குட்டி காரா இருந்தாலும் பாதுகாப்பு முக்கியமுங்க... அதுக்காக இந்த நிறுவனம் என்ன செய்யப்போறாங்க தெரியுமா?
என்ட்ரி லெவல் கார்களில் ஏடிஏஎஸ் என்ற பாதுகாப்பு அம்ச தொழிற்நுட்பத்தை கொண்டு வர காண்டினென்டல் நிறுவனம் முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன, இது குறித்து காணலாம்.
கான்டினென்டல் என்ற ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனம் தற்போது அதிக விலை கார்களில் மட்டும் இருக்கும் ஏடிஏஎஸ் என்ற தொழிற்நுட்பத்தை என்ட்ரி லெவல் கார்களிலும் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஏடிஏஎஸ் என்பது ஒரு காரின் முக்கியமான பாதுகாப்பு அம்சம் இந்த அம்சம் உள்ள கார் விபத்தில் சிக்கும் வாய்ப்புகள் ஏற்படும் போது எல்லாம் அதை தடுப்பதற்காக எச்சரிக்கை மற்றும் தானியங்கியாக சில வேலைகளை செய்யும் திறன் கொண்டது. மொத்தம் இந்த ஏடிஏஎஸ் தொழிற்நுட்பத்தில் 5 லெலவல்கள் இருக்கின்றன. இதில் ஒவ்வொரு லெவலிற்கும் ஒவ்வொரு அம்சங்கள் இருக்கின்றன.
தற்போது மார்கெட்டில் விற்பனையாகும் அதிக விலை கொண்ட கார்களில் இந்த அம்சம் இருக்கிறது. ஒவ்வொரு விலையை பொருத்தும் அதிக லெவல் ஏடிஏஎஸ் தொழிற்நுட்ப வசதிகள் இருக்கிறது. இன்று அதிகவிலை கொண்ட கார்களில் இது ஒரு முக்கியமான ஒரு அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அம்சம் என்பதால் இதை அனைத்து கார்களுக்கும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வெகு நாட்களாக இருக்கிறது.
ஆனால் இந்த தொழிற்நுட்பத்தை என்ட்ரி லெவல் கார்களில் கொண்டு வருவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இந்த அம்சத்தால் காரின் விலை அதிகமாகும் என்பதால் இது வரை இது வெறும் கோரிக்கையாக மட்டுமே இருந்து வருகிறது. இந்நிலையில் ஆட்டோமொபைல் துறைகளுக்கான தொழினுட்பங்களைத் தயாரிக்கும் கான்டினென்டல் நிறுவனத்தின், அட்டோனமஸ் மொபிலிட்டி பிரிவு தலைவர் ஜெய் தேவ் வெங்கட் ராமன் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்குப் பேட்டியளித்திருந்தார்.
அதில் அவர் " முன்பெல்லாம் வாகனங்களை மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் ஒரு வாகனமாக மட்டுமே பார்த்தனர். ஆனால் இன்று மக்களுக்கு கார்கள் ஒரு மொபைல் லிவ்விங் தளமாகவே மாறிவிட்டது. காரில் மக்கள் டிராபிக்கில் சிக்கிவிடுகின்றனர், நீண்ட தூரம் பயணிக்கின்றனர். இப்படியான நேரங்களில் மக்களுக்கு வெறும் பயணத்தையும் தாண்டி வேறு சில விஷயங்கள் தேவைப்படுகிறது.
ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அதை நோக்கி தங்கள் தயாரிப்புகளை உருவாக்கத் துவங்கிவிட்டனர். இன்று வரும் வானகங்களில் நல்ல கம்ஃபோர்ட் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இருக்கிறது. இது மட்டுமல்ல பல தொழிற்நுட்ப வசதிகளும் கார்களில் வந்துவிட்டன. இன்று கார்கள் எல்லாம் ஒரு குட்டி கம்ப்யூட்டர் போலவே செயல்படுகிறது.
இதனால் இன்று ஏடிஏஎஸ் போன்ற அட்வாட்ன்ஸ்டு தொழிற்நுட்பம் வாகனங்களுக்கு மிக முக்கிமான தேவையாகிவிட்டது. எபிஎஸ், இபிடி உடன் கூடிய ஏடிஏஎஸ் தொழிற்நுட்பம் பாதுகாப்பான பயணத்தைத் தருகிறது. ஒரு காலத்தில் ஏடிஏஎஸ் உயர் ரக கார்களில்மட்டுமே இருக்கும் ஒரு அம்சஙமாக இருந்தது. தற்போது மிடியம் விலை கொண்ட கார்களிலும் இந்த தொழிற்நுப்பம் வந்துவிட்டது.
சில கார்களில் பார்க்கிங் அசிஸ்ட், எமர்ஜென்ஸி பிரேக்கிங், அடாப்டிவ் க்ரூஸ் கண்டரோல் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. தற்போது ஏடிஏஎஸ்எப்படி உயர் ரக கார்களிலிருந்து மிடியம் விலையில் உள்ள மாஸ் மார்கெட் கார்களிலுக்கு வந்துவிட்டதோ அதே போல இந்த தொழிற்நுட்பத்தை என்ட்ரி லெவல் கார்களுக்கும் வழங்கும் முயற்சியைச் செய்து வருகிறோம். இதற்காக ஆய்வுகள் நடந்து வருகிறது " எனக் கூறினார்.
இதன்படி விரைவில் என்ட்ரி-லெவல் கார்களுக்கும் இந்த ஏடிஏஎஸ் தொழிற்நுட்பம் சாத்தியமாகும் என எதிர்பார்க்கலாம். மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகமும் சமீபகாலமாக கார்களின் பாதுகாப்பு குறித்து அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. பாதுகாப்பான கார்களை தயாரிக்கப் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications








