கடிலாக் எஸ்கலேட் காரை பரிசாக பெற்ற ரொனால்டோ... என்ன இந்த காரை பரிசா கொடுத்திருக்காங்களா!!
கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு விலையுயர்ந்த சொகுசு காரை பரிசாக வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ இருக்கின்றார். உலக அளவில் உள்ள மிகவும் பிரலமான விளையாட்டு வீரர்களிலும் இவரே முதலிடம். ஆகையால், இவருக்குச் சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்கள் அதிகம். சுமார் 40.1 கோடி பேர்வரை இவரை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மிகவும் ஃபேமஸான ஓர் நபராகவே ரொனால்டோ காட்சியளிக்கின்றார்.

இவருக்கே ஓர் நபர் விலையுயர்ந்த சொகுசு காரைப் பரிசாக வழங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடிலாக் எஸ்கலேட் காரே பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது. இதனை அவரது துணைவியார் ஜார்ஜினா ரோட்ரிகஸே வழங்கியிருக்கின்றார். கிறிஸ்டியானோ ஓர் மிகப் பெரிய கார் ஆர்வலர் ஆவார்.

இவரிடத்தில் எண்ணற்ற விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் உள்ளன. கால்பந்தாட்டத்தில் மட்டுமின்றி வாகனங்கள் மீதும் அதிகம் ஆர்வம் கொண்டவராகக் காட்சியளிக்கின்றார். இந்த நிலையிலேயே ஏற்கனவே அதிக எண்ணிக்கையில் உள்ள இவரது கார் நிறுத்துமிடத்தை கூடுதலாக அலங்கரிக்கும் வகையில் கடிலாக் எஸ்கலேட் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது.

ரொனால்டோவின் 37 வது பிறந்த நாளை முன்னிட்டே ஜார்ஜினா ரோட்ரிகஸ் காரை பரிசாக வழங்கியிருக்கின்றார். கார் பரிசளிப்பு குறித்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவேற்றம் செய்திருக்கின்றார். பிரமாண்ட தோற்றம் கொண்ட கடிலாக் எஸ்கலேட் சொகுசு கார் 1 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைச் செய்யப்படுகின்றது.

இது இந்திய ரூபாய் மதிப்பில் 75 லட்சம் ஆகும். வரிகள் எதுவும் சேர்க்கப்படாத விலை விபரம் இதுவாகும். இந்த கார் ஐரோப்பிய சந்தைகளில் நேரடியாக விற்பனைக்குக் கிடைக்கவில்லை. ஆகையால், இதனை பிரத்யேகமாக இறக்குமதி செய்து அவர் பரிசளித்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடிலாக் எஸ்கலேட் சொகுசு காரின் பிரமாண்ட தோற்றத்திற்கு ஏற்ப அது 5.5 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், பிற எஸ்யூவி கார்களைக் காட்டிலும் மிகவும் பெரிய காராக இது காட்சியளிக்கின்றது. உருவத்தில் மட்டுமல்ல இட வசதியிலும் பிரமாண்டமானதாகக் காட்சியளிக்கின்றது. ஆகையால், பெரிய குடும்பங்கள் மற்றும் அதிக இட வசதியை விரும்புவோர்களுக்கு ஏற்றக் காராக இது காட்சியளிக்கின்றது.

இந்த காரில் 6.2 லிட்டர் சூப்பர் சார்ஜட் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 414 பிஎச்பி பவரை வெளியேறே்றும் திறன் கொண்டது. இதுமட்டுமின்றி, வெறும் 5.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை இக்கார் எட்டிவிடும். 10 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் இக்காரில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 4X4 அம்சமும் ஸ்டாண்டர்டு அம்சமாக கடில்லாக் எஸ்கலேடில் வழங்கப்படுகின்றது.

கடிலாக் எஸ்கலேட் ஓர் எட்டு இருக்கைகள் கொண்ட சொகுசு காராகும். ரொனால்டோ அவரது குடும்பத்துடன் வெளியில் சென்று வர இந்த கார் ஏதுவானதாக இருக்கும். அவ்வாறு அவர்கள் பயணிக்கும்போது மிகுந்த அலாதியான பயண அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கேற்ப பல்வேறு லக்சூரி மற்றும் சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை அக்கார் தாங்கியிருக்கின்றது.
லெதர் இருக்கை, மல்டி மீடியா திரை, ஒய்-ஃபை ஹாட்ஸ்பாட், 19 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர, அதிக பாதுகாப்பான பயணத்தை வழங்கும் வகையில் லேன் டிபார்ச்சர் வார்னிங், தானியங்கி பிரேக், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு அம்சங்கள் கடில்லாக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








