் ஏறக்குறைய ரூ.1 லட்சம் அதிகரிப்பு!

ஃபீல் & ஷைன் என இந்தியாவில் மொத்தம் 2 விதமான ட்ரிம் நிலைகளில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. இவற்றின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் ரூ.31.3 லட்சங்களாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது சி5 ஏர்க்ராஸின் ஆரம்ப விலையை ரூ.93.9 ஆயிரங்கள் வரையில் உயர்த்த சிட்ரோன் திட்டமிட்டு வருகிறது.

ஏற்கனவே விற்பனை கொஞ்சம் சுமார் தான்!! சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் விலைகள் ஏறக்குறைய ரூ.1 லட்சம் அதிகரிப்பு!

இதனால் இந்த பிரெஞ்சு எஸ்யூவி மாடலின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.32 லட்சத்தை கடந்து ரூ.32,23,900ஆக நிர்ணயிக்கப்பட உள்ளது. அதுவே, ஃபீல் ட்ரிம் நிலையின் ட்யுல்-டோன் பெயிண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.93.3 ஆயிரங்கள் அதிகரிக்கப்பட்டு, ரூ.32,73,900ஆக கொண்டுவரப்பட உள்ளது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலையே ஆகும். ஷைன் ட்ரிம் ஆனது சி5 ஏர்க்ராஸ் உயர் நிலை ட்ரிம்-ஆக சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே விற்பனை கொஞ்சம் சுமார் தான்!! சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் விலைகள் ஏறக்குறைய ரூ.1 லட்சம் அதிகரிப்பு!

இதன் விலை ரூ.98.4 ஆயிரங்கள் உயர்த்தப்பட்டு, ரூ.33,78,400 நிர்ணயிக்கப்பட உள்ளது. சி5 ஏர்க்ராஸ் மாடலின் ஷைன் ட்ரிம் நிலைக்கான சிங்கிள்-டோன் & ட்யுல்-டோன் வேரியண்ட்களின் விலைகள் தற்போதைக்கு ஒரே அளவிலேயே உள்ளது. இந்த 2022ஆம் ஆண்டு முழுக்க இந்த வணிக யுக்தியை தான் சிட்ரோன் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே விற்பனை கொஞ்சம் சுமார் தான்!! சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் விலைகள் ஏறக்குறைய ரூ.1 லட்சம் அதிகரிப்பு!

தொடர்ந்து உயரும் உலோக பாகங்களின் விலைகளினால் அதிகரிக்கும் உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு சிட்ரோன் புதிய 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் கொண்டுவந்துள்ள இந்த விலை உயர்வின்படி சி5 ஏர்க்ராஸின் விலைகள் சராசரியாக 3% அதிகரிக்கப்பட உள்ளன. சி5 ஏர்க்ராஸின் வேரியண்ட்கள் ஒவ்வொன்றிற்கும் தலா இரு நிறத்தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஏற்கனவே விற்பனை கொஞ்சம் சுமார் தான்!! சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் விலைகள் ஏறக்குறைய ரூ.1 லட்சம் அதிகரிப்பு!

ஹூண்டாய் டக்ஸன், ஜீப் காம்பஸ், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மற்றும் ஸ்கோடா கோடியாக் உள்ளிட்டவற்றின் போட்டியினை இந்திய சந்தையில் எதிர்க்கொண்டுவரும் சிட்ரோன் சி5 மாடலுக்கு டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி க்ளோஸ்டர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்டவையும் மறைமுக போட்டி மாடல்களாக விளங்குகின்றன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு சி5 ஏர்க்ராஸில் 2-லிட்டர் டர்போ டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது.

ஏற்கனவே விற்பனை கொஞ்சம் சுமார் தான்!! சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் விலைகள் ஏறக்குறைய ரூ.1 லட்சம் அதிகரிப்பு!

அதிகப்பட்சமாக 175 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு கொடுக்கப்படுகிறது. என்ஜின் ஆற்றல்கள் காரின் முன் சக்கரங்களுக்கு வழங்கப்படுகின்றன. சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி கார் கிட்டத்தட்ட 18.6 கிமீ மைலேஜ் வழங்கக்கூடியது என சிட்ரோன் தெரிவிக்கிறது.

ஏற்கனவே விற்பனை கொஞ்சம் சுமார் தான்!! சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் விலைகள் ஏறக்குறைய ரூ.1 லட்சம் அதிகரிப்பு!

ஏற்கனவே கூறியதுதான், இந்திய சந்தையில் சிட்ரோன் அதன் காலடி தடத்தை வலுவாக பதிக்கும் நோக்கத்தில் முதலாவதாக சி5 ஏர்க்ராஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் அதிகப்படியான விலையினால் கடந்த ஆண்டில் சி5 ஏர்க்ராஸின் விற்பனை பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. இதனால், நம் இந்திய சந்தைக்கு ஏற்ற சற்று விலை குறைவான சி3 காம்பெக்ட் எஸ்யூவியை களமிறக்க சிட்ரோன் தயாராகி வருகிறது.

ஏற்கனவே விற்பனை கொஞ்சம் சுமார் தான்!! சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் விலைகள் ஏறக்குறைய ரூ.1 லட்சம் அதிகரிப்பு!

சிட்ரோன் சி3 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.5 லட்சங்களில் இருந்து ரூ.10 லட்சங்கள் வரையில் எதிர்பார்க்கிறோம். எஸ்யூவி போன்றதான தோற்றத்தை பெற்றுவரவுள்ளது என்றாலும், சி3 ஆனது ஹேட்ச்பேக் ரக கார் என்றே கூறப்படுகிறது. இதனால் இதற்கு பிரபலமான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்டில் இருந்து சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி கார்களான ரெனால்ட் கிகர் மற்றும் நிஸான் மேக்னைட் வரையில் விற்பனையில் போட்டியாக விளங்கலாம்.

ஏற்கனவே விற்பனை கொஞ்சம் சுமார் தான்!! சிட்ரோன் சி5 ஏர்க்ராஸின் விலைகள் ஏறக்குறைய ரூ.1 லட்சம் அதிகரிப்பு!

சிட்ரோன் சி3 காரில் மிக முக்கிய அம்சமாக, நெகிழ்வு எரிபொருள் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் மூலமாக இந்தியாவிலேயே நெகிழ்வு எரிபொருள் என்ஜினை பெற்றுவரும் முதல் மாடலாக சி3 விளங்கவுள்ளது. இதன் சோதனை ஓட்டங்கள் தற்சமயம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இதன் அறிமுகத்தை இந்த 2022ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
Citroen c5 aircross prices jan 2022 details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X