பிரபல விளையாட்டு வீரரின் காருக்கு அபராதம் போட்ட போலீஸ்! மனுஷனுக்கு செம்ம தில்லு... முக்கியமான ஒன்னே இல்லையாம்!
பிரபல விளையாட்டு வீரர் விவான் கபூரின் சூப்பர் காருக்குக் காவல்துறையினர் செல்லாண் வழங்கியிருக்கின்றனர். காருக்குத் தேவையான மிக முக்கியமான ஒன்று இல்லாததன் காரணத்தினாலேயே அபராதம் வழங்கியிருப்பதாகக் காவல்துறை காரணம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம், வாங்க.

வளர்ந்து வரும் ட்ராப் ஷூட்டிங் விளையாட்டு வீரராக இருக்கிறார் விவான் கபூர். 2021 ஆகஸ்ட் மாதம் பெரு-வில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் (International Shooting Sport Federation), 'ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்' பிரிவில் பங்கேற்ற அவர், மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வெண்கலப் பதக்கத்தை இந்தியாவிற்கு வென்று கொடுத்தார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து நாடு திரும்பிய அவர் சில தினங்களிலேயே லம்போர்கினி ஹூராகேன் எல்பி 610-4 (Lamborghini Huracan LP610-4) சூப்பர் கார் மாடலை வாங்கினார். பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் யூஸ்டு கார் விற்பனையாளரிடத்தில் இருந்தே இச்-சூப்பர் காரை அவர் வாங்கியிருக்கின்றார். அவர் வாங்கிய-போது அக்கார் டெல்லி பதிவெண்ணுடன் காட்சியளித்தது.

இந்த நிலையிலேயே விவான் கபூரின் இச்சூப்பர் காருக்கு காவல்துறையினர் அபராத செல்லாண் வழங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விவான் பயன்படுத்திய சூப்பர் காரில் பதிவெண் இல்லாத காரணத்திற்காக செல்லாண் வழங்கியிருப்பதாக போலீஸார் காரணம் தெரிவித்திருக்கின்றனர்.

சூப்பர் காரின் பின் பக்கத்தில் மட்டுமே பதிவெண் இருந்ததாகவும், முன் பக்கத்தில் அது இல்லை என்று காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். போலீஸாரின் அபராத செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவாபன் கபூர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றார். இதனால் சில நிமிடங்கள் அந்த பகுதியில் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

"இது ஒரு இறக்குமதி செய்யப்பட்ட கார் என்றும், முன் பக்கத்தில் பதிவெண்ணை பொருத்துவதற்கான வாய்ப்பு (இடம்) இல்லை என்றும்" அவர் காரணம் கூறியிருக்கின்றார். இருப்பினும் காவல்துறையினர் அவரது பேச்சுக்கு செவி சாய்க்காமல் ரூ. 5 ஆயிரத்திற்கான அபராத செல்லாணை வழங்கியிருக்கின்றனர்.

இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி ஒவ்வொரு வாகனும் முன் மற்றும் பின் பக்கத்தில் பதிவெண்ணைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும். தனி நபர் பயன்பாட்டு வாகனம் எனில் வெள்ளை நிற பின் புலத்துடன் கூடிய பிளேட்டில் கருப்பு நிற எழுத்து மற்றும் எண்கள் கொண்டிருக்க வேண்டும். அதுவே, பொது பயன்பாட்டு (வணிக) வாகனமாக இருந்தால் மஞ்சள் நிற பின்புலம் இருக்க வேண்டும் என்பது விதியாகும்.

இதேபோல், வாடகை வாகனம் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் என ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு விதமான நிறங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை மீறும் வாகனங்கள் மீதும், வாகன ஓட்டிகள் மீதும் காவல்துறையினர் அபராதம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே முன் பக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாத காரணத்திற்காக விவான் கபூரின் சொகுசு சூப்பர் காரை நிறுத்தி, அதற்கு அதிகபட்ச அபராதத்தை காவலர்கள் வழங்கியிருக்கின்றனர்.

இதற்கு முன்பாகவும் விவான் கபூர் இதே காரணத்திற்காக நிறுத்தப்பட்டதாகவும், அப்போது அவருக்கு அபராதம் எதுவும் விதிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. ஆகையால், விவான் கபூர் இந்த விவகாரத்தில் சற்றே முன்னெச்சரிக்கையுடன் இருந்திருக்கலாம், அப்படி இருந்திருந்தால் தற்போது ரூ. 5 ஆயிரத்தை வீணாக இழந்திருக்க நேரிட்டிருக்காது. சம்பவ இடத்திலேயே விவான் அபராதத்தை வழங்கியதாகக் கூறப்படுகின்றது.

விவான் கபூர் பயன்டுத்தி வரும் லம்போர்கினி ஹூராகேன் எல்பி 610-4 சூப்பர் காரானது அனைத்து வீல் இயக்கம் கொண்ட கூபே ரக பதிப்பாகும். இச்சூப்பர் காரில் 5.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேடட் வி10 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 610 பிஎஸ் பவரையும், 560 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டது.

7 ஸ்பீடு ட்யூவல் கிள்ட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இந்த எஞ்ஜின் இயங்கும். இக்காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ. 3.7 கோடி ஆகும். இதன் பெங்களூரு ஆன்-ரோடு விலை ரூ. 4.8 கோடிகள் ஆகும். இத்தகைய அதிகபட்ச விலைக் கொண்டதாகவே ஹூராகேன் எல்பி 610-4 சூப்பர் கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.


Click it and Unblock the Notifications








