மீண்டும் சேல்ஸில் பட்டைய கிளப்பும் ஹூண்டாய் க்ரெட்டா!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா!

இந்தியாவில் கடந்த 2022 ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள், அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளுடன் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் சேல்ஸில் பட்டைய கிளப்பும் ஹூண்டாய் க்ரெட்டா!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் விரிவடைய துவங்கியதை அடுத்து, தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றை பல்வேறு அளவுகளில், பலத்தரப்பட்ட மக்கள் வாங்கும் வகையில் கொண்டுவர ஆரம்பித்தன. அதாவது முன்னர் காலங்களில் முழு-அளவு எஸ்யூவி கார்களே பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. அளவில் பெரியது என்பதால், அவற்றை பணக்காரர்கள் மட்டுமே வாங்கி பயன்படுத்தினர்.

மீண்டும் சேல்ஸில் பட்டைய கிளப்பும் ஹூண்டாய் க்ரெட்டா!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா!

ஆனால் அதன்பின் நடுத்தர-பொருளாதார மக்களும் சிறிய அளவுகளில் எஸ்யூவி கார்களை வாங்க ஆரம்பித்தினர். இதற்காக வடிவமைக்கப்பட்டவையே சப்-காம்பெக்ட் மற்றும் காம்பெக்ட் எஸ்யூவி கார்களாகும். சப்-காம்பெக்ட் எஸ்யூவி என்பது நீளத்தில் 4 மீட்டருக்கும் குறைவானவை. இதில் டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ உள்ளிட்டவை அடங்குகின்றன.

மீண்டும் சேல்ஸில் பட்டைய கிளப்பும் ஹூண்டாய் க்ரெட்டா!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா!

காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் 4 மீட்டர் அல்லது அதற்கு சற்று, சில செ.மீ-கள் அதிகமாக நீளம் கொண்டவை ஆகும். இந்த பிரிவிலும் முன்னணி பிராண்ட்களின் தயாரிப்பு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஜூன் மாத காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையில் முதலிடத்தில் வழக்கம்போல் ஹூண்டாய் க்ரெட்டா முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

மீண்டும் சேல்ஸில் பட்டைய கிளப்பும் ஹூண்டாய் க்ரெட்டா!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா!

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட க்ரெட்டா கார்களின் எண்ணிக்கை 13,790 ஆகும். அதுவே கடந்த 2021ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 9,941 க்ரெட்டா கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது க்ரெட்டா கார்களின் விற்பனை கிட்டத்தட்ட 38.72% அதிகரித்துள்ளது. மொத்த காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையில் க்ரெட்டாவின் பங்கு மட்டுமே 41.61% ஆகும்.

மீண்டும் சேல்ஸில் பட்டைய கிளப்பும் ஹூண்டாய் க்ரெட்டா!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா!

ஆனால் 2022 மே மாதத்தில் 39.18% சந்தை பங்கை மட்டுமே க்ரெட்டா கொண்டிருந்தது. கடந்த 2020 மார்ச் மாதத்தில் புதிய தலைமுறை அப்கிரேடை பெற்றிருந்த க்ரெட்டாவில் புதியதாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை நடப்பு 2022-23 நிதியாண்டிற்குள் வழங்க ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இது நடக்குமேயானால், க்ரெட்டாவின் மாத விற்பனை பழையதுபோல் மீண்டும் 15 ஆயிரத்தை கடக்கும்.

மீண்டும் சேல்ஸில் பட்டைய கிளப்பும் ஹூண்டாய் க்ரெட்டா!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா!

இந்த வரிசையில் க்ரெட்டாவிற்கு அடுத்து 2வது இடத்தில் கியா நிறுவனத்தின் காம்பெக்ட் எஸ்யூவி மாடலான செல்டோஸ் 8,388 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால் செல்டோஸின் விற்பனை 2022 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் 1.88% குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 8,549 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

மீண்டும் சேல்ஸில் பட்டைய கிளப்பும் ஹூண்டாய் க்ரெட்டா!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா!

ஹூண்டாய் க்ரெட்டாவை போல் செல்டோஸிலும் அடுத்த 2023ஆம் ஆண்டு துவக்கத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை வழங்க கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 3வது இடத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கார்பியோ கார்களின் எண்ணிக்கை 4,131 ஆகும். ஸ்கார்பியோ கார்களின் இந்த ஜூலை மாத விற்பனை எண்ணிக்கையும் கிட்டத்தட்ட இந்த அளவில்தான் பதிவாகும் என்றாலும், அடுத்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து புதிய உச்சத்தை தொடும் என்பது உறுதி.

மீண்டும் சேல்ஸில் பட்டைய கிளப்பும் ஹூண்டாய் க்ரெட்டா!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா!

ஏனெனில் மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோவின் புதிய தலைமுறை மாடலை ஸ்கார்பியோ என் என்கிற பெயரில் அட்டகாசமான தோற்றம் மற்றும் ஆற்றல்மிக்க என்ஜின் தேர்வுகளுடன் சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. இதன் முன்பதிவுகள் வருகிற ஜூலை 30இல் துவங்கப்பட உள்ளன. அதுமட்டுமின்றி, தற்போதைய ஸ்கார்பியோ மாடலும் ஸ்கார்பியோ கிளாசிக் என்கிற பெயரில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட உள்ளது.

மீண்டும் சேல்ஸில் பட்டைய கிளப்பும் ஹூண்டாய் க்ரெட்டா!! ஒரே மாதத்தில் இத்தனை கார்கள் விற்பனையா!
Rank Compact SUV Sales June-22 June-21 Growth (%) YoY
1 Hyundai Creta 13,790 9,941 38.72
2 Kia Seltos 8,388 8,549 -1.88
3 Mahindra Scorpio 4,131 4,160 -0.70
4 Skoda Kushaq 2,983 0 -
5 MG Astor 1,640 0 -
6 Volkswagen Taigun 1,327 0 -
7 Maruti S-Cross 697 1,441 -51.63
8 Nissan Kicks 184 84 119.05
9 Renault Duster 0 114 -100.00

இதற்கடுத்து 4, 5 மற்றும் 6வது இடங்களில் இந்தியாவின் சமீபத்திய காம்பெக்ட் எஸ்யூவி கார்களான ஸ்கோடா குஷாக், எம்ஜி அஸ்டர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மாடல்கள் உள்ளன. இவை மூன்றும் கடந்த 2021 ஜூன் மாதத்திற்கு பிறகு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டவை ஆகும். இவற்றின் கடந்த விற்பனை எண்ணிக்கைகள் முறையே 2,983; 1,640 மற்றும் 1,327 ஆகும். இவற்றிற்கு அடுத்து 7வது மற்றும் 8வது இடங்களில் மாருதி எஸ்-கிராஸ் மற்றும் நிஸான் கிக்ஸ் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, July 11, 2022, 10:59 [IST]
English summary
Compact suv sales may 2022
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+