இனி இந்த வாகனங்களை வாங்கினால் தான் மவுசு.. 2030க்குள் சாலையில் பாதிக்கு பாதி இந்த வாகனங்கள் தான் ஓடுமாம்
2030ம் ஆண்டு உலகின் சாலைகளில் பாதிக்குப் பாதி எலெக்ட்ரிக் கார்கள் தான் ஓடும் என ஆய்வு ஒன்று சொல்கிறது. அந்த ஆய்வு குறித்த தகவல்களைத் தான் இங்கே கீழே காணப்போகிறோம்.

இந்தியாவில் தினமும் லட்சணக்காண வாகனங்கள் சாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இந்தியாவில் பெரும்பாலான வாகனங்கள் டீசல் அல்லது பெட்ரோலை எரிபொருளாகப் பயன்படுத்திப் பயணிக்கும் வாகனங்கள் தான்.சமீப காலமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்லவரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுவதில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனையும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. தற்போது மொத்தமாக விற்பனையாகும் வாகனங்களில் எலெக்டரிக் வாகனங்களின் விற்பனை 10 சதவீதத்தைத் தாண்டாவிட்டாலும் அதன் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த கவுண்டர்பாயிண்ட் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் எதிர்காலத்தில் உலகில் உள்ள சாலைகளில் எந்த விதமான வாகனங்கள் அதிகமாக இருக்கும் மக்களின் மன நிலை என்ன என ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் முடிவில் வரும் 2030 ஆண்டு சாலைகளில் ஓடும் வாகனங்களில் இரண்டில் ஒரு வாகனம் எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

அதாவது தற்போது எலெக்டரிக் வாகனங்கள் மூன்று விதமான தயாரிக்கப்படுகிறது. ஒன்று முழுவதுமான எலெக்ட்ரிக் வாகனங்கள், ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனம், பிளக் இன் ஹைபிரிட் எலெக்ட்ரிக் வாகனம் இந்த மூன்று வாகனங்களின் விற்பனை அடுத்தடுத்த ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிக்கும். இதன் தாக்கம் சாலைகளில் எந்த வகையிலும் எலெக்ட்ரிக் இல்லாத எத்தனை வாகனம் செல்கிறதோ அதே அளவிற்கு எதாவது வகையில் எலெக்ட்ரிக் பொருத்தப்பட்ட வாகனங்களும் இயங்கும் எனச் சொல்கிறது.

தற்போது எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் உலகின் முன்னோடியாக இருப்பது சீனா தான். அங்கு தான் உலகிலேயே அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன. இந்தாண்டு இறுதிக்குள் சீனாவில் இந்தாண்டு மட்டும் 60 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது இடத்தில் ஐரோப்பா மற்றும் மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இருக்கிறது.

இந்நிலையில் உலகில் இந்தியா, வியட்நாம், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் எலெக்டரிக் வாகன விற்பனை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. ஸ்கூட்டர் மார்கெட்டில் கிட்டத்தட்ட 10 சதவீத மார்கெட்டை எலெக்ட்ரிக் வாகனங்கள் பிடித்துவிட்டது என்றே சொல்லலாம். தற்போது இந்தியாவைப் பொருத்தவரை ஹீரோ எலெக்ட்ரிக் தான் விற்பனை எண்ணிக்கையில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

ஐரோப்பாவைப் பொருத்தவரை காற்று மாசுவை கட்டுப்படுத்த எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது. அந்நாட்டு அரசு வரும் 2025ம் ஆண்டுக்குள் காற்று மாசின் அளவு 2021ம் ஆண்டை விட 15 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும். 2030 ஆண்டு 2021ம் ஆண்டை விட 37.5 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதை ஈட்ட எலெக்ட்ரிக் வாகன விற்பனையை அதிகரித்து வருகிறது. தற்போது உலகின் இரண்டாவதாக அதிகமாக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் நாடாக இது உள்ளது.

அதே போல அமெரிக்காவில் கடந்த 2021ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகன விற்பனை 100 சதவீதம் அதிகரித்துள்ளது.அதாவது அதற்கு முந்தைய ஆண்டு எவ்வளவு வாகனங்கள் விற்பனையானதோ அதை விட இரண்டு மடங்கு அதிகம் விற்பனையாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு 2030 ஆண்டு அமெரிக்காவில் விற்பனையாகும் ஒட்டு மொத்த வாகனங்களில் பாதி அதாவது 50 சதவீதம் எலெக்ரிக் வாகனமாக இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். தற்போது உலகில் 3வது மிகப்பெரிய எலெக்ட்ரிக் வாகனச் சந்தையாக அமெரிக்கா உள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஓடும் 30 சதவீதமான வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என்ற இலக்குடன் எலெக்டரிக் வாகன விற்பனையை அதிகரிக்க அரசுத் திட்டங்களை வகுத்து வருகிறது. இந்தியாவைப் பொருத்தவரை டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய இந்திய நிறுவனங்களும், எம்ஜிமோட்டார், ஹூண்டாய் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் தற்போது எலெக்ட்ரிக் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

உலகளவில் எலெக்டரிக் வாகன மார்கெட்டிற்கு பெரும் எதிர்காலம் இருப்பதாகப் பலர் பேசி வருகின்றனர். தற்போது பல புதிய நிறுவனங்கள் கூட எலெக்டரிக் வாகன தயாரிப்பில் கால் தடம் பதிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களான ஃபாக்ஸ்கான், மற்றும் சியோமி ஆகிய நிறுவனங்கள் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சோனி நிறுவனம் ஹோண்டா நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலை எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகளை உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








