தந்தைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பிரபல கிரிக்கெட் வீரர்... காரோட விலைய கேட்டீங்க மெர்சலாயிடுவீங்க!

பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரை அவரது தந்தைக்கு பரிசாக வழங்கியிருக்கின்றார். பரிசு வழங்கியதுகுறித்த புகைப்படத்தை அவர் பகிர்ந்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

தந்தைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பிரபல கிரிக்கெட் வீரர்... காரோட விலைய கேட்டீங்க மெர்சலாயிடுவீங்க!

சமீபத்தில் கியா சொனெட் காரை வாங்கிய நாஞ்சில் விஜயன், அவருடைய கடந்த கால அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். வாழ்க்கைக்கான தேடுதல் பயணத்தை தொடங்கிய அவர் முதலில் சென்னை வரும்போது கழிவறையின் அருகிலேயே அமர்ந்து வந்ததாக தனது கடந்த காலத்தைப் பற்றி கூறி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தினார்.

தந்தைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பிரபல கிரிக்கெட் வீரர்... காரோட விலைய கேட்டீங்க மெர்சலாயிடுவீங்க!

இந்த மாதிரியான வருமையான சூழலையே பல பிரபலங்கள் கடந்து வந்திருக்கின்றனர். அதாவது, கடந்த காலங்களில் கொடுமையான வருமையில் இருந்தே தற்போது ஆடம்பர வாழ்க்கைக்குள் சில பிரபலங்கள் நுழைந்திருக்கின்றனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் புதிய தகவல் வெளியாகியிருக்கின்றது.

தந்தைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பிரபல கிரிக்கெட் வீரர்... காரோட விலைய கேட்டீங்க மெர்சலாயிடுவீங்க!

பிரபல கிரிக்கெட் வீரரான பிரித்வி ஷா தனது தந்தைக்கு விலையுயர்ந்த சொகுசு காரை பரிசாக வழங்கியிருக்கின்றார். பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் (BMW 6-Series) சொகுசு காரையே பரிசாக வழங்கியிருக்கின்றார். இதுகுறித்த தகவலை அவர் சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக அவர் பகிர்ந்திருக்கின்றார்.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

தந்தைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பிரபல கிரிக்கெட் வீரர்... காரோட விலைய கேட்டீங்க மெர்சலாயிடுவீங்க!

இந்த தகவலுடன் சேர்த்து தங்களின் கடந்த கால வாழ்க்கை வெளிப்படுத்தக் கூடிய ஓர் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கின்றார். தனது தந்தையும், தானும் இருசக்கர வாகனத்தில் பயணிப்பது போன்ற ஓர் படத்தையே அவர் பகிர்ந்துள்ளார். அவர்கள் பன்படுத்தியது யமஹா லிபரோ மோட்டார்சைக்கிள் ஆகும்.

தந்தைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பிரபல கிரிக்கெட் வீரர்... காரோட விலைய கேட்டீங்க மெர்சலாயிடுவீங்க!

இந்த படமே கிரிக்கெட் வீரர் பிரித்வி அவரது சிறு வயது பருவத்தில் நடுத்தர மக்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்ததைத் தெரியப்படுத்துகின்றது. இந்த வாழ்க்கையில் இருந்தே தற்போது பிரித்வி ஷா பிஎம்டபிள்யூ சொகுசு காரை பயன்படுத்துமளவிற்கு உயரிய சொகுசு வாழ்க்கைக்கு மாறியிருக்கின்றார். தனது கடின முயற்சியால் அவர் இந்த இடத்தை அடைந்திருக்கின்றார்.

தந்தைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பிரபல கிரிக்கெட் வீரர்... காரோட விலைய கேட்டீங்க மெர்சலாயிடுவீங்க!

தனது 14 வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று செய்தித் தாள்களின் தலையங்கமாக மாறியவரே பிரித்வி ஷா. இவர் 330 பால்களில் 546 ரன்களை குவித்திருக்கின்றார். இவரின் அதிரடி ஆட்டத்திற்கு இந்தியாவில் பல ரசிகர்கள் ஏராளம்.

தந்தைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பிரபல கிரிக்கெட் வீரர்... காரோட விலைய கேட்டீங்க மெர்சலாயிடுவீங்க!

பிரித்வி ஷா வாங்கியிருப்பது பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் செடான் ரக கார் மாடலாகும். இந்த ஜிடி வேரியண்டை அவர் வாங்கியிருக்கின்றார். இக்கார் ரூ. 70 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நவீன காலவாதிகளுக்கு உகந்த வாகனமாக இக்காரை பிஎம்டபிள்யூ உருவாக்கியிருக்கின்றது.

தந்தைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பிரபல கிரிக்கெட் வீரர்... காரோட விலைய கேட்டீங்க மெர்சலாயிடுவீங்க!

கவர்ச்சிகரமான தோற்றம், இதனை பல மடங்கு அழகான மாற்றும் வகையில் அழகிய மற்றும் ஸ்டைலான எல்இடி டிஆர்எல்கள் உள்ளிட்டவை 6 சீரிஸ் சொகுசு காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. காரின் உட்பகதியும் அதிக கவர்ச்சியானதாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக, தொழில்நுட்ப வசதிகள் இக்காரில் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன.

தந்தைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பிரபல கிரிக்கெட் வீரர்... காரோட விலைய கேட்டீங்க மெர்சலாயிடுவீங்க!

புதிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி பார்க்கிங், ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் முன் பக்க இருக்கைகள், ஹெட்ரெஸ்ட்டுகள், 360 டிகிரி பார்க்கிங் கேமிரா மற்றும் பெரிய பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் சொகுசு காரில் வழங்கப்பட்டுள்ளன.

தந்தைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பிரபல கிரிக்கெட் வீரர்... காரோட விலைய கேட்டீங்க மெர்சலாயிடுவீங்க!

இந்த கார் பன்முக எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஜிடி வெர்ஷனில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 258 பிஎஸ் மற்றும் 480 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 2.0 லிட்டர் டீசல் மோட்டார் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

தந்தைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பிரபல கிரிக்கெட் வீரர்... காரோட விலைய கேட்டீங்க மெர்சலாயிடுவீங்க!

இந்த மோட்டார் 190 பிஎஸ் மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதைவிட அதிக பவர்ஃபுல்லான எஞ்ஜின் தேர்வையும் இக்காரில் பிஎம்டபிள்யூ வழங்குகின்றது.3.0 லிட்டர் 6 சிலிண்டர் டீசல் மோட்டார் தேர்வே அதுவாகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 265 பிஎஸ் மற்றும் 620 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

தந்தைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பிரபல கிரிக்கெட் வீரர்... காரோட விலைய கேட்டீங்க மெர்சலாயிடுவீங்க!

இந்த அனைத்து மோட்டார்களிலும் 8 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படுகின்றது. இதுமாதிரியான சிறப்பு வசதிகள் கொண்ட பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் சொகுசு காரையே தனது தந்தைக்கு கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா பரிசாக வழங்கி அவரை மகிழ்வித்திருக்கின்றார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 17, 2022, 8:30 [IST]
English summary
Cricketer prithvi shaw gifts bmw 6 series luxury car to dad
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+