கால்வாயில் தவறி விழுந்த கணவன்-மனைவி... பதைபதைக்க வைக்கும் வீடியோ! இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க என்ன செய்யலாம்?

ஸ்கூட்டரில் வந்த கணவன், மனைவி எதிர்பாராத விதமாக கால்வாயில் தவறி விழும் வீடியோ காட்சி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

கால்வாயில் தவறி விழுந்த கணவன், மனைவி... பதைபதைக்க வீடியோ! இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க என்ன செய்யலாம்?

கோடை வெயில் தணிந்த நிலையில் நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்போது மழை வெளுத்து வாங்க தொடங்கியிருக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக நேற்றைய தினம் (ஜூன் 19) இரவு பெய்த மழையால் தலைநகர் சென்னையே முடங்கும் நிலை உருவாகியது.

கால்வாயில் தவறி விழுந்த கணவன், மனைவி... பதைபதைக்க வீடியோ! இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க என்ன செய்யலாம்?

முக்கியமாக விமான போக்குவரத்து சென்னையில் நேற்றிரவு கடுமையாகப் பாதிப்பைச் சந்தித்தது. கடும் மோசமான வானிலையால் வெளிநாடுகளில் இருந்து வந்த விமானங்கள் சில பெங்களூரு, ஹைதரபாத் என நாட்டின் பிற நகர விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. இதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய பன்னாட்டு விமானங்கள் சில சற்று கால தாமதாகப் புறப்பட்டன.

கால்வாயில் தவறி விழுந்த கணவன், மனைவி... பதைபதைக்க வீடியோ! இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க என்ன செய்யலாம்?

இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையிலேயே நேற்றைய தினம் சென்னை சிக்கியது. இதேபோல் இந்தியாவின் பிற நகர பகுதிகளும் கடந்த சில தினங்களாக கடும் மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சமீபத்திய கடும் உபி மாநிலத்தின் அலிகர்ஹ் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

கால்வாயில் தவறி விழுந்த கணவன், மனைவி... பதைபதைக்க வீடியோ! இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க என்ன செய்யலாம்?

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பெய்த மழை இந்த நகரத்தை புரட்டி போட்டுவிட்டது என்றே கூறலாம். இதனால் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து காணப்பட்டது. இந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு சென்ற காவலர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் திறந்துகிடந்த சாலையோர பள்ளத்தில் வாகனத்துடன் விழுந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

கால்வாயில் தவறி விழுந்த கணவன், மனைவி... பதைபதைக்க வீடியோ! இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க என்ன செய்யலாம்?

இந்த மோசமான சம்பவம்குறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் லேசான காயங்களுடன் தப்பித்திருக்கின்றனர். சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு இருவரையும் மீட்டதனால் பெரியளவில் பாதிப்புகள் இன்றி அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியிருக்கின்றனர்.

கால்வாயில் தவறி விழுந்த கணவன், மனைவி... பதைபதைக்க வீடியோ! இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க என்ன செய்யலாம்?

சம்பவ தினத்தன்று உடல்நல குறைவு காரணமாக இருவரும் மருத்துவமனை வந்ததாக காவலர் தெரிவித்திருக்கின்றார். அப்போதே சாலையோரத்தில் திறந்துகிடந்த கால்வாயில் எதிர்பாராதவிதமாக வாகனத்துடன் சரிந்து விழுந்து விபத்து சந்தித்திருக்கின்றனர்.

கால்வாயில் தவறி விழுந்த கணவன், மனைவி... பதைபதைக்க வீடியோ! இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க என்ன செய்யலாம்?

தலைநகர் சென்னையைப் போலவே சிறு மழையையும் தாங்காத ஓர் நகரமே அலிகர்ஹ். எப்போது மழை பெய்தாலும் அந்த நகரத்தில் மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு விடும். இந்த மாதிரியான சூழலில் அடுத்த 2-3 தினங்களுக்கு வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மழை காலத்தை எப்படி சமாளிப்பது?

இந்த மாதிரியான சூழலில் வாகனங்களில் வெளியில் செல்வதை தவிர்ப்பதே மிகவும் சிறந்தது. குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் பயணிப்பதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். இருசக்கர வாகன பயணம் பேராபபத்தை ஏற்படுத்தலாம். இதற்கு உதாரணமே உபியின் அலிகர்ஹ் நகரத்தில் அரங்கேறியிருக்கம் இந்த சம்பவம்.

சாலையில் எங்கு பள்ளம் இருக்கின்றது என்பதே தெரியாத அளவிற்கு மழை நீர் சூழ்நிதிருக்கும். எனவேதான் இந்த மாதிரியான சூழ்நிலையில் வாகனங்களில் வெளியில் புறப்படுவதை தவிர்க்குமாறு சமூகநல ஆர்வலர்கள் கன மழையின்போது வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர்.

கால்வாயில் தவறி விழுந்த கணவன், மனைவி... பதைபதைக்க வீடியோ! இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க என்ன செய்யலாம்?

அவசர காரணமாக இதுமாதிரியான நேரங்களில் வெளியில் செல்கின்றீர்கள் என்றால். சில விஷயங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக, காற்றாற்று வெள்ளத்தின்போது தரை ஆற்று பாளத்தைக் கடப்பதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இதேபோல், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாலை தெரியும் அளவிற்கு நீர் இருந்தால் மட்டும் அதை பயன்படுத்தி பயணிக்கலாம்.

கால்வாயில் தவறி விழுந்த கணவன், மனைவி... பதைபதைக்க வீடியோ! இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க என்ன செய்யலாம்?

தடுப்புகள் அல்லது மரக்கிளைகள் நடு ரோட்டில் நிலை நிறுத்தப்பட்டிருந்தால் அந்த பகுதியை அதிக கவனத்துடன் கடப்பது நல்லது. முடிந்தளவு அந்த பாதையையே தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது. அதேநேரத்தில், அதிக மழை நீர் நிறைந்த சாலையில் பயணிப்பதனால் தேவையற்ற எந்திர கோளாறுகளும் ஏற்படும். எஞ்ஜினில் தண்ணீர் புகுதல் போன்ற அதிக செலவை வழங்கக் கூடிய பாதிப்புகள் ஏற்படும். ஆகையால், மழைக் காலங்களில் தேவையற்ற பயணங்களே மிக மிக சிறந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, June 20, 2022, 19:51 [IST]
English summary
Cop and his wife falls down in a ditch with scooter amid heavy waterlogging
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+